For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகள் வைட்டமின் சி சாப்பிட்டா குழந்தைக்கு ஆஸ்துமா வராதாம்!

By Mayura Akilan
|

Pregnancy
கர்ப்பகாலத்தில் புகைப் பிடிப்பதனால் பிறக்கும் குழந்தைக்கு ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. அதேசமயம் அவர்களை புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டு வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் குழந்தைகளின் நுரையீரல் பாதுகாக்கப்படுவதோடு அவர்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட எந்தவித தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

கர்ப்பிணிகள் தங்களின் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கர்ப்பகாலத்தில் மட்டுமாவது புகைப்பழக்கத்தையும், மது அருந்துவதையும் நிறுத்தவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் இதனை பின்பற்றுவதில்லை. இதனால் குழந்தைகள் பிறக்கும் போதே நுரையீரல் பாதிப்பினால் பிறக்கின்றனர்.

கர்ப்பகாலத்தில் புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டு பிரசவகாலம் வரை வைட்டமின் சி சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு எந்தவித நோய் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆஸ்துமா பாதிப்பின்றி ஆரோக்கியத்தோடு பிறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

கர்ப்பிணிகள் தங்கள் உணவில் வைட்டமின் சி அடங்கியுள்ள பொருட்களான வெண்ணெய், பால், தயிர், முட்டையின் மஞ்சள் கரு, கார்டு லிவர் ஆயில், தக்காளிப் பழம், மாம்பழம், ,முள்ளங்கி, காரட், பறங்கிக்காய், முட்டைக்கோஸ், கறிவேப்பிலை, புதினா, முள்ளங்கி இலை, பச்சைக் கொத்துமல்லிக் கீரை, முளைக்கீரை, சிறுகீரை, பசலைக் கீரை, வெள்ளை மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரைகள், முருங்கைக் கீரை போன்றவற்றை தினமும் இயன்ற அளவு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு வாய் நாற்றம் ஏற்படுவதுமுண்டு. வாய் நாற்றம் ஏற்படக் காரணம் வைட்டமின் "சி‟ குறைவே ஆகும். பச்சைப் பட்டாணி, பச்சைப் பயறு, முளை கட்டியது, சிறிய-பெரிய நெல்லிக்காய், ஆரஞ்சுப் பழம், திராட்சைப் பழம், வாழைப்பழம், தக்காளிப் பழம், சிறிய மற்றும் -பெரிய வெங்காயம், முட்டைக் கோஸ், சிவப்பு-வெள்ளை முள்ளங்கிகள், வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிக்காய், பேரிக்காய் ஆகியவற்றில் போதுமான அளவு வைட்டமின் சி அடங்கி உள்ளது. இவைகளை உட்கொண்டால், வாய் நாற்றம் நீங்கும்.

என்ன கர்ப்பிணிகளே கர்ப்பகாலத்தில் உங்களை பாதுகாப்பதோடு வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை உட்கொண்டு கருவில் இருக்கம் குழந்தையை ஆரோக்கியமானதாக பெற்றெடுங்கள்.

English summary

Vit C benefits newborns of smoking women | கர்ப்பிணிகள் வைட்டமின் சி சாப்பிட்டா குழந்தைக்கு ஆஸ்துமா வராதாம் !

Pregnant women who are unable to quit smoking can significantly improve the lung function of their newborns by taking Vitamin C daily.This is the conclusion of a new study at Oregon Health and Science University Doernbecher Children's Hospital.
Desktop Bottom Promotion