For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த கொரோனா காலத்தில் குறைப்பிரசவங்கள் குறைந்ததற்கு இதுதான் காரணம்…

பல நாடுகளில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் நிகழ்ந்த ஓர் ஆச்சரியமான, மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், குறைபிரசவம் கணிசமாக குறைந்துள்ளது என்பது தான்.

|

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு காலங்கள் பெரும்பாலானவர்களுக்கு மனஅழுத்தத்தை அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. வெளியே எங்கும் செல்ல முடியாமல், வீட்டிற்குள்ளேயே அடைந்திருப்பது இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமல் கவலையில் இருந்தவர்களுக்கு, இந்த ஊரடங்கு காலத்தை பொற்காலம் என்றும் சொல்லலாம். ஊரடங்கை அதிகமானோர் விரும்பாத போதும், அதனால் உலகிற்கு நிகழ்ந்த ஓர் அற்புதம் என்றால், சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்தது மட்டும் தான். அந்த வகையில் இந்த ஊரடங்கு மற்றொரு நன்மையையும் செய்துள்ளது. என்னவென்று கேட்கிறீர்களா? அது தான் குறைபிரசவம் குறைந்திருப்பது.

Can COVID-19 Lockdown Be The Reason Behind Decreased Premature Births?

ஊடக அறிக்கைகளின்படி, பல நாடுகளில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் நிகழ்ந்த ஓர் ஆச்சரியமான, மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், குறைபிரசவம் கணிசமாக குறைந்துள்ளது என்பது தான். பொதுவாக, 37-வது வாரத்தின் தொடக்கத்திற்கு முன்பே நிகழக்கூடிய பிரசவத்தை குறைபிரசவம் என்றழைக்கப்படுகிறது. 40 வாரங்கள் வரை நீடிக்கும் கர்ப்பக் காலமே முழு கால கர்ப்பமாக கருதப்படுகிறது.

MOST READ: கொரோனா மற்றும் மலேரியா அறிகுறிகளுக்கு இருக்குற வித்தியாசம் இதுதான். தெரிஞ்சுக்கோங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைப்பிரசவ விகித வீழ்ச்சி

குறைப்பிரசவ விகித வீழ்ச்சி

ஆரம்பத்தில், அயர்லாந்து மற்றும் டென்மார்க் மருத்துவர்கள் கோவிட்-19 ஊரடங்கின் போது, குறைபிரசவ விகிதத்தில் ஏற்பட்ட திடீர் சரிவு குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். டென்மார்க் மட்டும், அதன் ஊரடங்கு காலக்கட்டத்தில் குறைபிரசவ விகிதத்தில் 90 சதவிகிதம் வீழ்ச்சியைக் கண்டது.

அயர்லாந்தில் உள்ள பல்கலைக்கழக மகப்பேறு மருத்துவமனை லிமெரிக், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது குறைந்த எடையுடன் பிறக்கக் கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையானது, முந்தைய இரண்டு பத்தாண்டுகளுடன் ஒப்பிடும் போது 73 சதவிகிதம் குறைந்துள்ளது என்பதைக் கண்டறிந்தது.

கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்தின் சில பகுதிகளிலும் இதேப்போன்ற நிகழ்வு காணப்படுகிறது. இந்த கண்டுபிடிப்புகளை வெளியிட்ட ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. மேலும் இது முன்கூட்டிய சேவையகங்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, இவை முதற்கட்ட அறிக்கைகள் மட்டுமே தவிர, அவை எந்த மருத்துவ முடிவோ அல்லது நடைமுறைக்கு பின்னால் வழிகாட்டும் கொள்கைகளாகவோ இல்லை.

கோவிட்-19 ஊரடங்கிற்கும், குறைந்த குறைப்பிரசவங்களுக்குமான இணைப்பு என்ன?

கோவிட்-19 ஊரடங்கிற்கும், குறைந்த குறைப்பிரசவங்களுக்குமான இணைப்பு என்ன?

முன்கூட்டிய பிரசவங்கள் அதாவது, குறைபிரசவங்களின் சரிவை ஊரடங்கு எந்த வகையில் பாதித்தது என்பதை மருத்துவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், இந்த கட்டத்தில் குறிப்பிட்ட சில காரணிகளின் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் ஊகிக்கின்றனர்.

வல்லுநர்களின் ஊகிப்பு:

வல்லுநர்களின் ஊகிப்பு:

* வீட்டிலேயே இருப்பதால், குறைபிரசவ அபாயத்தை அதிகரிக்கும் என்று அறியப்படும் ஒரு சில வைரஸ் தொற்றுகளிலிருந்து கர்ப்பிணி பெண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.

