Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
குழந்தை பிறந்தபின் வரும் மாதவிடாய்கள் - தாய்மார்களுக்கான சிக்கலான நேரம்
மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் ஒன்று. ஆனால் கருவை சுமக்கும் பெண்ணுக்கோ மாதவிடாய் மற்றும் கருமுட்டை வெளிப்படுதல் நின்று விடும் என்பதை நாம் அறிவோம். ஆனால் குழந்தை பிறந்தபின் இது எப்போது திரும்பும் என்பது ஒவ்வொரு பெண்ணை பொறுத்தது. அவை திரும்பும் போது, பெண்கள் படும் கஷ்டங்களும் கொஞ்சம் அதிகம் தான்.
குழந்தைப் பெற்ற ஒரு பெண்ணுக்கு கருமுட்டை வெளிப்படுதல் மற்றும் மாதவிடாய் திரும்புதலை கட்டுப்படுத்தும் காரணிகள் பல உள்ளன. குழந்தை பெற்றவுடன் வரும் மாதவிடாயை பற்றி கீழ்கூறிய சில தகவல்களை ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த நேரம் ஒரு பெண்ணுக்கு திரும்பும் மாதவிடாய் பற்றியும் அதனை பாதுகாக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும், இந்த தகவல்கள் மூலம் அறியலாம். முறையான பாதுகாப்பு எடுக்க தவறினால் தொற்று மற்றும் பெரிய சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
குழந்தை பிறந்தவுடனே இழக்கும் இரத்தத்தின் நிறம் அடர்ந்த சிவப்பில் இருக்கும். எப்போதும் இருக்கும் மாதவிடாயை விட இரத்த இழப்பு மிகவும் அதிகமாக இருக்கும். இந்த அடர்ந்த நிறம் சீக்கிரமே மங்கிய சிவப்பு நிறமாகும். இரத்த இழப்பும் ஒரு வார காலத்தில் நன்றாகவே குறைந்து காணப்படும். இந்த நிறம் மேலும் பழுப்பு சிவப்பாக மாறும். கடைசியாக இரத்த இழப்பு நிற்கும் முன் மஞ்சள் கலந்த வெண்ணிறமாக மாறும்.

இந்த நேரத்தில் பல பெண்கள் பேறுகால டையப்பர்களை பயன்படுத்துவார்கள். அடைப்புபஞ்சுருண்டை பயன்படுத்துவதை விட சானிட்டரி பேட் (sanitary pad) பயன்படுத்தவே பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் அடைப்புபஞ்சுருண்டை பயன்படுத்தினால் இரத்தம் தடையில்லாமல் செல்வதில் சிக்கல் ஏற்படும். அப்படி தடை ஏற்பட்டால் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இரத்த கசிவு குறைந்தவுடன் மாதவிடாய்க்கு பொதுவாக பயன்படுத்தும் சாதாரண சானிட்டரி பேட்டை உபயோகிக்கலாம். இருப்பினும் இரத்த கசிவை பொறுத்து, இந்த பேட்டை 3-4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். மேலும் குழந்தை பிறந்து 6 வாரங்களுக்கு, இந்த இரத்தக் கசிவு இருப்பதால், ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் பெண்களுக்கு புத்துணர்ச்சியும், தேவையான அளவு ஓய்வும் கிடைக்கும்.
இரத்தக் கசிவு நின்ற பின், தூய்மைக்கு கேடு விளைவிக்கும் அதிகமான நாற்றம் மற்றும் சிறிதளவு இரத்தக் கசிவும் ஏற்படும். இது குழந்தை பிறந்த நேரம் நடந்தால் இயல்பானதே. ஆனால் தொடர்ந்து இரத்த வெளியேறுதல் அல்லது பெரிய இரத்த உறைக்கட்டி அல்லது தூய்மைக்கு கேடு விளைவிக்கும் வாடையோ அல்லது அடர்த்தியான சிவப்பு நிறத்தில் இரத்தக் கசிவு ஏற்பட்டாலோ, உடனே மருத்துவரை சந்தித்து பிரச்சனைகளை கலந்து ஆலோசிக்க வேண்டும்.
