For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்பில் பால் கட்டிக்கொள்ளாமல் இருக்கணும்னா என்ன செய்யணும்?

நீங்கள் உங்கள் புதிதாக பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நபரா? அப்படி என்றால் கண்டிப்பாக இந்த பிரச்சினையை சந்தித்து இருப்பீர்கள். தாய்ப்பால் மார்பகத்தில் கட்டிக் கொண்டு தீவிர வலியை உண்டாக்கும்

By Suganthi Rajalingam
|

நீங்கள் உங்கள் புதிதாக பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நபரா? அப்படி என்றால் கண்டிப்பாக இந்த பிரச்சினையை சந்தித்து இருப்பீர்கள்.

how to avoid milk duct problems

தாய்ப்பால் மார்பகத்தில் கட்டிக் கொண்டு தீவிர வலியை உண்டாக்கும். ஏன் உங்களால் எழுந்திருக்கவே முடியாமல் வேதனைக்குள்ளாகி விடுவீர்கள். அப்படியே மார்பக காம்பை சுற்றி அந்த பகுதியே கெட்டியாக, வலியுடன், சிவந்து காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள்

காரணங்கள்

முழுவதுமாக பால் கொடுக்காமல் இருப்பது, குழந்தையை சரியான நிலையில் அமர்த்தாமல் பால் கொடுப்பது, ப்ளூ, காய்ச்சல், இறுக்கமாக உடை அணிவது, பால் வற்றாமல் இருத்தல், மன அழுத்தம், தூக்கமின்மை, தூங்கும் போது மார்பக பகுதியை அழுத்தி படுத்தல் போன்ற காரணங்களால் பால் கட்டுதல் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

சரியாக பால் சுரக்காமல் இருப்பது, சிவந்து காணப்படுதல், மார்பக பகுதியை சுற்றி வலி வேதனை, காய்ச்சல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் தீவிர மார்பக தொற்று ஏற்பட்டு முலையழற்சி ஏற்பட்டு விடும். எனவே இந்த பிரச்சினைக்கு கீழ்க்காணும் வீட்டு முறைகளை மேற்கொண்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

பால் கொடுக்கும் முறை

பால் கொடுக்கும் முறை

பால் கொடுக்கும் முறையை மாற்றுவதன் மூலம் பால் கட்டுவதை தவிர்க்கலாம். பால் முற்றிலுமாக வற்றும் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவும்.உங்கள் குழந்தையின் பசி சீக்கிரம் அடங்கி விட்டால் பால் சேகரிக்கும் கருவி கொண்டு சேகரித்து வைத்துக் கொள்ளவும். குழந்தையை அமர்த்தி பால் கொடுக்கும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். மார்போடு அணைத்து குழந்தையின் தாடை மார்பகத்தை படும் படி வைத்து மார்பக காம்பை சுவைக்க விடவும். சரியான அமைப்பில் பால் கொடுப்பதன் மூலம் பால் கட்டுவதை தவிர்க்கலாம்.

மசாஜ்

மசாஜ்

உங்கள் கைகளைக் கொண்டே மார்பகத்தை நன்றாக மசாஜ் செய்து விடவும். ஆள் காட்டி விரல் மட்டும் பெருவிரலை வைத்து மார்பக காம்பின் வழியாக பாலை அமுக்கி எடுத்து சேகரிக்கலாம். இதன் மூலம் கொஞ்சம் ரிலீவ் கிடைக்கும்.

பூண்டு

பூண்டு

பூண்டில் உள்ள ஆன்டிபயாடிக் முலையழற்சி வருவதை தடுக்கிறது. எனவே பச்சை பூண்டை நசுக்கி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் வலி குறையும். தேன் மற்றும் பூண்டை தண்ணீர் கலந்து பேஸ்ட்டாக்கி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முட்டைகோஸ் ஒத்தடம்

முட்டைகோஸ் ஒத்தடம்

முட்டைகோஸ் இலைகளை மைக்ரோவேவ் ஓவனில் லேசாக சூடுபடுத்தி மார்பக பகுதியில் வைத்து வெதுவெதுப்பாக மற்றும் குளிராக என்று மாறி மாறி 2-3 நிமிடங்கள் என்று ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என செய்து வர வேண்டும். பால் கட்டியுள்ள பகுதிகள் நிவாரணம் பெறும்.

