For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிசேரியனுக்கு பிறகு டயட் எடுத்துக்கனுமா ?ஊட்டச்சத்துகளில் எது சாப்பிடலாம் எது சாப்பிடக்கூடாது

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னான உணவுக்கட்டுப்பாட்டில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கீழ்கண்ட ஊட்டச்சத்து பொருட்களை சரியான அளவில் எடுத்துக் கொள்ளலாம் புரதம், வைட்டமின் சி, வைட்டமின், இரும்புச்சத்து, கால்ச

|

சுகப்பிரசவம் என்பது நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நமது உணவுப்பழக்கமும், வாழ்வியல் நடைமுறைகளும் தான். இதனால் தான் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பது என்பது சர்வசாதரணமான ஒரு விசயமாக மாறிவிட்டது. எந்த முறையற்ற உணவுப்பழக்கங்களால் கூடுதல் வலியையும் வேதனையையும் அனுபவித்தமோ அதே தவறை மீண்டும் செய்யாமல் இருப்பது நல்லதல்லவா..

Diet After Cesarean Delivery: Essential Nutrients To Take

பொதுவாக பிரசவம் நடைபெற்ற பிறகு தாயின் உடல் மிகவும் பலவீனமாவது இயற்கையானது. அதிலும் சிசேரியன் என்றால் சொல்லவா வேண்டும். அதன் காயங்கள் ஆற வேண்டும். செரிமானம், மலச்சிக்கல் போன்ற எண்ணற்ற அவஸ்தைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். அப்போது முறையான உணவுக் கட்டுப்பாடு என்பது அவர்களுக்கு அவசியமானது. எந்த மாதிரியான உணவுக்கட்டுபாடுகள் தேவை, எந்த மாதிரியான ஊட்டச்சத்துப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் போன்றவற்றை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்ல ஓய்வு

நல்ல ஓய்வு

அறுவைச் சிகிச்சை பிரசவத்தின் பாதிப்புகளிலிருந்து வெளிவருவதற்கு குறிப்பிட்ட காலம் எடுத்துக் கொள்ளும். அந்த காலங்களில் நீண்ட ஓய்வு என்பது அவசியமாகிறது. அதோடு சீரான உணவுக்கட்டுபாடு என்பது மிகவும் அவசியமாகிறது.

ஊட்டச்சத்து மட்டும் அறுவைச் சிகிச்சையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வாகிவிடாது. அதே சமயத்தில் தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை இது பெருக்குகிறது. அறுவைச் சிகிச்சைக்குப் பின் தாய் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகளும், அந்த ஊட்டச்சத்துகள் எப்படி உங்களுக்கு உதவும் என்பதை பற்றியும் பார்ப்போம்.

ஊட்டச்சத்து மட்டும் அறுவைச் சிகிச்சையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வாகிவிடாது. அதே சமயத்தில் தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை இது பெருக்குகிறது. அறுவைச் சிகிச்சைக்குப் பின் தாய் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகளும், அந்த ஊட்டச்சத்துகள் எப்படி உங்களுக்கு உதவும் என்பதை பற்றியும் பார்ப்போம்.

ஊட்டச்சத்து மட்டும் அறுவைச் சிகிச்சையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வாகிவிடாது. அதே சமயத்தில் தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை இது பெருக்குகிறது. அறுவைச் சிகிச்சைக்குப் பின் தாய் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகளும், அந்த ஊட்டச்சத்துகள் எப்படி உங்களுக்கு உதவும் என்பதை பற்றியும் பார்ப்போம்.

பிரசவத்திற்கு பிறகு ஊட்டச்சத்துகள் ஏன் தேவை

பிரசவத்திற்கு பிறகு ஊட்டச்சத்துகள் ஏன் தேவை

சுகப்பிரசவமாக இருந்தாலும் சரி, அறுவைச் சிகிச்சையின் மூலம் ஏற்பட்ட பிரசவமாக இருந்தாலும் சரி பிரசவத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு ஊட்டச்சத்துகள் என்பது அவசியமாகிறது. மேலும் இது உங்கள் செயல்படும் ஆற்றலை அதிகப்படுத்துகிறது.

தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு கூடுதல் கலோரி தேவை

தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு கூடுதல் கலோரி தேவை

அதே சமயத்தில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு கூடுதலான கலோரிகள் தேவை. 450 முதல் 500 கலோரிகள் வரை தாய்மார்கள் கூடுதலாக ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக ஒரு நாளைக்கு தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு 1800 முதல் 2000 கலோரிகள் தேவைப்படுகின்றன. ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மேல் பாலூட்டும் தாய்மார்கள் அல்லது எடை குறைவான தாய்மார்கள் அதிகமான கலோரிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

உணவுக்கட்டுப்பாடு

உணவுக்கட்டுப்பாடு

சீரான டயட்டின் வாயிலாக மேக்ரோ மற்றும் மைக்ரோ ஊட்டச்சத்துகள் தாய்மார்களை குணப்படுத்தவும், குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் வழியாக ஊட்டச்சத்துகளை பரிமாற்றம் செய்வதற்கும் பயன்படுகிறது. இந்த உணவுக் கட்டுப்பாடு சுகப்பிரசவம் மற்றும் அறுவைச் சிகிச்சை பிரசவம் ஆகிய இருவருக்கும் பொருந்தும்.

