Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
பிரசவத்திற்கு பின் பித்தக்கற்கள் வருவதற்கான காரணங்கள்!!!
பொதுவாக பித்தக்கற்களானது, பித்தப்பையில் உள்ள பித்தநீர் வெளியேறாமல் இருப்பதால் ஏற்படுவதாகும். இத்தகைய பிரச்சனை ஆண்களை விட, பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். அதிலும் 35 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு இந்த பிரச்சனை சாதாரணமாகவே வரும். சில சமயங்களில் பிரசவத்திற்கு பின்னர் கூட, பெண்கள் பித்தக்கற்களால் அவஸ்தைப்படுகின்றனர்.
பொதுவாக பித்தக்கற்களானது, உடலில் கொழுப்புக்கள் அதிகம் இருந்தால் ஏற்படும். ஏனெனில் கொழுப்புக்களானது பித்தப்பையில் தங்கி, பித்தநீர் வெளியேறாதவாறு அடைப்பை உண்டாக்கிவிடுவதால், பித்தநீரானது பித்தக்கற்களாக மாறிவிடுகின்றன. இத்தகைய பித்தக்கற்கள் ஏற்படுவதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன. அதிலும் பிரசவத்திற்கு பின்னர் பித்தக்கற்கள் ஏற்படுவதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன. அது என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

புரோஜெஸ்ட்டிரோன்
பிரசவத்திற்கு பின்னர் பித்தக்கற்கள் ஏற்படுவதற்கு, ஹார்மோன்களின் மாற்றங்களே காரணம். அதிலும் புரோஜெஸ்ட்டிரோன் என்னும் ஹார்மோனானது, உடலில் உள்ள தசைகளை தளர்வடையச் செய்யும். குறிப்பாக பித்தப்பையின் தசைகளை தளர்வடையச் செய்வதால், பித்தப்பையிலிருந்து பித்தநீரானது வெளியேறாமல், பித்தக்கற்களான உருவாகின்றன.

உடல் பருமன்
பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர், உடல் பருமன் அடையும். இவ்வாறு உடல் பருமன் அடைந்தால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், பித்தப்பையில் அடைப்புக்கள் ஏற்பட்டு, பித்தக்கற்கள் உருவாகும்.

அதிக பிரசவம்
சில பெண்கள் 2-3 பிரசவங்களை சந்தித்திருப்பார்கள். இவ்வளவு பிரசவத்தை மேற்கொண்டவர்களுக்கு பித்தக்கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு பிரசவத்தின் போதும் புரோஜெஸ்ட்டிரோனின் அளவு அதிகரிப்பதால், பித்தப்பையின் அளவு சுருங்கி, பித்தநீர் அதிகமாக தேங்கி, இறுதியில் பித்தக்கற்களுக்கு வழிவகுக்கும்.

பரம்பரை
பரம்பரையாக இந்த பிரச்சனை இருந்தாலும், பிரசவத்திற்கு பின் இந்த பித்தக்கற்களானது உருவாகும். எனவே கர்ப்பமாக இருக்கும் போதே, அதனை மருத்துவரிடம் சொன்னால், இதற்கான சிகிச்சையை மேற்கொண்டு, இந்த பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

தாமதமான கர்ப்பம்
பொதுவாகவே 35 வயதிற்கு மேல் ஹார்மோன்களில் மாற்றங்களினால், பித்தக்கற்களானது பெண்களுக்கு ஏற்படும். இந்த நிலையில், இந்த வயதில் பெண்கள் கர்ப்பமானால், பித்தக்கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்குமே தவிர குறைக்காது.

முந்தைய பித்தக்கற்கள்
ஏற்கனவே பித்தக்கற்களால் அவஸ்தைப்பட்டு, அதனை நீக்கியிருந்தால், பிரசவத்திற்கு பின் மீண்டும் பித்தக்கற்கள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

வேகமான எடை குறைவு
திடீரென்று உடல் எடையானது குறைந்தாலும், பித்தக்கற்கள் உருவாகும். அதிலும் பெண்களின் அதிகப்படியான உடல் எடை திடீரென்று குறைந்தால், உடலில் உள்ள தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலானது வெளியேறுவதோடு, சில கொலஸ்ட்ரால் பித்தப்பையில் தங்கி, இறுதியில் பித்தக்கற்களை உருவாக்கும்.



Click it and Unblock the Notifications