குறிப்பு :முட்டைகோஸ் இலைகளை அதிகம் சூடாக்குவதை தவிர்த்து விடுங்கள்.

உருளைக்கிழங்கு ஒத்தடம்

உருளைக்கிழங்கு ஒத்தடம்

பால் கட்டுவதால் ஏற்படும் அழற்சியை போக்க உருளைக்கிழங்கு ஒத்தடம் பெரிதும் பயன்படுகிறது. ப்ரஷ்ஷான உருளைக்கிழங்கை பிரிட்ஜில் சில மணி நேரம் வைத்து பிறகு அதை துருவி மார்பகத்தில் அப்ளே செய்ய வேண்டும். பிறகு ஒரு சுத்தமான துணியை கொண்டு சில நிமிடங்கள் மூடிக் கொள்ள வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என செய்து வந்தால் பால் கட்டுவதை தளர்த்து அழற்சி ஏற்படுவதை தடுக்கிறது.

விட்டமின் சி உணவுகள்

விட்டமின் சி உணவுகள்

விட்டமின் சி உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ளும் போது அழற்சி ஏற்படுவதை தடுத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரஞ்சு, திராட்சை, பிரக்கோலி, தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, பச்சை மிளகாய், கிவி பழங்கள், பரங்கி காய் போன்றவற்றை சாப்பிட்டு வந்தாலே போதும்

அன்னாசி பழம்

அன்னாசி பழம்

அன்னாசி பழத்தில் உள்ள புரோமெலைன் அழற்சியை தடுத்து பால் கட்டுவதை தடுக்கிறது. ஒரு நாளைக்கு என அன்னாசி பழம் ஜூஸ் பருகி வந்தால் பால் கட்டுவது சரியாகிவிடும். அதோடு குழந்தைக்கும் தாய்க்கும் அஜீரணக் கோளாறுகள் ஏதும் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.

வினிகர்

வினிகர்

வினிகர் இயற்கையாகவே ஒரு அமிலம் என்பதால் மார்பகத்தில் கட்டியுள்ள பாலை கலைத்து விடுகிறது. ஒரு காட்டன் பஞ்சில் வினிகரை நனைத்து மார்பக காம்புகளில் சில நிமிடங்கள் வைத்தாலே போதும் நல்ல தீர்வு கிடைக்கும்.

சூடான குளியல்

சூடான குளியல்

நல்ல வெதுவெதுப்பான நீரைக் கொண்டு ஊற்றி மார்பகத்தை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தாலே போதும் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு :அதிக சூடான நீரை பயன்படுத்தாதீர்கள். சருமம் பொத்து விடும் வாய்ப்புள்ளது.

நீர்ச்சத்து

நீர்ச்சத்து

ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தாலே போதும் பால் கட்டுதல், அழற்சி போன்றவை அண்டாது. இதுவரையில் உங்களுக்காக மட்டுமே தண்ணீர் குடித்திருப்பீர்கள். ஆனால் இனி உங்களுடைய குழந்தைக்காகவும் சேர்த்து குடிக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

குளிக்கும் போது டப்பில் எப்சம் உப்பு சேர்த்து கரைத்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் பால் கட்டுதல் சரியாகி விடும்.

குறிப்பு : குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன் மார்பக காம்பை துடைத்து விட்டு கொடுங்கள். இதனால் உப்பின் சுவை இருக்காது.

