For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு இது மாதிரி எல்லாம் நடக்க காரணம் இது தான்!

பிரசவத்திற்கு பிறகு முடி உதிர காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

பிரசவத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்களில் ஒன்று தான் முடி உதிர்வு ஆகும். இந்த பிரசவத்திற்கு பின்னரான முடி உதிர்வு பிரச்சனை என்பது பல பெண்கள் சந்திக்க கூடியது தான். இந்த பிரசவத்திற்கு பின்னர் உடலின் பல பகுதிகளில் நீங்கள் மாறுதல்களை உணர முடியும். இந்த எல்லா மாற்றங்களுமே மாறுதலுக்குட்பட்டவையே. சீக்கிரமே இயல்பு நிலைக்குத் திரும்பக் கூடியவைதான்.

ஆனாலும், ஒரு விஷயம் கர்ப்பிணிகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தக் கூடியது. அதுதான் கூந்தல் உதிர்வு. கர்ப்பத்தின் போதும் பிரசவமான உடனேயும் பெரும்பாலான பெண்கள் கூந்தல் உதிர்வை சந்திக்கிறார்கள். அதை பற்றி இந்த பகுதியில் விளக்கமாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயல்பு

இயல்பு

கர்ப்ப காலத்தில் கூந்தலில் உண்டாகிற மாற்றங்கள் மிகவும் இயல்பானது தான். சில பெண்களுக்கு கூந்தல் வழக்கத்தைவிட அதிகம் வறண்டு, பொலிவிழந்து காணப்படும். சிலருக்கு இதற்கு நேரெதிராக திடீரென கூந்தல் ஆரோக்கியமாக மாறுவதையும் பார்க்கலாம். ஒரு சிலருக்கு எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருக்கலாம். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடலாம்.

ஹார்மோன் மாற்றம்

ஹார்மோன் மாற்றம்

ஒருவருக்கே கூட முதல் பிரசவத்தில் ஒரு மாதிரியும், அடுத்த பிரசவத்தில் வேறு மாதிரியும் இருக்கலாம். பொதுவாக கர்ப்பத்தின் கடைசி 3 மாதங்களில் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதாகவே பலரும் உணர்கிறார்கள். இவை எல்லாவற்றுக்குமே காரணம் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கூந்தல் வழக்கத்தைவிட அதிக அடர்த்தியாக இருக்கும். கூந்தலானது மாதத்துக்கு அரை இஞ்ச் அளவே வளரக்கூடியது.

அடர்தியாகும்

அடர்தியாகும்

கூந்தலின் வளர்ச்சியிலும் அடர்த்தியிலும் வியத்தகு மாற்றத்தை உணர ஒரு வருடமாவது தேவை. கர்ப்பத்தின் முதல் 3 மாத கூந்தல் வளர்ச்சிக்குக் காரணம் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் சுரப்பும், குறைகிற ஆன்ட்ரோஜென் சுரப்பும். இதன் காரணமாக கூந்தலின் வேர்ப் பகுதிகளில் சீபம் என்கிற எண்ணெய் சுரப்பானது குறைந்து, கூந்தல் முன்னைவிட அடர்த்தியாக இருப்பது போலத் தெரியும்.

வறட்சியடையும்

வறட்சியடையும்

முடி அதிகமாக வளர்வது என்பது பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தாலும் சீபம் குறைவதன் காரணமாக கூந்தல் வறட்சியும் அதிகமாகும். எனவே, கூந்தலை வறண்டு போகச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். சொரியாசிஸ் பிரச்னை இருக்கும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அது திடீரென காணாமல் போகலாம். அதுவும் தற்காலிகமானதே. பிரசவமானதும் அந்தப் பிரச்னை மீண்டும் திரும்பும்.

