For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

By Super
|

ஒரு பெண் முழுமை பெறுவது தாயானப் பின் தான். உங்களுக்குள் ஒரு உயிர் வாழும் போது அதில் கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் கர்ப்பக்காலம் மிகவும் சந்தோஷமாகவும் மறக்க முடியாதவையாகவும் இருக்கும்.

தாய்மை என்ற ஒரு உயர்ந்த அந்தஸ்தை தரும் தன் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு தாயும் எண்ணுவார்கள். மேலும் பிறக்க போகும் தன் குழந்தை சிறந்த குழந்தையாக விளங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும் அல்லவா? அப்படியானால் குழந்தை கருவில் இருக்கும் போதே அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் சிறிய தவறு கூட, கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். எனவே பிறக்க போகும் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு பிறக்க சில சிறந்த 20 வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சந்தோஷமாக இருங்கள்

சந்தோஷமாக இருங்கள்

குழந்தையின் சந்தோஷம், தாயின் சந்தோஷத்தோடு நேரடி தொடர்பில் உள்ளது. அதனால் எப்பொழுதும் தாயானவள் சந்தோஷமாக இருந்தால், கருவில் இருக்கும் குழந்தை வளத்தோடு இருக்கும்.

மன அழுத்தத்தை தவிர்க்கவும்

மன அழுத்தத்தை தவிர்க்கவும்

மன அழுத்தம் குழந்தைக்கு நல்லதல்ல. தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட்டால், கருவில் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கும். அதனால் நன்றாக ஓய்வெடுத்து மன அழுத்தம் தரும் விஷயங்களிடம் இருந்து தள்ளி இருக்கவும்.

சத்துள்ள உணவை உட்கொள்ளவும்

சத்துள்ள உணவை உட்கொள்ளவும்

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து சத்துள்ள உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

சரிவிகித உணவை உட்கொள்ளவும்

சரிவிகித உணவை உட்கொள்ளவும்

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.

அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்

அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்

தண்ணீர் முக்கியமான மற்றொரு ஊட்டச்சத்து. அதனுடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்து நீர்ச்சத்தோடு இருக்கவும்.

பரிந்துரைக்காத மருந்துகளை தவிர்க்கவும்

பரிந்துரைக்காத மருந்துகளை தவிர்க்கவும்

கர்ப்ப காலத்தில் பல மருந்துகள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் நீங்களாகவே எந்த மருந்தையும் சாப்பிடக்கூடாது. எப்போதும் ஒரு மருந்தை உட்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். அது ஒரு சாதாரண வலி நிவாரணியாக இருந்தாலும் கூட.

நடைப்பயிற்சி அவசியம்

நடைப்பயிற்சி அவசியம்

நடை போன்ற மெல்லிய உடற்பயிற்சி, குழந்தைக்கு நன்மையை விளைவிக்கும். ஆனால் உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

புகைப்பிடிக்கக் கூடாது

புகைப்பிடிக்கக் கூடாது

குழந்தையின் நன்மைக்காக, எந்த ஒரு தருணத்திலும் புகைப்பிடிக்கக் கூடாது.

மது அருந்தக் கூடாது

மது அருந்தக் கூடாது

மது அருந்துவதையும் நிறுத்த வேண்டும். அது சாதாரண சம்பெயின் அல்லது ஒயினாக இருந்தாலும் கூட, குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் எந்த ஒரு மது வகையையும் பருகக்கூடாது.

காஃப்பைன் உட்கொள்ளும் அளவில் கவனம் தேவை

காஃப்பைன் உட்கொள்ளும் அளவில் கவனம் தேவை

அதிக அளவு காஃப்பைன் உட்கொள்வதால், குழந்தைக்கு பிரச்சனை ஏற்படும். அதனால் கர்ப்பக் காலத்தில் அதிக அளவு காபி குடிக்க வேண்டாம்.

குழந்தையுடன் பந்தத்தை ஏற்படுத்தவும்

குழந்தையுடன் பந்தத்தை ஏற்படுத்தவும்

கருவில் இருக்கும் குழந்தையுடன் பேசுவது, தாலாட்டு பாடுவது போன்றவற்றை செய்வது குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.

