For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்ப்பால் சுரக்கலையா? தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா? அப்ப இந்த டீ போட்டு குடிங்க...

இன்றைய காலத்தில் பல தாய்மார்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பதில்லை. பாலூட்டும் தாய்மார்களின் பால் சுரப்பை அதிகரிக்கும் பல பொருட்கள் வீட்டின் சமையலறையில் உள்ளது.

|

புதிதாக பிறந்த குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் இருந்து தான் கிடைக்கும். அதனால் தான் புதிய தாய்மார்களை எப்போதும் உண்ணும் உணவில் சற்று அதிக கவனம் செலுத்த அறிவுறுத்துகின்றனர். தற்போது மார்கெட்டுகளில் ஃபார்முலா பால் எளிதில் கிடைக்கின்றன. இருப்பினும், பிறந்த குழந்தைக்கு குறைந்தது 6 மாத காலம் தாய்ப்பால் மட்டும் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

Homemade Lactation Tea To Increase Production Of Breast Milk

இன்றைய காலத்தில் பல தாய்மார்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பதில்லை. இந்நிலையில் அந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு வேறு வழியின்றி ஃபார்முலா பாலைக் கொடுக்கிறார்கள். இன்னும் சில தாய்மார்களுக்கு தாய்ப்பாலே சுரப்பதில்லை. இதற்கு இன்றைய உணவுப் பழக்கங்கள் மட்டுமின்றி, ஹார்மோன் பிரச்சனைகளும் தான்.

MOST READ: அவசரப்பட்டு 'கசமுசா' பண்ணிடீங்களா? பீரியட் சீக்கிரம் ஆகணுமா? இத செய்யுங்க...

பாலூட்டும் தாய்மார்களின் பால் சுரப்பை அதிகரிக்கும் பல பொருட்கள் வீட்டின் சமையலறையில் உள்ளது. நீங்கள் புதிதாக தாயாகி இருந்தால், தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிப்பதற்கான வழியை தேடுபவரானால், சமையலறை மற்றும் நாட்டு மருந்துக் கடையில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டு டீ தயாரித்துக் குடியுங்கள். இது தாய்ப்பால் சுரப்பில் மாயங்களை ஏற்படுத்துவதோடு, பாதுகாப்பானதும் கூட.

இப்போது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் டீயை எப்படி செய்வதென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* வெந்தய விதைகள் - 1/4 கப்

* உலர்ந்த நெட்டில் இலைகள் - 1/2 கப்

* உலர்ந்த சிவப்பு ராஸ்ப்பெர்ரி இலைகள் - 1/2 கப்

* சோம்பு - 1/4 கப்

* உலர்ந்த எலுமிச்சை வெர்பெனா - 1/2 கப்

* உலர்ந்த சிந்தால் - 1/4 கப்

செய்முறை:

செய்முறை:

படி #1

மிக்ஸில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு, நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதை காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரித்து, தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளவும்.

படி #2

படி #2

பின்பு ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் நீரை ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் பொடி சேர்த்து, 1 கப் வரும் வரை நன்கு சுண்ட கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை இறக்கி வடிகட்டி குளிர வைத்து குடிக்கவும்.

இப்போது வேறு சில இயற்கை வழிகளையும் காண்போம்.

சோம்பு

சோம்பு

சோம்பு விதைகள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் மிகச்சிறப்பான பொருள். அதற்கு ஒரு கப் நீரில் 1 ஸ்பூன் சோம்பை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி அத்துடன் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, தினமும் இரண்டு வேளை குடிக்க வேண்டும். சோம்பு டீ குடிக்க பிடிக்காதவர்கள், வறுத்த சோம்பை வாயில் போட்டு அவ்வப்போது மென்று சாப்பிடலாம்.

வெந்தயம்

வெந்தயம்

சோம்பிற்கு அடுத்தப்படியாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் சமையலறைப் பொருள் தான் வெந்தயம். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, தினமும் 2-3 முறை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வெந்தயத்தை முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம்.

பட்டை

பட்டை

மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டை, தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 சிட்டிகை பட்டை தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்கவும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

சீரகம்

சீரகம்

தாய்ப்பால் குறைவாக சுரக்கும் பெண்களுக்கு சீரகம் மிகவும் நல்லது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சீரகத்தை வறுத்து பொடி செய்து, உண்ணும் உணவில் சேர்த்து வர, தாய்ப்பால் அதிகம் சுரக்க ஆரம்பிக்கும்.

பூண்டு

பூண்டு

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் மற்றொரு பொருள் தான் பூண்டு. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு சாப்பிட்டால், தாய்ப்பாலின் சுவை அதிகரிக்கும் என்று சொல்வார்கள். அதற்கு உணவில் பூண்டை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது 2-3 பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Lactation Tea To Increase Production Of Breast Milk

A newborn's only way to get the required nutrition is from a mother's milk. So, try this homemade lactation tea to increase production of breast milk.
Desktop Bottom Promotion