குழந்தைப் பெற்ற ஒரு பெண்ணுக்கு கருமுட்டை வெளிப்படுதல் மற்றும் மாதவிடாய் திரும்புதல், அந்த பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறாளா இல்லையா என்பதை பொறுத்தே உள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு கருமுட்டை வெளிப்படுதல் மற்றும் மாதவிடாய் 10 வாரங்களில் திரும்பிவிடும். ஆனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, இது இன்னும் சில காலம் தள்ளிப் போகும். குழந்தை பாலை உறிஞ்சி குடிப்பதால், ப்ரோலக்டின் வெளியேறுவதற்கு இது தூண்டுதலாக இருக்கும். இந்த ப்ரோலக்டின் கருமுட்டை வெளிப்படுதலை தடை போடும். அதனால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கருமுட்டை வெளிப்படுதல் மற்றும் மாதவிடாய் திரும்ப 20 வாரமாவது ஆகும். மாதவிடாய் திரும்பும் போது மற்ற நேரங்களில் இருப்பதை விட இரத்தக் கசிவு மிக அதிகமாக இருக்கும்.
கருமுட்டை வெளிப்படுதல் திரும்புவதை கர்ப்பவாய் பகுதியிலிருந்து வரும் சளியை வைத்தே தீர்மானிக்கலாம். இந்த சளி ஒரு பெண்ணின் வாலிபத் தசையில் இருந்து வெளியேறும். இது பொதுவாக மாதவிடாய் வருவதை தெரியப்படுத்த உதவும். உடம்பின் நிலையையும், எப்போது மாதவிடாய் திரும்பும் என்பதையும் நான்கு கட்டங்களில் அறிந்துக் கொள்ளலாம்.
கருவற்ற சளிச்சுரப்பி:
இந்த சுரப்பி மிதமான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை மாதவிடாய்க்கு பின் பார்க்கலாம். இதை கைகளால் தொட்டு ஆராய்ந்தால், பிசுபிசுப்புத் தன்மையோடு இருக்கும். இது நகரவும் செய்யாது, அதில் இழுவையும் இருக்காது.
லேசான இனப்பெருக்கமிக்க சளிச்சுரப்பி:
இந்த சுரப்பி மஞ்சள்/வெள்ளை நிறத்தில் தெளிவற்ற பிசுபிசுப்புத் தன்மையுடன் இருக்கும். இதுவும் நகரவும் செய்யாது, அதில் இழுவையும் இருக்காது. ஆனால் கருவற்ற சளிச்சுரப்பியுடன் ஒப்பிட்டால், இதில் சிறு அசைவு இருக்கும்.
இனப்பெருக்கமிக்க சளிச்சுரப்பி:
இந்த சுரப்பி தண்ணீர் சத்துடன் வழுக்கும் தன்மையுடன் இருக்கும். மேலும் தெளிவாகவும் இருக்கும். இது கருமுட்டை வெளிப்படுதல் மற்றும் மாதவிடாய் நெருங்குவதையும் சுட்டிக்காட்டும். இது தேவையான முன் எச்சரிக்கை எடுக்கவும் உதவும் அல்லது அடுத்த குழந்தைக்கு தயார்படுத்தவும் உதவும்.
பாலுணர்வு தூண்டுதலும், கருப்பை வாயிலிருந்து அதிக அளவு சளிச்சுரப்பி வெளிவருவதும் ஒருவித அறிகுறியே.
ஆகவே மருத்துவரிடம் ஓடாமல் மேலே கூறிய டிப்ஸைப் பயன்படுத்தி, கருமுட்டை வெளிப்படுதல் மற்றும் மாதவிடாய் திரும்புதலை கணக்கிட்டு கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