கூந்தல் உதிர்வு

கூந்தல் உதிர்வு

கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அதிகரிப்பதன் காரணமாக கூந்தலானது வளர்ச்சி நிலையான அனாஜனில் அதிக நாட்கள் இருக்கும். அதனாலும் கூந்தல் வளர்ச்சி அதிகரித்தது போலத் தெரியலாம். பிரசவத்துக்குப் பிறகான கூந்தல் உதிர்வு என்பதை அனேகமாக எல்லா பெண்களுமே உணர்வார்கள்.

குழந்தை சிரித்தால்...

குழந்தை சிரித்தால்...

குழந்தை முகம் பார்த்து சிரிக்க ஆரம்பிக்கிற 3ம் மாதம் அப்படித்தான் முடி கொட்டும் எனப் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கலாம். இதற்குக் காரணமும் அதே ஹார்மோன் மாறுதல்கள் தான். பிரசவத்துக்கு முன்பு உச்சத்தில் இருந்த ஹார்மோன்கள் எல்லாம் குழந்தை பிறந்ததும் பழைய நிலைக்குத் திரும்பத் தொடங்குவதே காரணம். கர்ப்ப காலத்தில் உதிர வேண்டிய முடிகள், பிரசவத்தின் போது மொத்தமாக கொட்டுவதைப் பார்க்கலாம்.

பயம் வேண்டாம்

பயம் வேண்டாம்

கூந்தலின் நுண்ணறைகள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும் வேலையை முழுமையாகச் செய்து முடிக்கிற வரை, அதாவது, பிரசவத்தை அடுத்த 3-4 மாதங்களுக்கு இந்த முடி உதிர்வு சற்றே தீவிரமாகத்தான் இருக்கும். கொத்துக் கொத்தாக கையோடும் சீப்போடும் பிடுங்கிக் கொண்டு வருகிற முடிக் கற்றைகளைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. அது தற்காலிகப்பிரச்னையே... சில வாரங்களில் சரியாகி விடும்.

கருத்தடை மாத்திரைகள்

கருத்தடை மாத்திரைகள்

கர்ப்பம் என்றில்லாமல் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்புடன் தொடர்புடைய வேறு சில நிகழ்வுகளின் போதும் முடி உதிர்வுப் பிரச்னையை உணர்வார்கள் பெண்கள். ஹார்மோன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதை திடீரென நிறுத்தும் போதும், கருக்கலைப்பின் போதும், உடலில் உண்டாகிற ஹார்மோன் சமநிலையின்மையின் போதும் முடி உதிர்வு அதிகரிக்கலாம்.

உணவுகள்

உணவுகள்

கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வைக் கண்டு பயந்து, அதை சரி செய்கிற முயற்சிகளாக கெமிக்கல் சிகிச்சைகளைச் செய்யக் கூடாது. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் மற்றும் ஃபோலிக் ஆசிட், புரதம், தாதுச் சத்துகள் அடங்கியசப்ளிமென்ட்டுகளையும், காய்கறிகள், கீரைகள், பழங்களையும் சேர்த்துக் கொண்டாலே போதுமானது. மேலும், நீங்கள் எதை எல்லாம் சாப்பிட்டால் முடி வளரும் என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

முட்டை:

முட்டை:

முட்டையில் உள்ள வெள்ளைக்கரு அல்புமின் என்ற புரோட்டினைக் கொண்டுள்ளது. அது கூந்தல் வளர தூண்டுகிறது. மஞ்சள் கருவும் விட்டமின்களை கொண்டுள்ளது. ஆதலால் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் கூந்தல் மிளிர்வதை நீங்கள் உணர்வீர்கள்.

சால்மன் மீன்:

சால்மன் மீன்:

சால்மன் மீன் அதிக புரதச் சத்துக்களைக் கொண்டுள்ளது. அதோடு , பி காம்ப்ளக்ஸ் விட்டமின்களையும் கொண்டுள்ளது. கூந்தல் வறண்டு போவதை தடுக்கும். குறைந்த பட்சம் வாரம் இருமுறையாவது உட்கொண்டால் கூந்தல் தங்கு தடையின்றி வளரும். அவற்றை எண்ணெயில்லாம வேக வைத்து சாப்பிடுவது அதன் சத்துக்களையே அப்படியே தரும்.முடி உதிர்வதை தடுக்கிறது.

