For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதிதாக தாயான பெண் தூக்கத்தை தொலைப்பதற்கு முக்கிய காரணம் என்ன?

By Bala Karthik
|

நீங்கள் ஒரு சிசுவிற்கு உயிர்கொடுத்து உலகிற்குள் வரவழைத்து, அத்துடன் உங்கள் கடமையானது முடிந்துவிடும் என்பதல்ல. அதன் பின், தினமும் அந்த குழந்தை அழும், குழந்தைக்கு உணவு தேவைப்படும், அல்லது கழிவை வெளியேற்றும்.

உங்கள் உடம்பானது குணமடைய வேண்டும். உங்களுக்கு வலி மற்றும் சிரமங்கள், தலை முதல் கால் வரை உண்டாகக்கூடும். நீங்கள்... உங்கள் குழந்தையின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

Sleep Deprivation: What Are The Signs & How Can A New Mom Cope With This

இந்த நேரத்தில் உங்கள் பெற்றோரும் சரி, தாத்தா பாட்டியும் சரி...உங்கள் குழந்தை உடன் இருந்து கவனித்துகொள்வது வழக்கம். அவர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களும் முக்கியத்துவம் வகிப்பதும் வழக்கமே.

குழந்தையின் தாய் ஓய்வை நாட...குடும்பத்தின் மூத்த உறுப்பினர் நாட்டுப்புற பாடலை பாடி தூங்க வைப்பார். ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக மாறியதால்...தனிக்குடும்பமே எங்கும் தலைதூக்கி நிற்கிறது. அக்குழந்தையின் தாய்க்கு...தாய்மை என்பது புதுவித அனுபவத்தை தந்து அவளுக்கு கற்பிக்க தொடங்குகிறது.

தூக்கம் இழப்பு என்பது புதிய பெற்றோருக்கு பெரும் பக்கவிளைவினை உண்டாக்குகிறது. ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதும், இந்த தூக்கம் இழப்பினை பழகிகொள்வதும் ஒரு குழந்தையை புதிதாய் ஈன்றவளுக்கு முக்கியமானதாக இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து ஐந்து நாளைக்கு தினமும் 4 மணி நேரத்திற்கு குறைவாய் தூங்குவீர்கள் என்றால்...தூக்கம் இழப்பினால் ஏற்படும் அறிகுறிகள் உங்களை தொற்றிகொள்ள கூடும்.

உங்களுக்கு குழந்தை பிறந்தபிறகு...நல்ல தூக்கம் தொடர்ந்து கிடைக்காமல் போக... நீங்கள் சிரமப்படுவது இயற்கையே. அவ்வாறு இருக்க..அதற்கான அறிகுறிகள் உங்களுக்கு எவை எல்லாம் இருக்கும்? அதனை எப்படி நீங்கள் எதிர்கொள்வது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கமின்மையின் அறிகுறிகள்:

தூக்கமின்மையின் அறிகுறிகள்:

நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். நீங்கள் எரிச்சலான மற்றும் சிக்கலான மன நிலையை உணர்வீர்கள். நீங்கள் திசைதிருப்ப பட்டு விலகியே இருப்பீர்கள்.

நீங்கள் சிறிய விஷயங்களுக்கு கூட உணர்ச்சி வசப்படுவீர்கள். நீங்கள் தொடர்பு கொள்ள தடுமாறுவதுடன்...சரியானதை கண்டுபிடிக்கவும் கஷ்டப்படுவீர்கள்.

அதிக மனஅழுத்தத்துடன் காணப்படுவீர்கள். நீங்கள் நார்மலாக இருப்பதை விட...குறைவாக அல்லது அதிக பசியுடன் காணப்படுவீர்கள். ஒரு சிறிய வேலையை கூட நிதானமாக செய்ய முடியாமல் தவித்து தான் போவீர்கள்.

எப்படி சரிப்படுத்தலாம் :

எப்படி சரிப்படுத்தலாம் :

உஷார் நிலை என்பது காஃபினை சார்ந்து இல்லை. நீங்கள் பருகும் தேனீரிலோ அல்லது காபியிலோ காஃபின் இருந்தால்... அது, உங்கள் உடலில் இருக்கும் ஆற்றலை வேகமாக இழக்க வழிவகை செய்கிறது.

#2

#2

உங்கள் மன நிலையை உணர...உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நன்மையை உங்களுக்கு தரும். இது உங்கள் மனதில் கடைசியாக இருந்தாலும்...உடற்பயிற்சி செய்வதன் மூலம் எச்சரிக்கையும், மனதினை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலும் உங்களுக்கு கிடைக்கும்.

கர்ப்பத்தினால் எடை இழப்பது இயற்கையே. அதனால், அதனை பற்றி தீவிரமாக சிந்திக்க தேவையில்லை. யோகா மற்றும் லைட் ஏரோபிக்ஸ் ஆகியவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் தேர்ந்தெடுப்பது நல்லதாகும்.

