Just In
- 25 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 50 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Movies விஜய் கையில் இவ்வளவு பெரிய காயமா?.. வெளியான புகைப்படம்.. ரசிகர்கள் சோகம்
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிரசவத்திற்கு பின் கரீனா கபூர் சிக்கென்று மாறியதன் ரகசியம் தெரியுமா?
இங்கு பிரசவத்திற்கு பின் கரீனா கபூர் சிக்கென்று மாறியதன் ரகசியம் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பிரசவத்திற்கு பின் பெண்கள் தங்களது பழைய உடலமைப்பைப் பெற கஷ்டப்படுவார்கள். ஆனால் சினிமா நடிகைகளால் மட்டும் எப்படி பிரசவத்திற்கு பின் சிக்கென்று மாறுகிறார்கள் என்று பலருக்கும் தோன்றும். அதிலும் சமீபத்தில் பிரசவித்த நடிகை கரீனா கபூர், இரண்டே மாதத்தில் மீண்டும் சிக்கென்று தனது பழைய உடலமைப்பைப் பெற்றுள்ளார்.
அதுவும் கர்ப்ப காலத்தில் 18 கிலோ எடை அதிகரித்த கரீனா கபூர், குறைந்த காலத்தில் எடையை குறைத்து சிக்கென்று மாறியது என்பது ஆச்சரியத்தை தான் உண்டாக்கும். உங்களுக்கு கரீனா கபூர் பிரசவத்திற்கு பின் சிக்கென்று மாற என்னவெல்லாம் செய்தார் என்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் இக்கட்டுரையில் அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பெரிய டம்ளர் பால்
கரீனா கபூர் பிரசவத்திற்கு பின் உடல் வலிமையை அதிகரிக்க தினமும் ஒரு பெரிய டம்ளர் பாலைக் குடித்து வந்தாராம். பொதுவாக கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திறகு பின் கால்சியம் உடலில் குறைவாக இருக்கும். இதை ஈடுகட்ட கரீனா பாலைக் குடித்து வந்துள்ளார். கரீனா கபூர் தன் பழை உடலமைப்பைப் பெற இதுவும் ஒரு காரணமாகும்.
தண்ணீர்
கரீனா கபூர் ஒரு நாளைக்கு 8 டம்ளருக்கும் அதிகமான அளவில் நீரைக் குடித்ததும், அவரது சிக்கென்ற ரகசியத்திற்கு காரணம். அதுவும் பிரசவத்திற்கு பின் நன்கு கொதிக்க வைத்த நீரை அதிகளவில் குடித்தாராம்.
யோகா
கரீனா விரைவில் சிக்கென்று மாறியதற்கு யோகாவும் ஒரு காரணம். யோகாவால் உடல் மட்டுமின்றி, மனமும் நன்கு ரிலாக்ஸ் ஆக இருக்கும். அதுவும் கரீனா கபூர் சூரிய நமஸ்கார், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் பின்பற்றினாராம்.
சைவ உணவு
கரீனா கபூர் சுத்தமான சைவ பிரியர். இவர் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் முசிலி, சீஸ், பிரட் துண்டு, பரோட்டா, சோயா பால், சப்பாத்தி, தால், சாலட் மற்றும் சூப் போன்றவற்றை தான் உட்கொண்டாராம். இவர் மீண்டும் பழைய உடலமைப்பைப் பெற இந்த டயட்டும் ஓர் காரணம் என்றும் கரீனா கூறுகிறார்.
2 மணிநேரத்திற்கு ஒருமுறை ஸ்நாக்ஸ்
கரீனா கபூர் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை ஸ்நாக்ஸ் சாப்பிடுவாராம். அதுவும் ஸ்நாக்ஸாக புரோட்டீன் ஷேக் மற்றும் பழங்களைத் தான் உட்கொண்டாராம்.
கார்டியோ பயிற்சி
யோகா மற்றும் டயட்டுடன், கரீனா கபூர் கார்டியோ பயிற்சியையும் மேற்கொண்டு வந்தாராம். இதுவும் சிக்கென்ற உடலமைப்பைப் பெற்றதற்கான ரகசியங்களுள் ஒன்றாம்.
நடைப்பயிற்சி
ஆண் குழந்தை பிறந்த பின் கரீனா கபூர் நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் நடைப்பயிற்சியை மேற்கொண்டாராம். பொதுவாக பிரசவத்திற்கு பின் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபட முடியாது. ஆனால் நடைப்பயிற்சி எளிமையானது மட்டுமின்றி சிறந்ததும் கூட. எனவே சிரமம் பார்க்காமல் கரீனா கபூர் தவறாமல் நடைப்பயிற்சியை தினமும் மேற்கொண்டாராம்.