For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிசேரியனை பலமுறை செய்வதால், பெண்ணின் உடலில் ஏற்படும் தீவிர விளைவுகள்!

பிரசவ முறை பெண்களுக்கு பிரசவம் நிகழும் நொடியில் நன்மை செய்வது போல் செய்து, பின்னர் வாழ்நாள் முழுவதும் பெண்களை துன்புறுத்தும் தீவிர குறைபாடுகளை அவர்தம் உடலில் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாற

|

பெண்கள் கர்ப்பம் அடைந்து கர்ப்பகாலத்தின் முடிவில், தாங்கள் இத்தனை நாள் சுமந்து வந்த குழந்தையை பெற்று எடுக்க வேண்டிய தருணம் வரும் பொழுது அவர்களின் மனதில் மகிழ்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு பயமும் இருக்கும். என்ன முயன்றாலும் பெண்களின் மனதில் ஏற்படும் இந்த பயத்தை போக்குவது என்பது மிகவும் கடினமான விஷயமே!

Risks of Multiple C-Sections - Caesarean Sections

குழந்தையை காண போவதற்கான மகிழ்ச்சியும், பிரசவத்தை எதிர்கொள்ள போவதற்கான பயமும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு பெண்ணின் மனதை ஆக்கிரமித்து இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிசேரியன் வைக்கும் செய்வினை!

சிசேரியன் வைக்கும் செய்வினை!

பெண்கள் இந்த பிரசவ பயத்தால், குழந்தை பெற்றுக் கொள்வதை வெறுத்துவிட கூடாது, அவர்களின் அந்த வலியை எளிதாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டது தான் சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை பிரசவ முறை. இந்த பிரசவ முறை பெண்கள் பிரசவத்தின் பொழுது அனுபவிக்கும் வலியையும் வேதனையையும் குறைக்க கொண்டு வரப்பட்டது.

இந்த காரணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசவ முறை பெண்களுக்கு பிரசவம் நிகழும் நொடியில் நன்மை செய்வது போல் செய்து, பின்னர் வாழ்நாள் முழுவதும் பெண்களை துன்புறுத்தும் தீவிர குறைபாடுகளை அவர்தம் உடலில் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு பிரசவத்தால் நிகழும் குறைபாடுகள் என்னென்ன என்று இங்கு படித்து அறியலாம்.

குணமாகும் காலம்!

குணமாகும் காலம்!

ஒருமுறை சிசேரியன் பிரசவம் மேற்கொண்டாலே, அதனால் ஏற்பட்ட காயம் குணமாக பல காலம் ஆகும். அதாவது சிசேரியன் பிரசவத்தை பெண்கள் மேற்கொண்டால், அதனால் ஏற்பட்ட அறுவை சிகிச்சை காயங்கள் குணமாக 3 முதல் 6 மாத காலம் வரை ஆகும்; ஒரு சில பெண்களுக்கு அதற்கு மேலும் கூட ஆகலாம். மேலும் காயங்கள் ஆறவே இத்தனை மாதங்கள் ஆனால், அறுவை சிகிச்சையால் இழந்த உடலின் பலத்தை மீண்டும் பெற எத்தனை காலமாகும் என்று யோசித்து பாருங்கள்!

எதை பற்றியும் யோசிக்காமல், ஒரு குழந்தைக்கு பின் அடுத்தது என தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்தால், அதாவது திரும்ப திரும்ப சிசேரியன் செய்து கொண்டால் அவ்வளவு தான் பெண்கள் படுத்த படுக்கையாகி பரலோகம் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம்.

சிறுநீரக பாதிப்புகள்!

சிறுநீரக பாதிப்புகள்!

சிசேரியன் அறுவை சிகிச்சையின் பொழுது பெண்களின் வயிறு கிழிக்கப்பட்டு குழந்தை வெளியில் எடுக்கப்படுகிறது. வயிற்றை சுற்றிய பகுதிகளில் தான் சிறுநீரக உறுப்புகள், மலவாய் உறுப்புகள் மற்றும் பிற ஜீரண உறுப்புகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் திரும்ப திரும்ப பலமுறை சிசேரியன் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் பொழுது, அது சிறுநீரை சேமிக்கும் சிறுநீர் பையை கிழிக்கவோ அல்லது அதில் பாதிப்பு ஏற்படுத்தவோ அதிக வாய்ப்புகள் உள்ளன.

இரத்தக்கட்டு

இரத்தக்கட்டு

ஒவ்வொரு முறை சிசேரியன் பிரசவம் நிகழும் பொழுதும் பெண்ணின் உடலில் உள்ள இரத்தம் சிறு சிறு கட்டிகளாக மாறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கட்டிகள் ஏற்படும் நிலை அறியாமல் மீண்டும் மீண்டும் சிசேரியன் செய்து கொண்டே இருந்தால், இந்த பிரசவத்தால் உருவாகும் இரத்தக்கட்டிகள் பெரிதாகி இரத்த பிரவாகத்தில் பயணித்து நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது; இதனை பால்மனரி இன்பெக்ஷன் என்று கூறுகின்றனர்.

