சுகப்பிரசவ தையலின் வலியை குணப்படுத்தும் வழிகள்

Posted By:
Subscribe to Boldsky

குழந்தை என்பது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை தரக் கூடிய பொக்கிஷம். அதிலும் முதல் குழந்தையை பெறப் போகும் தாய்க்கு மனதில் மகிழ்ச்சியும், பல்வேறு குழப்பங்களும் இருக்கும். அதிலும் பிரசவம் சம்பந்தமான குழப்பங்கள் அவர்களிடம் அதிகமாகவே காணப்படும். அவர்களின் சந்தேகங்களை மகப்பேறு மருத்துவர்கள் என்னதான் நிறைவு செய்தாலும், புதிது புதிதாக சந்தேகங்கள் தோன்றிக் கொண்டே தான் இருக்கும்.

Pregnancy

பிரசவம் என்றாலே சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை போன்ற வழிகளில் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் அறுவை சிகிச்சை முறைக்கு மட்டுமே தையல் போடப்படும் என்பது நம்மில் பெரும்பாலானவர்களின் கருத்து. ஆனால், சுகப்பிரசவத்திற்கு பின்னும் தையல் தேவைப்படும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. சுகப்பிரசவத்திற்கு பின் ஏன் தையல் போட வேண்டும், அவற்றை எப்படி சரி செய்யலாம் போன்றவற்றை நாம் இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுகப்பிரசவத்தின் பின் ஏன் தையல் தேவைப்படுகிறது?

சுகப்பிரசவத்தின் பின் ஏன் தையல் தேவைப்படுகிறது?

சுகப்பிரவத்தில் குழந்தை பெற்று கொள்ளும் அனைத்தும் பெண்களும் தையல் தேவைப்படுமா என்றால், அதன் பதில் இல்லை என்பதுதான். ஆனால், சுகப்பிரசவத்தின் பின் தையல் தேவைப்படுவதற்கான பல காரணங்கள் உள்ளது. உங்கள் பிறப்புறுப்பு பகுதியிலும், பின் பகுதியிலும் பிரசவத்தின் போது ஏற்படும் அழுத்தத்தால் சிலருக்கு அந்த பகுதி கிழிந்து விடலாம். பிரசவத்தின் போது குழந்தையின் எடை அதிகமாக இருந்தால் வெளியில் வர சிரமம் ஏற்படும். அப்போது மருத்துவர் அந்த பகுதியில் இடைவெளியை ஏற்படுத்த சிறிது வெட்டி விடுவார்.

எந்த சூழ்நிலையில் மருத்துவர்கள் இப்படி செய்வார்கள்?

எந்த சூழ்நிலையில் மருத்துவர்கள் இப்படி செய்வார்கள்?

1. பிரசவத்தின் போது குழந்தையை ஆயுதங்களை பயன்படுத்தி வெளியில் எடுக்கும் போது.

2. பிரசவமாவதற்கு நீண்ட நேரம் எடுத்து நீங்கள் சோர்வடையும் போது

3. குழந்தையின் கால் முதலில் வெளிவரும் போது

4. குழந்தைக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் போது வேகமாக பிரசவமாக வேண்டும் என்பதற்காக

5. இருதய நோய் போன்ற நோய் இருக்கும் போது, பிரசவத்தின் வேகத்தை அதிகப்படுத்த

இந்த காரணங்களே மருத்துவர்கள் இதை செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது

தையல் எப்படி போடப்படும்?

தையல் எப்படி போடப்படும்?

காயம் சிறிதாக இருந்தால் உங்களுக்கு பிரசவ அறையிலேயே மறத்துப் போகும் மருந்து கொடுத்து தையல் போடப்படும். பெரும்பாலான பிரசவ அறைகளில் போடப்படும் தையல் தானாக சரியாக கூடியவையாக இருக்கும். அதனால் அதை நீக்க வேண்டிய பிரச்சனை இருக்காது. காயம் அதிகமாக இருக்கும் சமயத்தில் உங்களை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து சென்று, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தையல் போடப்படும்.

தையலில் எப்போதெல்லாம் பிரச்சனை ஏற்படும் ?

தையலில் எப்போதெல்லாம் பிரச்சனை ஏற்படும் ?