மாட்டிறைச்சி:

மாட்டிறைச்சி:

மாட்டிறைச்சி அதிக புரதச்சத்துடன் பி விட்டமின், இரும்புச் சத்து, ஜிங்க் ஆகியவைகளை கொண்டுள்ளது. வாரம் இரு முறை சாப்பிடலாம். கொழுப்பும் இதில் உள்ளதால், உடல்பருமனாக உள்ளவர்கள், இதய நோய் உள்ளவரகள் சாப்பிடக்கூடாது.

பீன்ஸ் :

பீன்ஸ் :

பீன்ஸில் அதிகமாய் புரோட்டின் உள்ளது. அதோடு விட்டமின் பி, சி,கனிமங்களையும் நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளது. பீன்ஸ் வகைகள் அனைத்துமே மிக நல்லது. கிட்னி பீன்ஸ் , சோயா பீன்ஸ் , கருப்பு பீன்ஸ் ஆகியவைகள் கூந்தல் அடர்த்தியாக வளர உதவி புரிகிறது.

நட்ஸ் :

நட்ஸ் :

பருப்புவகைகளில் அதிக அளவு புரோட்டின்,விட்டமின், மினரல் உள்ளன.இவைகளை தினமும் உண்டால் டல்லடிக்கிற கூந்தல் டாலடிக்கும் . பாதாம்,பீ நட்ஸ் ,வால் நட்,முந்திரி ஆகியவ்ற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.ஊற வைத்த பாதாம் மிகவும் நல்லதாகும்.

பசலைக் கீரை:

பசலைக் கீரை:

பசலைக் கீரையில் , விட்டமின் ஈ,பி,மற்றும் சி ஆகியவைகளையும், பொட்டாசியம்,இரும்பு,மெக்னீசியம் போன்ற தாதுப் பொருட்களையும் கொண்டுள்ளது. இவை முடிகளை வேகமாக வளரவும்,கருமையான நிறத்திலும் வளர தேவையான சத்துக்கள். அன்றாடம் உணவில் சேர்க்கக் கூடிய உணவு வகை.

ஓட்ஸ் :

ஓட்ஸ் :

ஓட்ஸில் விட்டமின் பி யும், தாதுப் பொருட்களும் கொண்டுள்ளன. முடி வளரத் தேவையான பொட்டாசியம்,பாஸ்பரஸ் ஆகியவைகளையும் கொண்டுள்ளது. தினமும் காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக் கொண்டால் நாளடைவில் முடி நன்றாக வளர்வதை நீங்கள் பார்ப்பீர்கள்.

 கேரட் :

கேரட் :

கேரட் பீட்டா கரோட்டினைக் கொண்டுள்ளது. அது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. கேரட்டை எவ்வகையிலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஜூஸாகவோ,சாலட்டாகவோ சமைத்தோ, எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். கூடிய மட்டும் பச்சையாக கேரட்டை உண்பது பீட்டா கரோட்டினை உடலுக்கு முழுவதும் கிடைக்கச் செய்கிறது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு :

சர்க்கரை வள்ளிக் கிழங்கு :

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது.அதனை சாப்பிடும்போது கரோட்டின் , விட்டமின் ஏ வாக மாறிவிடும். விட்டமின் ஏ கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானதாகும்.சர்க்கரை வள்ளிக் கிழங்கினை வேக வைத்தோ அல்லது வேறு விதமாகவோ சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

causes and treatments for after pregnancy hair fall

causes and treatments for after pregnancy hair fall
Story first published: Saturday, November 11, 2017, 12:16 [IST]
Desktop Bottom Promotion