டீ பேக்

டீ பேக்

சூடான கடும் டீ பேக் வைத்து மார்பக பகுதியை ஒத்தடம் கொடுப்பதன் மூலம் பால் கட்டியிருப்பதை கலைக்கலாம். கிரீன் டீ பேக்காக இருந்தால் இன்னும் சிறப்பு. அது மார்பகத் துளைகளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புத்துணர்வையும் தரும்.

சாம்பல் துகள்கள்

சாம்பல் துகள்கள்

பாதிக்கப்பட்ட பகுதியில் செயலாக்கப்பட்ட கரித்தூளை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என அப்ளே செய்து வந்தால் அழற்சி, வீக்கம், பால் கட்டுதல் போன்றவற்றிலிருந்து விடுபடலாம். கரித்துகள்கள் கிடைக்காதவர்கள் மற்ற டிப்ஸ்களை முயற்சி செய்யலாம்.

ஜஸ் ஒத்தடம்

ஜஸ் ஒத்தடம்

ஜஸ் கட்டியை நன்றாக நொறுக்கி ஒரு துணியில் கட்டி மார்பக பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால் பால் காட்டியிருப்பது தளர்ந்து தாய்க்கும் பால் நன்றாக ஊறும். மார்பகங்களும் நன்கு மென்மையாக இருக்கும். குழந்தைக்கு அசௌகரியம் உண்டாகாமல் இருக்கும்.

லெசிதின்

லெசிதின்

லெசிதின் என்பது தாவர விலங்கிலிருந்து பெறப்பட்ட ஒரு வகை மஞ்சள் மற்றும் பழுப்பு நிற கொழுப்பு. எனவே இவை மார்பகத்தில் பால் கட்டுவதற்கு காரணமான கொழுப்பு அமிலங்களை உடைக்கிறது. எனவே இதை ஒரு நாளைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் என சாப்பிட்டு வந்தால் நல்லது.

குறிப்பு- மருத்துவர் கூறும் அளவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

அரிசி பேக் ஒத்தடம்

அரிசி பேக் ஒத்தடம்

1 கப் அரிசியை ஒரு சாக்ஸ்யில் போட்டு அதன் வாய் பகுதியை ரப்பர் பேண்ட் கொண்டு கட்டி மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்தவும். பிறகு அதனுடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் வரை சூடுபடுத்தவும். இந்த பேக்கை குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பு மார்பக பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால் பால் கட்டுவதை தவிர்க்கலாம்.

ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகர்

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர், தேன் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை என குடித்து வந்தால் பால் கட்டுவது குணமாகும். ஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் மற்றும் அலற்சி எதிர்ப்பு பொருள்கள் போன்றவை மார்பக பகுதியில் ஏற்படும் அழற்சிக்கு எதிராக செயல்பட்டு பரவுவதை தடுக்கிறது. 1பங்கு ஆப்பிள் சிடார் வினிகருடன் இரண்டு பங்கு வெதுவெதுப்பான நீர் சேர்த்து ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து மார்பக பகுதியில் தடவ வேண்டும். ஒரு நாளைக்கு 2-3 தடவை செய்து வந்தால் தொற்று படிப்படியாக குறைந்து விடும்.

அக்குபஞ்சர்

அக்குபஞ்சர்

பால் கட்டுவதை கலைய அக்குபஞ்சர் பயிற்சி சிறந்த முறையாகும். எனவே அக்குபஞ்சர் எக்ஸ்பட்டிடம் இது குறித்து ஆலோசனை செய்து மேற்கொள்வது நல்லது. விருப்பமும் அனுபவமும் உள்ளவர்கள்

புரோபயோடிக்

புரோபயோடிக்

எல். பெர்மென்டம், எல். சலிவாரியஸ் போன்ற புரோபயோடிக் பால் கட்டுவதை தடுக்கிறது. இந்த இரண்டு புரோபயோடிக் பால் கட்டுவதில் ஈடுபடும் பாக்டீரியாக்களை அழிக்கிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெர்பல் முறைகள்

ஹெர்பல் முறைகள்

இதுபோன்ற குறிப்புகள் மட்டுமல்லாது, ஹெர்பல் ஆயில்கள் சிலவற்றைப் பயன்படுத்தியும் தாய்மார்களின் பால் சுரப்பியைத் தூண்டி, பால் ஊறுவதை அதிகரிக்கச் செய்ய முடியும். அப்படிப்பட்ட பயனுள்ள சில ஹெர்பல் ஆயிலைப் பற்றி இங்கே காணலாம்.