நஞ்சுக்கொடி

நஞ்சுக்கொடி

ஒவ்வொரு முறை சிசேரியன் பிரசவம் நிகழும் பொழுது நஞ்சுக்கொடி கீழே செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து கொண்டால், நஞ்சுக்கொடி கருப்பையின் உள்ளாக - கருப்பையின் உட்சுவருடன் ஒட்டிக்கொள்ளும் அல்லது சிறுபீராக உறுப்புக்களை அடையும் அபாயம் உள்ளது. நஞ்சுக்கொடியின் இந்த மாற்றம் பெண்களின் உடலில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

அறுவை சிகிச்சை அபாயம்

அறுவை சிகிச்சை அபாயம்

அறுவை சிகிச்சை என்பது அனைவர்க்கும் உயிர் பிழைப்போமா இல்லையா என்ற அச்சத்தைக் கொடுக்கும் ஒன்று; பிரசவம் என்பதே பெண்களின் மறுபிறப்பு என்பது தான். பெண்கள் சிசேரியன் பிரசவத்தில் மரண வாயிலுக்கு அனுப்பும் இரண்டு நிகழ்வுகளுடன் போட்டிப்போட்டு ஜெயித்து குழந்தையை பெற்று எடுக்கின்றனர்.

ஆனால் என்னதான் வெற்றிகரமாக குழந்தையை பெற்று எடுத்தாலும், மீண்டும் மீண்டும் சிசேரியன் பிரசவம் மேற்கொள்ளும் பொழுது, அந்த நேரத்தில் நிகழ்த்தப்படும் அறுவை சிகிச்சை பெண்ணின் உயிரை கண்டிப்பாக ஒருநாள் கொள்ளை கொள்ளும் என்பதை மறக்க வேண்டாம்.

இரத்தக் கசிவு

இரத்தக் கசிவு

சிசேரியன் பிரசவத்தின் பொழுது பெண்ணின் வயிற்றினை அறுத்து தான் உள்ளே வளர்ந்து வந்த குழந்தையை வெளி உலகிற்கு கொண்டு வருகின்றனர் மருத்துவர்கள்; அந்த சமயத்தில் பெண்ணின் வயிறு அறுக்கப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படும் பொழுது, அது அதிகமான இரத்தப்போக்கை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது; இந்த பிரச்சனை, எந்த ஒரு பெண் தொடர்ந்து சிசேரியன் பிரசவம் செய்து கொள்வாரானால் கண்டிப்பாக அவருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தைக்கும் அபாயம்

குழந்தைக்கும் அபாயம்

தொடர்ந்த சிசேரியன் பிரசவங்களை ஒரு பெண் மேற்கொள்ளும் பொழுது பெண்ணிற்கு உடல் பாதிப்புகள் ஏற்படுவதோடு, அவர்களின் உள் வளரும் குழந்தைகளுக்கும் உடல் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சிசேரியன் நடந்து முடிந்த பின் பெண்ணின் உடலில் பலவித உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன; இந்த பாதிப்புகள் அடுத்து அவர்தம் உள்ளே உருவாகப்போகும் குழந்தையை, குழந்தையின் வளர்ச்சியை ஏன் குழந்தை உருவாவதையே கூட தடுத்துவிட வாய்ப்பு உண்டு.

மேலும் தொடர்ந்த சிசேரியன் பிரசவத்தை மேற்கொள்வதால், குழந்தை பிறப்பு நிகழும் பொழுது குழந்தைக்கு மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பெண்ணிற்கு நோய்த்தொற்றுகள்

பெண்ணிற்கு நோய்த்தொற்றுகள்

பெண்ணின் வயிறு அறுக்கப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படுவதால், பெண்ணின் உடல் பலவீனம் அடைந்து இருக்கும். பலவீனம் கொண்ட உடல் தான் நோய்கிருமிகள் வாழும் - இராஜ்யம் நடத்தும் கூடாரம். எனவே, சிசேரியன் அறுவை சிகிச்சை நடந்த பெண்களின் உடலில் நோய்த்தொற்றுகளின் தாக்குதல் அதிகம் நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை கண்டிப்பாக பெண்ணின் உடலை நோய்கிருமிகள் அடங்கிய நோயாளி உடலாக மாற்றும் வாய்ப்பு உண்டு.!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Risks of Multiple C-Sections - Caesarean Sections

Risks of Multiple C-Sections - Caesarean Sections
Story first published: Monday, August 20, 2018, 12:09 [IST]
Desktop Bottom Promotion