* குறைபிரசவத்திற்கு காரணமான மற்றொரு பெரிய காரணமான காற்று மாசுபாட்டின் அளவை இந்த ஊரடங்கு கணிசமாகக் குறைத்துள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

* ஊரடங்கு பலருக்கு மன அழுத்தத்தையும், பிற மனநல சவால்களையும் அதிகரித்திருக்கலாம் என்றாலும், சிலருக்கு இது ஒரு வரமாகவே வாய்த்துள்ளது. அதிக ஓய்வு மற்றும் குடும்ப ஆதரவை உறுதி செய்கிறது.

* வீட்டுக் காவலின் காலம் அவர்களின் வேலையையும், மன அழுத்தத்தையும் குறைத்துள்ளது என்று கூற வேண்டும். ஊரடங்கின் போது குறைந்த அளவிலான குறைபிரசவங்களுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஒரு உறுதியான கருத்தை எட்டுவதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், இந்த கண்டுபிடிப்புகள் மருத்துவர்களுக்கான சாத்தியமான குறிப்புகளாக செயல்படக்கூடும். மேலும், குறைப்பிரசவத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை மிகச் சிறந்த முறையில் புரிந்துகொள்வதற்கும் அதைத் தடுப்பதற்கும் பெற்றோர்களும் உடனிருப்பர்.

குறைப்பிரசவத்தைத் தடுப்பதற்கான வழிகள்:

குறைப்பிரசவத்தைத் தடுப்பதற்கான வழிகள்:

ஒரு பெண்ணிற்கு குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்க பல காரணிகள் உள்ளன. அவற்றால் தான் எடை குறைந்த குழந்தையைப் பெற்றெடுக்கின்றனர். உங்கள் கர்ப்பக் காலத்தில் இந்த ஆரோக்கியமான பழக்கங்களை நீங்கள் பின்பற்றுவதை உறுதி செய்து கொள்வதன் மூலம், குறைப்பிரசவத்தின் அபாயத்தை குறைத்திடலாம்:

புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் வேண்டாம்:

புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் வேண்டாம்:

கர்ப்பமாக இருக்கும் போது புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்திடவும். ஏனெனில் இப்பழக்கம் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, வயிற்றில் வளரும் கருவின் வளர்ச்சியையும் மோசமாக பாதிக்கும்.

கவலையை பகிர்ந்து கொள்ளுதல்:

கவலையை பகிர்ந்து கொள்ளுதல்:

கர்ப்பம் என்பது மகிழ்ச்சியை மட்டுமே வழங்கிட கூடியது கிடையாது. இது மன அழுத்தத்தையும் தரக்கூடிய ஒன்று. எனவே, உங்களைப் பற்றிய, உங்களுக்கு ஏற்படக்கூடிய மனக்கவலைகளைப் பற்றி உங்கள் கணவர் மற்றும் மனதிற்கு நெருங்கியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கவலைக்கான காரணங்கள் குறித்து வெளிப்படையாக கலந்துரையாடுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரின் உதவியையும் நாடலாம். நினைவில் கொள்ளுங்கள், மன அழுத்தம் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

ஆரோக்கியத்தில் அக்கறை:

ஆரோக்கியத்தில் அக்கறை:

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் அல்லது இரத்த உறைவு பிரச்சனைகள் போன்ற முன்பே இருக்கக்கூடிய சில ஆரோக்கிய கேடுகள் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் இந்த நோய்களை நன்கு கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை முறையாக மேற்கொள்ளுங்கள். உண்மையில், நீங்கள் குடும்ப வாழ்க்கை குறித்து திட்டமிடும்போது இந்த சுகாதார நிலைமைகளைக் கண்காணித்து அவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

சுகாதாரம் பேணுதல்:

சுகாதாரம் பேணுதல்:

வைரஸ் தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க நல்ல தூய்மை மற்றும் சுகாதாரமான நடைமுறைகளை கையாளுங்கள். இத்தகைய வைரஸ் நோய்தொற்றுகள் குறைப்பிரசவத்தை தூண்டக்கூடும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.

மாசுபாட்டிலிருந்து விலகி இருப்பது:

மாசுபாட்டிலிருந்து விலகி இருப்பது:

சுற்றுச்சூழல் நச்சுகள் மற்றும் மாசுபாட்டின் வெளிப்பாட்டைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது, குறைப்பிரசவத்திற்கான வாய்ப்புகளையும் குறைக்கும். எனவே, மாசு நிறைந்த இடங்களுக்கு செல்வதையோ, சென்றாலும் முன்னெச்சரிகையுடன் செயல்படுவதையும் முறையாக கடைபிடிக்க மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can COVID-19 Lockdown Be The Reason Behind Decreased Premature Births?

Can COVID-19 lockdown be the reason behind decreased premature births? Read on...
Desktop Bottom Promotion