லாவண்டர் எஸன்ஷியல் ஆயில்

லாவண்டர் எஸன்ஷியல் ஆயில்

லாவண்டர் எஸன்ஷியல் ஆயில் பால் கட்டுவதில் ஏற்படும் அழற்சியை தடுத்து வலியை போக்குகிறது. சில சொட்டுகள் லாவண்டர் எஸன்ஷியல் ஆயில் மற்றும் 1 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மார்பக பகுதி, அக்குள் பகுதி போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளை மசாஜ் செய்ய வேண்டும். பிளவுபட்ட மார்பக காம்புகளை சரி செய்யவும் இது உதவுகிறது.

பைட்டோலேக்கா

பைட்டோலேக்கா

இது பால் கட்டுவதை குணப்படுத்தும் ஒரு வகை ஹெர்பல் சிகச்சை முறையாகும்.இந்த மூலிகை நிணநீர் மண்டலத்தை தூண்டி பால் கட்டுவதில் ஏற்படும் அழற்சி, முலையழற்சி போன்றவற்றை சரி செய்கிறது.

குறிப்பு : மருத்துவர் பரிந்துரைக்கும் அளவை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் மார்பக சருமத்தை மென்மையாக்கி பால் கட்டுவதை தவிர்த்து அழற்சி யிலிருந்து காக்கிறது. ஒரு காட்டன் பஞ்சில் ஆலிவ் ஆயிலை நனைத்து மார்பக காம்புகளில் வைத்து கொள்ள வேண்டும். சில நாட்களில் நல்ல பலனை காணலாம்.

ஹெர்பல் எஸன்ஷியல் ஆயில்

ஹெர்பல் எஸன்ஷியல் ஆயில்

பட்டை, ரோஸ் மேரி, கிராம்பு, யூகாப்லிட்டஸ் மற்றும் லெமன் எஸன்ஷியல் ஆயிலை கலந்து மார்பக பகுதியில் தடவி வந்தால் கட்டியுள்ள பால் கலைந்து நிவாரணம் கிடைக்கும். படுப்பதற்கு முன்னும் இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் நல்ல நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும். 48 மணி நேரத்தில் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

ஆர்கனோ ஆயில்

ஆர்கனோ ஆயில்

இது ஒரு இயற்கையான ஆன்டி பயாடிக் மாதிரி செயல்படுகிறது. சில துளிகள் மார்பக பகுதியில் தடவி மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 2 சொட்டுகள் ஆர்கனோ ஆயிலை ஜூஸ் உடனோ அல்லது தண்ணீர் உடனோ கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை என பருகி வந்தால் பால் காட்டியிருப்பது கலைந்து விடும்.

குறிப்புகள் - இந்த ஆயிலில் அதிகமான ஆன்டி பயாடிக் பொருட்கள் இருப்பதால் 5 நாட்களுக்கு மேல் இதை பயன்படுத்தாதீர்கள்.

காலெண்டுலா

காலெண்டுலா

காலெண்டுலா மருந்து மார்பக காம்பை வலுவாக்கி பால் கட்டியிருப்பதை கலைக்கிறது. ஆனால் உபயோகித்த பிறகு மார்பக பகுதியை நன்றாக கழுவி விடுவது நல்லது.

