TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
குடும்பக் கட்டுப்பாட்டுக்கு பின் கர்ப்பம் நிகழ்வது ஏன்? எப்படி தடுப்பது?
ஒவ்வொரு தம்பதியருக்குமே தங்களுக்கு என ஒரு குழந்தை பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்; சில தம்பதியர்களின் உடல் நலத்தையும், அவர்தம் மன ஆசையையும் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு என தொடங்கி அதிக பட்சமாக மூன்று அல்லது நான்கு என குழந்தைகளை பெற்றுக் கொள்வார்கள்.
பல தம்பதியர்களோ தங்களின் உடல் நிலை மற்றும் பொருளாதார நிலை மற்றும் குடும்ப சூழல் இவற்றை வைத்து குழந்தைகள் எத்தனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவினை எடுப்பார்கள்.
குடும்பக் கட்டுப்பாடு!
தம்பதியர் தங்களுக்கு போதுமான அளவு குழந்தைகளை பெற்றுக் கொண்ட பின், போதும் என்ற மனநிலைக்கு வந்து மேற்படி குழந்தை பிறக்காமல் தடுக்க வேண்டும் என்று செய்து கொள்ளும் ஒரு விஷயம் தான் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை! குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு முன் தம்பதியர் சிந்திக்க வேண்டியது, தங்களுக்கு குழந்தை போதுமா, பொருளாதார நிலை, குடும்ப சூழல் மற்றும் தங்களின் உடல் ஆரோக்கியம்!
ஆணோ பெண்ணோ!
குடும்பக் கட்டுப்பாடு முறை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்புடையது. தம்பதியரில் யாரின் உடல் நலம் நன்றாக இருக்கிறதோ, யாருக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய உடல் வலிமை உள்ளதோ அவர்கள் அதை செய்து கொள்ளலாம். ஆண்களில் செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு வாசக்டமி என்றும், பெண்களில் செய்யப்படும் அறுவை சிகிச்சை டியுபெக்டமி என்றும் அறியப்படுகிறது.
பதிப்பின் நோக்கம்!
நாம் இந்த பதிப்பில் ஆண்களில் செய்யப்படும் வாசக்டமி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின்னர் கூட, இந்த அறுவை சிகிச்சை செய்த ஆண்களின் மனைவிமார்கள் கர்ப்பம் தரிக்க முடியுமா? இல்லையா? அப்படி கர்ப்பம் தரித்தால் அதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பது பற்றி படித்த அறியலாம்.!
வாசக்டமி முறை!
வாசக்டமி முறை என்பது ஆண்களில் நிகழ்த்தப்படும் குடும்பக் கட்டுப்பாட்டு முறை ஆகும்; வாசக்டமி முறையில் ஆண்களின் விந்து அணுக்களை பிறப்புறுப்பின் நுனியில் கொண்டு சேர்க்கப்படும் குழாய்கள் வெட்டப்பட்டு முடிச்சிடப்பட்டு தனித்து விடப்படும். இதனால், ஆண்களின் உடலில் உருவாகும் விந்து அணுக்கள் பெண்ணின் உடலை அடைவது தடுக்கப்படும்.!
வாசக்டமிக்கு பின் கர்ப்பம்?!
வாசக்டமி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை ஆண்கள் செய்து கொண்ட பின் சில சமயங்களில் அவர்தம் மனைவிமார்கள் கர்ப்பம் தரிப்பது உண்டு. இது அனைவர்க்கும் நடைபெறாது; ஏனெனில் வாசக்டமி முறை நூறு சதவிகிதம் பலன் அளிக்க கூடியது; ஆனால் சில சமயங்களில் சிலருக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னும் அப்பாவாக மாறும் வாய்ப்பு கிடைக்கும்.
புள்ளி விவரம்!
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட மனைவிமார்களில், ஆயிரத்தில் ஒருவர் என அறுவை சிகிச்சை செய்து முடித்த முதல் வருடத்தில் கர்ப்பம் அடைய வாய்ப்பு உள்ளது; வேண்டும் என்றால் குழந்தையை வைத்து விடலாம்; இல்லையெனில் கலைத்து விடலாம். சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்து முடித்து ஐந்து அல்லது ஆறு வருடங்கள் முடிந்த பின் கூட சிலரின் மனைவிமார்கள் கர்ப்பம் அடைய வாய்ப்பு உண்டு; இது பத்தில் 2 என்ற கணக்கில் நிகழலாம்.
யார் காரணம்!?
இவ்வாறு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின் மனைவிமார்கள் கர்ப்பம் அடைய யார் காரணம் என்று கேட்டால், கணவன்மார்களான நீங்கள் தான் காரணம்! எப்படி என்றால், முன்னர் கொண்ட கலவியின் பொழுது பெண்ணுக்குள் நுழைந்த விந்து அணுக்கள் உயிரோடு இருந்து அது மீண்டும் அண்டத்தை துளைத்து கருவை உருவாக்க முயற்சிக்கும் பொழுது, கர்ப்பம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர மேலும் பல காரணங்கள் உள்ளன; அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து படித்து அறியலாம்.
கலவி கொள்ளுதல்!
குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொண்ட பின் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து கலவி கொள்ளுதல் நல்லது; ஏனெனில் அறுவை சிகிச்சைக்கு முன் ஆண்களின் உடலில் உற்பத்தி ஆன விந்து அணுக்கள், ஆணின் பிறப்புறுப்பு பகுதியில் உயிருடன் இருக்க வாய்ப்பு உண்டு; இந்த உயிருடன் உள்ள அணுக்களை பற்றி எண்ணாமல் கலவி கொண்டால், கட்டாயம் கர்ப்பம் ஏற்படலாம்.
அறுவை சிகிச்சை!
மேற்கொண்ட அறுவை சிகிச்சையை ஆணின் உடல் ஏற்று கொள்ளாமல் இருந்து, செய்த அறுவை சிகிச்சை தானாகவே முந்திய நிலையை அடைந்து விட்டால், அதாவது வெட்டப்பட்ட குழாய்கள் மீண்டும் இணைந்து விட்டால் கண்டிப்பாக கர்ப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது; மேலும் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் ஏதேனும் தவறு நடந்து இருந்து, சரியாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட வில்லை எனில் கட்டாயம் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உண்டு.
தலை கீழாக்குதல்!
சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்து முடித்த பின், மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டால், ஒன்றும் கவலைப்பட வேண்டாம்! மருத்துவரிடம் சென்று முன்பு செய்து கொண்ட அறுவை சிகிச்சையை திரும்ப தலை கீழாக்கி அதாவது, வெட்டப்பட்ட குழாய்களை முன்பு போல் இணைத்து வைத்து விட்டால், எந்த ஒரு பிரச்சனையும் இல்லை! இவ்வாறு விந்து அணுக்களை கடத்தும் குழாய்களை இணைத்த பின், நீங்கள் மறுபடியும் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்யலாம்!