மிதமான வெயிலில் செல்லவும்

மிதமான வெயிலில் செல்லவும்

சிறிதளவு வெயிலில் காலையும், மாலையும் சென்றால் தேவையான அளவு வைட்டமின் டி கிடைக்கும். அதனால் தேவையான அளவு கால்சியம் கிடைக்கும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு, முக்கியமாக எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

போதிய இடைவெளியில் மருத்துவரை அணுகவும்

போதிய இடைவெளியில் மருத்துவரை அணுகவும்

மருத்துவரை சந்திப்பதை நிறுத்தக்கூடாது. சீரான இடைவெளியில் மருத்துவரை சந்தித்து, குழந்தையின் ஆரோக்கியத்தை சோதித்து பார்ப்பது மிகவும் முக்கியம்.

சரியான நிலையில் தூங்கவும்

சரியான நிலையில் தூங்கவும்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு பக்கமாக ஒருசாய்ந்து படுப்பதே நல்லது. குப்பறப் படுத்தால், அது குழந்தையை காயப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மேலும் குழந்தைக்கு அது அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே மகப்பேறு காலத்தில் பயன்படுத்தும் தலையணையை வாங்கி, ஒழுங்கான நிலையில் தூங்குங்கள்.

உண்ணும் முன் பொருளில் ஒட்டியிருக்கும் லேபிளை கவனமாக படிக்கவும்

உண்ணும் முன் பொருளில் ஒட்டியிருக்கும் லேபிளை கவனமாக படிக்கவும்

சந்தையில் உள்ள பல பொருட்களை கர்ப்ப காலத்தில் பெண்கள் பயன்படுத்தக் கூடாது. மேலும் எந்த ஒரு பொருட்களை சாப்பிடும் முன்னும், அதில் ஒட்டியிருக்கும் லேபிளை கவனமாக படித்து வாங்கி சாப்பிட வேண்டும்.

சுத்தமாக இருக்கவும்

சுத்தமாக இருக்கவும்

சுத்தமாக இருந்தால், நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கலாம். தாயானவள் ஆரோக்கியத்தோடு இருந்தால், குழந்தையும் நல்ல உடல் நலத்தோடு இருக்கும். அதுவே தாய் நோய்வாய்ப்பட்டால், அது குழந்தையையும் பாதித்துவிடும். சில சமயங்களில் ஆபத்தை கூட விளைவிக்கும். அதனால் கர்ப்பிணிகள் உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

பச்சை காய்கறிகளை சாப்பிடவும்

பச்சை காய்கறிகளை சாப்பிடவும்

குழந்தையின் உடல் நலத்திற்கு ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமான ஒன்று. ஊட்டச்சத்து உள்ள அனைத்து உணவுகளையும் உண்டாலும், அதிக அளவில் பச்சை காய்கறிகளையும் உண்ண வேண்டும். அது போதிய அளவு இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத்தை உடம்பில் சேர்க்கும்.

கடின வேலையில் ஈடுபடக்கூடாது

கடின வேலையில் ஈடுபடக்கூடாது

பலமான பொருட்களை தூக்கவோ அல்லது உடம்பை வருத்தி செய்யும் கடினமான வேலைகளையோ கண்டிப்பாக செய்யக்கூடாது. அது குழந்தையை வெகுவாக பாதிக்கும். எனவே மருத்துவரிடம் என்ன மாதிரியான வேலைகளை செய்யலாம் என்றும், செய்யக்கூடாது என்றும் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

நல்லதையே யோசிக்கவும்

நல்லதையே யோசிக்கவும்

எப்போதும் நல்லதையே பற்றி யோசிக்க வேண்டும். மேலும் எந்நேரமும் சந்தோஷமாகவும், எதிலும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும்.

சூடான நீரில் குளிக்க கூடாது

சூடான நீரில் குளிக்க கூடாது

குளிக்கும் போது தண்ணீரின் வெப்ப நிலையில் எப்போதும் கவனம் இருக்க வேண்டும். அதிக சூடான தண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதை தாங்கும் சக்தி குழந்தைக்கு இருக்காது. அதனால் வெதுவெதுப்பாக இருக்கும் நீரிலேயே குளிக்க வேண்டும்.

இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவது, குழந்தையின் ஆரோக்கியத்தை நல்ல படியாக வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Ways To Make Your Unborn Baby Healthy | பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Having the feeling of a life living within you is one of the most beautiful experiences in the world. Being pregnant is a happy and memorable time for a woman. Every mother wants the very best for her child, so why not start caring about your baby’s health right from the moment you conceive?
Desktop Bottom Promotion