குறிப்பு- இதை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை ஆலோசித்து கொள்வது நல்லது.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லை மார்பக பகுதியில் தடவினால் பால் கட்டுதல், மார்பக காம்புகளில் இருக்கும் புண்கள், பிளவுகள் போன்றவை சரியாகி விடும். அதேபோல் மார்பகங்களில் ஏதேனும் பூஞ்சைத் தொற்றுக்கள், அழற்சி போன்றவை இருந்தாலோ அதை கற்றாழை சரிசெய்து விடும். மார்பகங்களும் பளபளப்பாகவும் தளர்ந்து போகாமலும் இருக்கும்.

காம்ப்ரே (மூக்குத்தி பூ)

காம்ப்ரே (மூக்குத்தி பூ)

காம்ப்ரே களிம்பை மார்பக பகுதியில் தொடர்ச்சியாக தடவி வந்தால் மார்பகம் மென்மையாகுவதோடு காம்புகள் வலிமையடைதல், புண்கள், பிளவுகள் போன்றவை குணமாகுகிறது. கொஞ்சம் காம்ப்ரே இலைகளை ஒரு காட்டன் துணியில் வைத்து ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி 10-15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பிறகு அதைக் கொண்டு ஒத்தடம் கொடுக்கும் போது காம்பு புண்கள் குணமாகும்.

குறிப்பு- மருத்துவரை ஆலோசித்து பயன்படுத்துவது நல்லது. மார்பகத்தை சுத்தமாக துடைத்து விட்டு ஒத்தடம் கொடுப்பது நல்லது. கல்லீரல் பாதிப்பு குழந்தைக்கு இது ஏதுவானது அல்ல.

யாரோ (காரப்பூடு மூலிகைச் செடி)

யாரோ (காரப்பூடு மூலிகைச் செடி)

யாரோ இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் களிம்பை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வந்தால் உடனடி வலி நிவாரணம் கிடைக்கும். பிளவுபட்ட காம்புகளை குணப்படுத்த இது பயன்படுகிறது.

மார்ஸலோ தாவரம்

மார்ஸலோ தாவரம்

மார்ஸலோ வேர்கள் புண்ணான காம்புகள், பால் கட்டுதல், திசுக்கள் மென்மையாதல், தொற்றுகளை தவிர்த்தல், மார்பகத்தில் ஏற்படும் அழற்சி போன்றவற்றை குணமாக்குகிறது. 2 அவுன்ஸ் உலர்ந்த மார்ஸலோ வேரை 1/2 கலன் தண்ணீரில் இரவில் ஊற வைத்து காலையில் கொதிக்க விடவும். வழுக்கும் தன்மை வந்ததும் அந்த வெதுவெதுப்பான நீரை மார்பக பகுதியில் தடவி வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

ஒரு ஈரமான வெதுவெதுப்பான துணியில் சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து மார்பக பகுதியில் வைத்து சூடான பேக் அதன் மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். பால் கொடுப்பதற்கு 20 நிமிடங்கள் முன்னாடி இதை செய்யவும்.சில மணி நேரத்திற்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெதுவாக மசாஜ் செய்து வந்தால் பால் கட்டுவதை தவிர்க்கலாம்.

குறிப்பு- விளக்கெண்ணெய்யை மார்பக காம்புகளில் தடவ வேண்டாம்.

பால் கொடுப்பதற்கு முன் நன்றாக துடைத்து விட்டு குழந்தைக்கு கொடுக்கவும். ஏனெனில் குழந்தைக்கு விளக்கெண்ணெய் எளிதாக சீரணிக்காது.

பார்சிலி

பார்சிலி

ஒரு கைப்பிடியளவு பார்சிலி இலைகளை எடுத்து ஒரு சுத்தமான காட்டன் துணியில் வைத்து ஒரு ரப்பர் பேண்ட் போட்டு கட்டி ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும். இந்த சூடான பார்சிலியை வலி மற்றும் வீக்கம் உள்ள மார்பக பகுதியில் வைத்து ஒத்தடம் கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முலையழற்சி போன்றவற்றை தடுக்கவும் உதவுகிறது

மேலும் உலர்ந்த பார்சிலி இலைகளை பால் கட்டப்பட்ட இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

டீ ட்ரி ஆயில்

டீ ட்ரி ஆயில்

ஒரு பெளலில் சில துளிகள் டீ ட்ரி ஆயில் மற்றும் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நன்றாக கலக்கி கொள்ளவும். இதை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வந்தால் இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் தொற்றிற்கு எதிராக செயல்படுகிறது.