#3

#3

உங்கள் வேலைகளை பற்றிய கவலையை தவிர்த்திடுங்கள். குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை இழுத்துபோட்டுகொண்டு செய்வதனை அறவே நீக்குங்கள்.

எந்த வேலையை முதலில் செய்ய வேண்டுமென முன்னுரிமை கொடுத்து செய்யுங்கள். குறிப்பாக இரண்டு வேலைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து மற்ற வேலைகளை தவிர்க்க முற்படுவது நல்லதாகும்.

 #4

#4

ஓய்வுக்கான ஒவ்வொரு நிமிடத்தையும் வேறு வேலைகளுக்கு ஒதுக்காமல் ஓய்வுக்கு மட்டுமே செலவிட பழகிகொள்ளுங்கள். எப்போதும் தூங்கும் நேரத்தை ஒரேமாதிரி தொடருங்கள். ஒருபோதும் நேரத்தை மாற்றாதீர்கள். அப்படி வேறு எதாவது இடையூறுகள் ஏற்பட்டாலும்...கண்டிப்பாக சில மணி நேர தூக்கம் என்பது உங்களுக்கு அவசியம் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

#5

#5

ஆரோக்கியமான உணவினை மட்டும் உண்ணுங்கள். ஒருவேளை மிகவும் அசதியாக உணர்ந்தால்...இரத்த அளவினை பரிசோதித்து பாருங்கள். உங்களுடைய இரும்பு சத்து குறைவாக இருக்குமாயின்...டாக்டரின் ஆலோசனை பெற்று இரும்பு சத்தினை அதிகரிக்க செய்யும் உணவு பொருட்களை உணவோடு சேர்த்து கொள்ளுங்கள்

 #6

#6

ஒருவேளை நீங்கள், வேலை செய்ய தொடங்கிவிட்டால்...கிடைக்கும் ஓய்வு நேரங்களிலோ அல்லது மதிய உணவு இடைவேளையிலோ கண் அயர்ந்து தூங்க முயற்சி செய்யுங்கள். அதேபோல் காலையில் முக்கிய பணிக்கான ஒரு நேரத்தை திட்டமிட்டு ஒதுக்கிகொள்ளுங்கள். அத்துடன் மீட்டிங்க் போன்றவற்றையும் காலையில் ஒதுக்கிகொள்வது மிகவும் நல்லதாகும்.

 #7

#7

ஒருவேளை நீங்கள், வேலை செய்ய தொடங்கிவிட்டால்...கிடைக்கும் ஓய்வு நேரங்களிலோ அல்லது மதிய உணவு இடைவேளையிலோ கண் அயர்ந்து தூங்க முயற்சி செய்யுங்கள். அதேபோல் காலையில் முக்கிய பணிக்கான ஒரு நேரத்தை திட்டமிட்டு ஒதுக்கிகொள்ளுங்கள். அத்துடன் மீட்டிங்க் போன்றவற்றையும் காலையில் ஒதுக்கிகொள்வது மிகவும் நல்லதாகும்.

கோபம் :

கோபம் :

உங்களுக்கு கோபம் திடீரென கூட வரலாம். அதனால், மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க ஒருபோதும் வெட்கபடாதீர்கள். நீங்கள் சொல்லும் ஒன்றினால், உங்களை சுற்றி இருக்கும் கணவன், குழந்தை மற்றும் பலர் மனம் புண்பட்டு எதாவது சொன்னால்... நீங்கள் சொல்ல வந்ததனை தெளிவுபடுத்தி மன்னிப்பு கேட்டு சரணடைந்துவிடுங்கள்.

இரவு நேரத்தில், குழந்தைக்கு பால் கொடுப்பதனால்...தூக்கத்தை பெற உங்கள் மனம் மறுக்கும். அதனால், நீங்கள் பால் அல்லது மிருதுவான பானங்களை பருக முயற்சி செய்வது நல்லதாகும். மேலும் நீங்கள் அத்தியாவசிய ஆயிலான லாவெண்டர் எண்ணெயை, பயன்படுத்துவது உங்கள் தூக்கத்துக்கு பெரிதும் உதவுகிறது

#2

#2

ஓய்வு யோகாவான பிரணயமா மற்றும் யோக நித்ரா செய்வதன் மூலம், உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கிறது. நீங்கள் செய்யாத வேலைகளை மறந்து உங்களிடமே மன்னிப்பு கேட்டுகொள்வது அவசியமாகும்.

‘இதுவும் கடந்து போகும்' என்பதனை மனதில் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தை இரவில் வெகு சீக்கிரம் தூங்கிவிட்டால்...அந்த நேரத்தை உங்கள் ஓய்வுக்கு பயன்படுத்திகொள்வது நல்லதாகும். இந்த சிந்தனைகளை உங்கள் மனதில் பதிய வைத்துகொண்டு பயன்படுத்துவது நன்மை பயக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sleep Deprivation: What Are The Signs & How Can A New Mom Cope With This

Sleep Deprivation: What Are The Signs & How Can A New Mom Cope With This
Story first published: Saturday, June 10, 2017, 14:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more