Latest Updates
-
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பிரசவத்திற்கு பிறகு பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!
எப்படியோ வயிற்றுக்குள் இத்தனை நாட்களாக இருந்த குழந்தை பிறந்து கைகளில் அழகாய் இருக்கிறது. ஆனால் பிரசவத்திற்கு பின், உடல் சக்தியெல்லாம் உறிஞ்சப்பட்டு, வெயிலில் போட்ட வாழைத்தண்டாய் துவண்டு, களிப்புடன் இருக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல் நிறைய உடல் சார்ந்த மற்றும் உள்ளம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு, கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கக்கூடும். பிரசவத்திற்கு பின் உடல் கட்டமைப்பு முன்போலவே இருக்காது. முன்பு போல் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து சுற்ற முடியாது. அதனால் பலர் கவலையில் மூழ்கியிருப்பார்கள். மேலும் சிலர் குழந்தை பெற்றெடுப்பவர்களுக்கான வகுப்புகளுக்கு சென்றிருப்பார்கள். ஆனால் அவ்வகுப்பில், குழந்தை பிறந்த பின் நடக்கப்போவது மற்றும் செய்ய வேண்டியதெல்லாம் சொல்லித் தந்திருக்கமாட்டார்கள்.
ஆனால் இப்போது குழந்தை பிறந்த சில வாரங்களில், உடலுக்குள் என்னென்னவெல்லாம் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன என்று கொடுத்துள்ளோம். சில பெண்கள், குழந்தை பிறந்த பிறகு, உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் சில மாற்றங்களைக் உணர்வார்கள். இங்கு பிரசவத்திற்கு பின், பெண்கள் உடல் ரீதியாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போம்.

வலிக்கும் மார்பகங்கள்
பால் சுரக்கும் காலங்களில் சில வாரங்களுக்கு மார்பகங்களில் வலியை உணரக்கூடும். சில சமயங்களில் மார்பகக் காம்புகளும் வலிக்கக்கூடும்.

மலச்சிக்கல்
குழந்தை பிறந்த பிறகு, ஆசன வாயில் ஏற்படும் புண், பிறப்புறுப்பில் உள்ள தோல் கிழிந்ததால் ஏற்பட்ட காயங்கள் குணமாதல், தசைகளில் ஏற்பட்ட வலி ஆகியவற்றின் காரணமாக மலம் கழிப்பதில் வலி ஏற்படுவதோடு, சில நேரங்களில் மலச்சிக்கலையும் உண்டாக்கும்.

எபிசியாடமி (Episiotomy)
ஆசன வாய்க்கும், பெண்களின் பிறப்புறுப்புக்கும் இடையிலுள்ள தோல் (perineum) பிரசவத்தின் போது மருத்துவரால், கிழிக்கப்பட்டு பின் தைக்கப்படும். இதற்கு எபிசியாடமி (Episiotomy)என்று பெயர். இவ்வாறு போடப்படும் தையல் குணமாவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தில், நடக்கும் போதும், உட்காரும் போதும் வலியை உண்டாக்கும். மேலும் இருமலின் போதும், தும்மலின் போதும் கூட வலியை உண்டாக்கும்.

மூலம்
பிரசவம் ஆன பெண்களுக்கு, மூலம் எனப்படும் ஆசனவாயில் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் வீக்கம் (hemorrhoids) சாதாரணமாக ஏற்படும்.

காய்ச்சல் மற்றும் உடல் நடுக்கம்
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினாலும், இரத்த ஓட்ட அளவு மாறுபாட்டுக்கு உள்ளாவதினாலும், குழந்தை பெற்ற தாய்மார்களின் உடலில் உள்ள வெப்பக்கட்டுப்பாட்டில் மாற்றங்கள் நிகழ்ந்து, காய்ச்சலோ, நடுக்கமோ ஏற்படலாம்.

தம்மை அறியாமலே சிறுநீர் அல்லது மலம் கழித்துவிடுதல்
பிரசவத்தின் போது, தசைகள் விரிவடைந்ததினாலும், நீண்டிருந்த தசைகள் சுருங்குவதினாலும், இருமலின் போதும், தும்மலின் போதும், சிரிக்கும் போதும், தம்மை அறியாமலேயே சிறுநீர் கழித்து விடக்கூடும் அல்லது சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த சிரமப்படக்கூடும். அதிலும் சுகப்பிரசவம் நடந்தவர்களுக்கு, பிரசவ வலி நெடுநெரம் நீடித்திருந்தால், அவர்களுக்கு இம்மாதிரியான சிரமங்கள் ஏற்படும்.

பிந்தைய வலிகள்
பிரசவத்திற்குப் பிறகும், கருப்பை சில நாட்களுக்கு, சுருங்கி விரிந்து கொண்டிருக்கும். இதன் காரணமாக அடிவயிற்றில் வலி ஏற்படும். இரத்தப்போக்கிற்கு மருத்துவம் பார்க்கும் போதும், குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் போதும், இதனை உணர நேரிடும்.

பிறப்புறுப்பில் திரவப்போக்கு (lochia)
பிரசவத்திற்குப் பிறகு ஆரம்பத்தில், மாதவிலக்கின் போது வெளிப்படும் உதிரத்தை விடக் கெட்டியாக, இத்திரவம் வெளிப்படத் தொடங்கும். பெரும்பாலும் சிறு சிறு கட்டிகளைக் கொண்டதாக இருக்கும். நாளடைவில் இதன் நிறம் மஞ்சள், வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக நிறமிழந்து போகும். ஆனால் இதற்கு பல வாரங்கள் ஆகலாம்.

எடை குறைவு
பிரசவத்திற்குப் பிறகு, பிரசவத்திற்கு முன் இருந்த எடையிலிருந்து 5 முதல் 6 கிலோ வரை எடை குறைந்து காணப்படுவோம். (குழந்தையின் எடை, நஞ்சுக்கொடி, அம்னியாடிக் திரவம் என்னும் பனிக்குடம் ஆகியவற்றின் எடை குறைந்து விடுவதால்)



Click it and Unblock the Notifications