குறிப்பு- பால் கொடுப்பதற்கு முன் மார்பகத்தை நன்றாக கழுவி விட்டு பால் கொடுங்கள்.

போக் ரூட்

போக் ரூட்

இது நிணநீர் சுரப்பியை தூண்டி பால் கட்டுவதை தடுக்கிறது. இதற்கு ஒரு பானையில் வெதுவெதுப்பான நீரில் இதன் சாற்றை பிழிந்து அதில் ஒரு துணியை நனைய விடுங்கள். நன்றாக துணியை பிழிந்து எடுத்து பாதிக்கப்பட்ட மார்பக பகுதியில் வைக்க வேண்டும்.

குறிப்பு- இது இயற்கையாகவே நச்சுத்தன்மை வாய்ந்ததால் இரண்டு துளிகளுக்கு மேல் இதை பயன்படுத்த கூடாது. தண்ணீர் அதிக சூட்டில் இருக்க கூடாது.

ஏசினாஸெஅ

ஏசினாஸெஅ

ஏசினாஸெஅ வேரிலிருந்து பெறப்படும் மருந்து பால் கட்டுவதை கலைகிறது. உங்கள் பவுண்ட் உடல் எடையில் பாதி அளவில் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக உங்கள் பவுண்ட் 120 என்றால் 60 துளிகள் பயன்படுத்தலாம். இதை ஒரு நாளைக்கு 3-5 முறை தடவி வந்தால் பால் கட்டுவதை தவிர்க்கலாம்.

கெமோமில்

கெமோமில்

கெமோமில் இலைகளை ஒரு பெளலில் எடுத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பிறகு குளிர்ந்த பிறகு இந்த தண்ணீரை பாதிக்கப்பட்ட மார்பக பகுதியில் ஒரு நாளைக்கு பல முறை தடவி வந்தால் மார்பக அழற்சி, வீக்கம், பால் கட்டுதல் போன்றவற்றை தவிர்க்கலாம். தினமும் கெமோமில் டீ பருகி வந்தால் நல்ல ரீலீவ் கிடைக்கும்.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

தொடர்ச்சியாக குழந்தைக்கு பால் கொடுத்து வந்தால் பால் கட்டுதல் ஏற்படாது

மார்பக பகுதி மற்றும் காம்புகளை காற்றோட்டமாக வைத்திருப்பதன் மூலம் பால் சுரப்பை கட்டுப்படுத்தலாம். லேசாக சூரிய ஒளி உள்ளே போகும் படி மார்பகத்தை வைத்து இருந்தால் திசுக்கள் வலுவடையும். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஏதுவான முறையில் பால் அமர்த்துவதை தேர்ந்தெடுங்கள்.

செய்யக் கூடாதவை

செய்யக் கூடாதவை

பவுடர், பெர்மியூம், டியோ ட்ரெண்ட் போன்ற நறுமண பொருட்களை பயன்படுத்தக் கூடாது. சோப்பை கொண்டு அடிக்கடி மார்பக காம்புகளை கழுவதை தவிருங்கள். இது புண்கள், பிளவுகள் ஏற்பட காரணமாகி விடும். 24 மணி நேரமும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதை தவிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: pain வலி
English summary

35 Simple Home Remedies for Blocked Milk Duct

Are you a nursing mother suffering from the blocked milk duct problem? Do you want to get rid of the pain in your breast resulting due to clogged milk duct? If yes, then following certain easy home remedies can help you treat the blocked milk duct problem effectively.
Story first published: Friday, April 13, 2018, 9:37 [IST]
Desktop Bottom Promotion