For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகப்பேற்றிற்குப் பிந்தைய 40 நாட்களின் முக்கியத்துவம் என்ன?

தற்போது பலருக்கு இந்த 40 நாட்களின் அருமை குறித்து அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் வாழ்வின் பிந்தைய கால கட்டங்களில் இவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

By Super Admin
|

இக்காலகட்டம் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான பந்தத்தை வலுப்படுத்தும் ஒரு பொன்னான நேரம் என்பதுடன் இந்த வழக்கம் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

Relevance Of 40 Days Post Pregnancy

இதற்கு முழுமுதற் காரணம் மற்றும் அறிவியல் ரீதியான விளக்கம் என்னவென்றால் மனித உடல் ஒரு மாபெரும் மாற்றத்தை இந்த பேறு காலத்தின் போது குறிப்பாக முதல் குழந்தையின் காலத்தில் அடைகின்றது. மொத்த உள்ளுறுப்பு இயக்கமும் தலைகீழாக மாறி உங்கள் கர்ப்பப்பை 8-10 மடங்கு வரை விரிவடைகிறது. எனவே இந்த உள்ளுறுப்புகள் பழைய நிலைக்கு திரும்பவும் உடல் தேறவும் வேண்டியிருப்பதால் பேறு காலத்திற்குப் பின் முதல் 40 நாட்கள் ஒய்வு என்பது மிகவும் அவசியம்.

சிலர் ஏன் இந்த 40 நாட்கள் என வியக்கிறார்கள்? இவ்வளவு நீண்ட ஓய்வா? ஏன் இந்த கட்டுப்பாடு என்றெல்லாம் புலம்புவார்கள். ஆனால் அன்பான வாசகர்களே! மற்றவர்களுக்காக அல்ல உங்களுக்காகவாவது இதை நீங்கள் செய்து தான் ஆகவேண்டும். சிலருக்கு உடம்பு தேற இன்னும் அதிக நாட்கள் பிடிக்கும் என்றாலும் தேவையானது எல்லாம் ஒய்வு மட்டுமே.

பின்னாட்களில் மக்கள் மூட்டுவலி, கர்ப்பப்பையில் சிக்கல் மற்றும் இடுப்பு மற்றும் முதுகுப்பகுதிகளில் பிரச்சனைகள் என புலம்புவதுண்டு. இதற்கு முக்கிய காரணம் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் பின்னாளில் அவதியுறும் வேளையில் அதனை எதிர்கொள்ள முடியாமல் திணறுவார்கள். இதனை ஒரு கட்டுப்பாடாக கருதாமல் அக்கறையுடன் எடுத்துக் கொண்டால் உங்களுக்கும் குழந்தைக்கும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

அண்மையில் நீங்கள் பாலூட்டும் தாயாகி இந்த பாலூட்டும் கடினமான வேலையை எதிர்கொண்டுள்ளீர்கள். உங்களுடையது சுகப்பிரசவமோ அல்லது அறுவை சிகிச்சையோ, உங்கள் உடலானது வெளியில் தெரியும் தையல் தழும்புகளைத் தவிர ஒரே விதமான இன்னல்களை மனதாலும் உடலாலும் சந்திக்கிறது. எவ்வளவு உடலைத் தேற்ற முடியுமோ அவ்வளவு முயற்சி செய்யுங்கள்.

முன்பெல்லாம் இந்த 40 நாட்கள் உங்கள் எதிர்ப்பு சக்தியையும் வலிமையையும் பெற்றுத்தருவதாக நம்பப் பட்டது. அதனால் தான் உங்கள் தாயோ அல்லது மாமியாரோ அல்லது பிரசவ உதவிக்கு வரும் பெண்களோ உங்களை மறுபடி பழைய நிலைக்கு கொண்டுவர உதவினார்கள். உங்கள் உடல் குணமடைய வேண்டும், வலுவை திரும்பப் பெறவேண்டும், உறுதியாக வேண்டும் மற்றும் பழைய நிலைக்கு வரவேண்டும். அதேவேளையில் உங்கள் குழந்தை வெளி உலகிற்கு தன்னை தயார் செய்து கொள்ளவேண்டும் என்பதுடன் உங்கள் கதகதப்பை பெற்று குடும்ப முகங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

உங்களுக்குள்ளே நடக்கும் சில மாற்றங்கள் என்னென்ன?

* உங்கள் கர்பப்பை தன்னுடைய பழைய நிலைக்கு அளவிற்கு வர குறைந்தது 6 வாரங்களாவது பிடிக்கும். உங்களுக்கு சில சிரமங்கள் குறிப்பாக பாலூட்டும்போது ஏற்படக்கூடும்

* கர்ப்பகாலத்தின் போது சில தசைகள் இறுகும். இவை மெல்ல மென்மையாக மாறும். இவையெல்லாம் பேறு காலத்தின் போது நீங்கள் பட்ட கஷ்டங்களால் ஏற்பட்டவை.

* சுகப்பிரசவத்தில் போது இரத்த இழப்பு அதிகமாக இருப்பதோடு சிலருக்கு நிறைய இரத்தப் போக்கும் ஏற்படும். அறுவை சிகிச்சையிலும் இரத்தப் போக்கு குறைவாக இருப்பினும் இரத்த இழப்பு சற்று அதிகமாகத் தான் இருக்கும். எனவே இழந்த இரத்தத்தை உற்பத்தி செய்யவும் நலம் பெறவும் உடம்பிற்கு அவகாசம் தேவை.

* உங்கள் மார்பகங்கள் பால் சுரப்பினால் கனமாகத் தோன்றும். அவ்வாறான நேரங்களில் ஒரு சூடான துணி அல்லது டவலைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்யலாம். இதன் மூலம் பால் கட்டிக் கொள்வதை தவிர்க்கலாம்.

* உங்களுக்கு தேவையான அளவு ஓய்வும் உறக்கம் அவசியம்

* ஒரு சரியான ஆகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்

* வீட்டு வேலைகளை உதவிக்காக மற்றவர்களை நாடுங்கள்

முதன் முறையாக தாய்மை அடைய உள்ளவர்கள் சவால்களை எதிர்கொள்ள தங்களை நன்கு தயார் செய்து கொள்வது அவசியம் இந்த வேலை அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. எனவே 40 நாட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை ரசிக்காத தவறாதீர்கள்.

English summary

Relevance Of 40 Days Post Pregnancy

Relevance Of 40 Days Post Pregnancy
Story first published: Thursday, October 20, 2016, 17:19 [IST]
Desktop Bottom Promotion