புரதம் (புரோட்டின்)

புரதம் (புரோட்டின்)

புரதங்கள் பொதுவாக புதிய செல் திசுக்களை உருவாக்கவும், பாதிப்படைந்த திசுக்களை சரி செய்யவும் பயன்படுகிறது. மேலும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னான பாதிக்கப்பட்ட திசுக்களை சரி செய்து கூடுதலாக தசைகளையும் வலுப்படுத்துகிறது.

என்ன சாப்பிடலாம்

முட்டை, மீன், சிக்கன், பால் பொருட்கள், இறைச்சி, பட்டாணி, உலர்ந்த பீன்ஸ், மற்றும் கடலை வகைகள் ஆகியவற்றில் புரதங்கள் அதிகமாக இருக்கின்றன. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தருணங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது விரைவில் செரிமானமாவதால் படுக்கையில் இருக்கும் போது எடுத்துக் கொள்ள முடிகிறது.

எவ்வளவு

எவ்வளவு

ஒரு நாளைக்கு 48 கிராம் வரை இவ்வகையான புரதங்களை தாய்மார்கள் எடுத்துக் கொள்ளலாம். மேலும் பாலூட்டும் தாய்மார்கள் கூடுதலாக 15 கிராம் புரதங்களை எடுத்துக் கொள்ளலாம்.

வைட்டமின் சி

வைட்டமின் சி

வைட்டமின் சி உணவுப் பொருட்கள் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே இது காயங்களுக்கு எதிராக போராடி குணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. பழம் மற்றும் காய்கறிகள் இரண்டிலும் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன.

என்ன சாப்பிடலாம்

பழவகைகளான ஆரஞ்ச், பப்பாளி, முலாம் பழம், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை போன்றவற்றையும், காய்வகைகளில் சக்கரை வள்ளிக் கிழங்கு, தக்காளி, புரோக்கோலி போன்றவற்றையும் அறுவைச் சிகிச்சைக்கு பின்னான உணவுக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம்.

எவ்வளவு

எவ்வளவு

ஒரு நாளைக்கு தாய்பாலூட்டும் 14 முதல் 18 வரை உள்ள பெண்கள் 115 மி.கிராமும், 19 வயதிற்கு மேற்பட்ட தாய்மார்கள் 120மிகி வைட்டமின் சி உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

மல்டி வைட்டமின்கள்

மல்டி வைட்டமின்கள்

வைட்டமின் சி உடன் சில வைட்டமின் கூட்டுப் பொருட்களும் அறுவைச் சிகிச்சை செய்த தாய்மார்களுக்குத் தேவைப்படும். வைட்டமின் எ உள்ளிட்ட வைட்டமின் ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. எந்த அளவுக்கு எந்த வைட்டமின்கள் அல்லது வைட்டமின்கள் கூட்டுப் பொருட்களை தேவைப்படுமாயின் மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ளலாம்.

இரும்புச் சத்து

இரும்புச் சத்து

ஹீமோகுளோபின் அளவுகளை உயர்த்துவதில் இரும்பு சத்துடைய உணவுப்பொருட்கள் பயன்படுகின்றன. பிரசவத்தின் போதும் பிரசவத்திற்குப் பிறகும் ஏற்பட்ட இரத்த இழப்பை சரிசெய்வதற்கும், தாய்ப்பாலுக்கும் இரும்புச்சத்து என்பது அவசியமாகிறது.

என்ன சாப்பிடலாம்

முட்டைக் கரு, சிவப்பு இறைச்சி, சிப்பிகள், அத்திப்பழம், மாட்டின் குடல், உலர்ந்த பீன்ஸ் மற்றும் உலர்ந்த பழங்களில் இரும்புச் சத்துகள் அதிகமாக காணப்படுகிறது.

எவ்வளவு சாப்பிடலாம்

எவ்வளவு சாப்பிடலாம்

இரும்புச் சத்துடைய உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கூடுதலாக எடுத்துக் கொள்ளும் இரும்புச் சத்து மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே 19 வயதிற்கு மேற்பட்ட தாய்மார்கள் 9 மிகிராமையும், 19 வயதிற்கு கீழுள்ள தாய்மார்கள் 10 மிகிராமையும் தங்கள் உணவுக் கட்டுப்பாட்டில் சேர்க்க வேண்டும்.