நீங்கள் என்னதான் கவனமாக இருந்தாலும் சில நேரத்தில் உங்கள் தையலில் பிரச்சனை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. கீழ்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு ஏற்பட்டாலும் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். வழக்கத்திற்கு மாறான வலி அல்லது அந்த இடத்தில் மோசமான துர்நாற்றம் வீசுவது, அதிக வெப்பம் அடிவயிற்றில் மோசமாக வலி ஏற்படுவது, உடலிலிருந்து வாயு வெளியேறுவதை கட்டுப்படுத்த முடியாமல் போவது அதிகப்படியான இரத்தப்போக்கு அல்லது கட்டியாக வெளியேறுவது அவசரமாக மலம் கழிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துவது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி ஏற்படுவது நீங்கள் எவ்வளவு சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திருப்பதை பொறுத்து விரைவில் சரியாகிவிடும். அதனால், அதுவாக குணமாகும் என காத்திருக்க வேண்டாம்.

தையலால் ஏற்படும் வலியை குறைக்க

தையலால் ஏற்படும் வலியை குறைக்க

சிகிச்சை 1

குளிர்ந்த நீர் சிறந்த வலி நிவாரணியாக செயல்படக் கூடிய ஒன்று. இது அந்த பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். முடிந்தவரை குளியல் தொட்டியில் குளிந்த நீரில் அமர்ந்திருப்பது நல்ல பலனை தரும். ஆனால், அதன் பின் அந்த பகுதியை ஈரமில்லாமல் சுத்தம் செய்ய வேண்டியது அவசியமான ஒன்று. குளிர்ந்த ஜெல் போன்றவற்றை இந்த பகுதியில் உபயோகிப்பது நல்ல பலனைத் தரும். அந்த இடத்தை அரை மணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை உலர செய்ய வேண்டும்.

சிகிச்சை 2

சிகிச்சை 2

வலி நிவாரணிகள் நிச்சயம் நல்ல பலனை தரக் கூடியவை. ஆனால், அவற்றை எடுத்து கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உங்களுக்கேற்ற வலி நிவாரணிகளை எடுத்து கொள்ளுங்கள். சில வலி நிவாரணிகள் தாய்ப்பாலூட்டும் போது எடுத்து கொள்ளக்கூடாது.

சிகிச்சை 3

சிகிச்சை 3

மலம் கழிக்கும் போது கொடுக்கப்படும் அழுத்தம் உங்களுக்கு வலியை கொடுக்கலாம். எனவே, சுத்தமான மென்மையான துணியை தையல் பகுதில் வைத்து அழுத்தி கொண்டு மலம் கழிப்பது வலியை குறைக்கும்.

சிகிச்சை 4

சிகிச்சை 4

சிறுநீர் கழிக்கும் போது வலியை உணர்ந்தால், சிறுநீர் கழிக்கும் அந்த பகுதியில் ஷவர் அல்லது வெந்நீரை ஊற்றி கொண்டிருக்கவும். பெரும்பாலும் வெந்நீர் ஊற்றுவது சிறந்தது, ஆனால் தண்ணீர் அதிக சூடாக இருத்தல் கூடாது. வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றுவது ஆறுதலாய் இருக்கும்.

சிகிச்சை 5

சிகிச்சை 5

பல பெண்களுக்கு முதல் சில மாதங்களில் உடலுறவின் போது வலி ஏற்படுகிறது. அதற்கு உங்கள் துணையிடம் உங்கள் நிலையை எடுத்துக்கூறி புரியவையுங்கள் அல்லது மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள்.

தையல் காயத்தை ஆற்றும் வழிகள்

தையல் காயத்தை ஆற்றும் வழிகள்

அந்த பகுதியை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்து கொள்ளவும். உங்களால் முடிந்த வரை வேகமாக சுத்தம் செய்து கொள்ளவும். அடிக்கடி சுத்தம் செய்தாலும், அந்த பகுதி உலர்வாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியம். உங்களின் கீழ்ப்பகுதியை முன் பகுதியில் இருந்து மென்மையாக துடைப்பது நோய் தொற்று உருவாவதை தடுக்கும். இடுப்பு பகுதியில் மசாஜ் பயிற்சி செய்வது பெரும்பாலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், குணப்படுத்தவும் ஊக்குவிக்கும். நாப்கின்களை தொடர்ந்து மாற்றி கொண்டே இருங்கள். அவை உங்கள் தையலின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்வதோடு, அதிக அளவில் தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலை தவிர்க்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    After a normal delivery also women need stitches

    Women think only cesarean delivery requires stitches, but the actual fact is, even in normal delivery also sometimes women need stitches. It will also make a woman uncomfortable for some time.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more