For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் விரைவில் இறக்கும் அபாயம் 8 மடங்கு அதிகமாக உள்ளதாம் - எதனால்?

இயல்பான குழந்தைகளுடன் ஒப்பிடும் போது குழந்தை வயிற்றில் இருக்கும் போது இரத்தத்தில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அதன் இறப்பு 8 மடங்கு வரை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.

|

ஒரு குழந்தை கர்ப்பத்தில் முழுமையாக வளர்ச்சி அடைய 40 வாரங்களாவது ஆகிறது. ஒரு முழுமையான பிரசவம் 40 வாரங்களுக்கு பிறகு நடக்கும் போது குழந்தையின் வளர்ச்சியில் எந்த பிரச்சினையும் இருப்பதில்லை. ஆனால் 37 வாரங்களுக்கு முன்கூட்டியே பிரசவம் நடப்பதை குறைப்பிரசவம் என்கின்றனர்.

Can Low Oxygen Levels In Blood Increase The Risk Of Early Death In Premature Babies?

இப்படி குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் சாதாரண குழந்தைகளை விட பலவீனமானவர்களாக இருக்கிறார்கள். மேலும் அதிக உணர்திறன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பிறப்பால் பல சிக்கல்களையும் இன்னல்களையும் சந்தித்து வருகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் இயல்பான குழந்தைகளுடன் ஒப்பிடும் போது குழந்தை வயிற்றில் இருக்கும் போது இரத்தத்தில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அதன் இறப்பு 8 மடங்கு வரை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. இந்த ஆராய்ச்சி பற்றிய விவரங்கள் லான்செட்டின் எக்லினிகல் மெடிசின் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

புதிய ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

புதிய ஆராய்ச்சியின் படி, முன்கூட்டியே குழந்தை பிறந்த பிறகு அவரது இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருந்தால் அவர் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. நைஜீரியாவில் 12 மருத்துவமனைகளில் பிறந்த 23,000 குழந்தைகள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் முர்டோக் குழந்தைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹமிஷ் கிரஹாம் கூறுகையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இரத்த ஆக்ஸிஜன் குறைபாடு மிகவும் பொதுவான ஒன்று. முன்கூட்டியே குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அல்லது மிகவும் கஷ்டப்பட்ட பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் இருந்து இரத்தத்தில் செல்லும் ஆக்ஸிஜன் அளவு நுரையீரலில் இருந்து மற்ற உறுப்புகளுக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவாகும். இதை இரத்த ஆக்ஸிஜன் நிலை என்று அழைக்கின்றனர்.

புதிதாக பிறந்த ஒவ்வொரு 4 குழந்தைகளில் ஒருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 குழந்தைகளில் 1 பேரும் அவர்களின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு உள்ளவர்கள் என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது. இதனால் இறப்பு ஆபத்து 8 மடங்கு வரை அதிகமாகிறது.

இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு ஏன் குறைகிறது?

இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு ஏன் குறைகிறது?

இரத்தத்தில் ஆக்ஸிஜன் இல்லாததால் ஏற்படும் பிரச்சினை பொதுவாக நிமோனியாவால் ஏற்படுகிறது. ஆனால் சில நேரங்களில் இது வேறு காரணங்களாலும் ஏற்படலாம். புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் இல்லாததால் ஏற்படும் சிக்கல்கள் பெரும்பாலும் பிறந்த உடனேயே ஆரம்பிக்கின்றன. குறிப்பாக குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் கருப்பையினுள் நிகழ்ந்ததைப் போலவே தொடர்கிறது என்பதால் சிக்கல் உண்டாகிறது. இது நிகழும் போது அதிகப்படியான இரத்தம் நுரையீரலுக்கு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் ஆக்ஸிஜன் சரியாக கரைவதில்லை. இதன் காரணமாக தான் குழந்தையின் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.

கர்ப்ப காலத்தில் குழந்தையின் நிலை

கர்ப்ப காலத்தில் குழந்தையின் நிலை

திசுக்கள் (நரம்புகள்) ஆரோக்கியமாக இருக்க நம் உடலில் இரத்த ஓட்டம் என்பது மிகவும் அவசியம். ஒரு குழந்தை கருப்பையில் இருக்கும் போது அதன் நுரையீரலுக்கு மிகக் குறைந்த இரத்தம் தேவைப்படுகிறது. ஏனெனில் அவற்றின் நுரையீரல் ஆக்ஸிஜனை கார்பன் டை ஆக்சைடாக மாற்றாது. எனவே கரு பெரும்பாலும் இரத்தத்தை நுரையீரலில் இருந்து வெளியேற்றுகிறது. ஆனால் குழந்தை கருவில் இருந்து வெளியே வந்து பூமியின் காற்றில் முதல் சுவாசத்தை எடுத்த உடன் அக்குழந்தையின் நுரையீரலில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இரத்தம் நுரையீரலுக்கு தள்ளப்பட்டு உடலில் உள்ள இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.

ஆக்ஸிஜன் சிகிச்சையின் பயன்பாடு

ஆக்ஸிஜன் சிகிச்சையின் பயன்பாடு

ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹமிஷ் கிரஹாம் கருத்துப்படி, மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சோதனை இயந்திரங்கள் மற்றும் ஆக்ஸிஜன் சோதனையை அதிகரிக்க சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களை கொண்டு இந்த பிரச்சினையை சமாளிக்க நிறைய ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதனால் குழந்தைகள் முன்கூட்டியே இறக்கக் கூடாது என்பதற்காக ஆக்ஸிஜன் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Low Oxygen Levels In Blood Increase The Risk Of Early Death In Premature Babies?

Can low oxygen levels in blood increase the risk of early death in premature babies? Read on...
Desktop Bottom Promotion