கால்சியம்

கால்சியம்

கால்சியம் தசைப்பிடிப்புகளிலிருந்து நிவாரணத்தை தருகிறது. மேலும் எலும்புகளையும் பற்களையும் வலுப்படுத்துவதோடு இரத்த உறைதலை ஏற்படுத்துகிறது. எனவே அதீத இரத்தப் போக்கிலிருந்து காப்பாற்ற இது பயன்படுகிறது.

என்ன சாப்பிடலாம்

பால், தயிர், சீஸ், கீரை, டோஃபு மற்றும் கேல் கீரை போன்றவற்றில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளன.

எவ்வளவு சாப்பிடலாம்

எவ்வளவு சாப்பிடலாம்

19 வயதிற்கு மேற்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் 1000 மிகி/ நாள் என்ற அளவிலும், 19 வயதிற்கு கீழுள்ள பாலூட்டும் தாய்மார்கள் 1300 மிகி/ நாள் என்ற அளவிலும் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலூட்டும் போது தாய்மார்களிடம் இருந்து 250 முதல் 350 மிகி கால்சியம் பிறந்த குழந்தைகளுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது.

நார் சத்துகள்

நார் சத்துகள்

நார்சத்துள்ள உணவுப் பொருட்கள் மலச்சிக்கலைத் தீர்க்கிறது. அறுவைச் சிகிச்சை செய்த தாய்மார்கள் பெரும்பாலும் படுக்கையிலே தான் இருப்பார்கள். எந்த வேலையும் செய்யாத போது செரிமானத்தில் ஏற்படுகிற கோளாறுகளால் உண்டாகிற மலச்சிக்கலில் இருந்து தீர்வைத் தருகிறது.

என்ன சாப்பிடலாம்

அதீத நார்சத்துகள் பழங்களிலும் காய்கறிகளிலும் அதிகமாக உள்ளன.

திரவ உணவுகள்

திரவ உணவுகள்

உடல் வறட்சி மற்றும் மலச்சிக்கலில் இருந்து வெளியேறுவதற்கு பழச்சாறுகள் மற்றும் நீரை அருந்த வேண்டும். திரவ உணவுகள் வயிற்றுப் பகுதிகளின் வேலைகளுக்கு மென்மை அளித்து அறுவை சிகிச்சை குணமாவதற்கு உதவுகிறது. தண்ணீரோடு குறைந்த கொழுப்புள்ள பால், சிட்ரஸ் அல்லாத பழங்கள், தேங்காய் நீர், மூலிகை தேநீர், மோர், சூப் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால்

பால் வெறும் கால்சியம் சத்தை மட்டும் அளிக்காது. மேலும் பால் உற்பத்தியையும் அது ஆதரிக்கிறது.

எந்த உணவுகளை சேர்கக் கூடாது

எந்த உணவுகளை சேர்கக் கூடாது

சிட்ரஸ் பழச்சாறு

சிட்ரஸ் பழச்சாறுகளை காரணமின்றி குடிக்கக்கூடாது. குறைந்த அளவு எடுத்துக் கொண்டு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால் அதை சிறிதளவு உயர்த்திக் கொள்ளலாம்.

குளிர்மையான உணவுகள்

குளிர்மையாக இருக்கும் உணவுகளை ஒரு போதும் உண்ணாதீர்கள். அது உங்களுக்கு சளியை ஏற்படுத்தும். அந்தச் சளிப்பாதிப்பு உங்கள் குழந்தையையும் பாதிக்க வாய்பிருப்பதால் குளிர்மையான உணவுக்களுக்கு அனுமதி அளிக்காதீர்கள்.

காபி, டீ

காபி, டீ

காபி, டீ போன்றவற்றை எப்போதாவது எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் போது டையூட்ரிக் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஆல்கஹாலை தவிருங்கள். அது உங்கள் தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும்.

வாயுத் தொல்லை

வாயுத் தொல்லை

வயிறு வீக்கம் மற்றும் வாயுத் தொல்லை உள்ளவர்கள் கார்பனேட் பானங்கள், காலிபிளவர், முட்டைக்கோஸ், வெண்டைக்காய் போன்றவற்றை சில நாட்களுக்கு உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

கொழுப்பு

கொழுப்பு

உடல் சார்ந்த வேலைகளில் அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஈடுபட மாட்டோம். எனவே கொழுப்பு நிறைந்த உணவுகளையும் ஜங்க் உணவுகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் காஸ்ட்ட்ரிக் தொல்லைகள் ஏற்படாமல் இருக்க கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diet After Cesarean Delivery: Essential Nutrients To Take

In the post-operative diet, doctors advise you to take the following nutritional supplements: protein, vitamin C, vitamin, iron, calcium, fiber, and avoid carbonated beverages, cold foods, junk foods and alcohol.
Desktop Bottom Promotion