Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க சில வழிகள்!!!
கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கும் அருமையான அனுபவம். இந்த கர்ப்ப காலத்தில் இனிமையான பல அனுபவங்களை அனுபவித்தப் பின்னர், ஒருசில சங்கடத்தையும் பெண்கள் அனுபவிக்கக்கூடும். அதில் ஒன்று தான் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள். ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் இருந்தால், அவை அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். ஏனெனில் கர்ப்ப காலத்தில் வயிறானது அதிக அளவில் விரிவடைந்து, பின் திடீரென்று சுருங்குவதால், அவை மார்க்குகளாகிவிடுகின்றன.
இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை முற்றிலும் போக்க முடியாது. இருப்பினும் ஒருசில செயல்களை பின்பற்றுவதன் மூலம், அதனை மறைக்க முடியும். சிலருக்கு எப்படி பிரபலங்கள் மட்டும் பிரசவத்திற்கு பின்னரும் குட்டையான மற்றும் கவர்ச்சியான ஆடைகளை அணிகின்றனர்? அவர்களுக்கு எந்த ஒரு ஸ்ட்ரெட்ச் மார்க்கும் இருக்காதா? என்று கேட்கலாம். உண்மையை சொல்ல வேண்டுமானால், அவர்களுக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் நிச்சயம் இருக்கும். ஆனால் அதனை மறைக்க சில ட்ரிக்ஸ்களைப் பின்பற்றுகின்றனர்.
இங்கு அந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க சில ட்ரிக்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பின்பற்றி அழகாக இருங்கள்.

கன்சீலர்
எப்படி முகத்தில் உள்ள பிம்பிள் தழும்புகளை மறைக்க கன்சீலரைப் பயன்படுத்துகிறோமோ, அதே கன்சீலர் கொண்டே ஸ்ட்ரெட்ச் மார்க்குகளையும் மறைக்கலாம். அதற்கு சரும நிறத்திற்கு ஏற்றவாறான கன்சீலரைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

டேனிங் லோசன்கள்
டேனிங் லோசன்களைப் பயன்படுத்தியும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்கலாம். மேலும் தற்போது மார்கெட்டுகளில் நிறைய டேனிங் லோசன்கள் உள்ளன. லோசன் பயன்படுத்த பிடிக்காவிட்டால், டேனிங் லோசன்களாவது ஸ்ப்ரே வடிவிலும் கிடைக்கின்றன. எனவே இத்தகையவற்றைப் பயன்படுத்தியும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்கலாம்.

டாட்டூ
மற்றொரு சிறந்த ஐடியா, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் டாட்டூ போட்டுக் கொள்வது. இது தற்காலிகமாக இருந்தாலும் சரி, நிரந்தரமானதாக இருந்தாலும் சரி, இதனால் ஸ்ட்ரெட்ச் மார்க் மறைக்கப்படுவதோடு, ஸ்டைலாகவும் இருக்கும்.

நல்ல ஆடைகளை உடுத்தவும்
இருப்பதிலேயே எளிமையான வழி என்றால் இது தான். அது என்னவென்றால், நல்ல அழகான ஸ்ட்ரெட்ச் மார்க் வெளியே தெரியாவாறான ஆடைகளை தேர்ந்தெடுத்து உடுத்துவது.

தண்ணீர் குடிக்கவும்
சருமம் அழகாக இருக்க வேண்டுமானால், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் சருமம் பொலிவோடு இருப்பதுடன், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் லேசாக மறையவும் ஆரம்பிக்கும். ஆகவே தினமும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை தவறாமல் குடிக்க வேண்டும்.

மசாஜ்
எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலமும், ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைய வைக்கலாம். அதிலும் ஆலிவ் ஆயில் கொண்டு தினமும் தவறாமல் மசாஜ் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications