For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்திற்கு பிறகு உடலுக்கு மசாஜ் செய்யுங்க!!!

By Maha
|

Body Massage
ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் அடைய வேண்டிய ஒரு பெரிய பாக்கியம் தான் குழந்தை. அவ்வாறு கவனமாக குழந்தையை பத்து மாதம் சுமந்து பெற்றப் பின்னர், குழந்தை வளரும் வரை அந்த குழந்தையை இரவுப் பகல் பார்க்காமல், சரியாக பராமரித்து வர வேண்டும். ஆனால் அவ்வாறு முற்றிலும் குழந்தையின் மேல் முழு கவனத்தையும் செலுத்தி வளர்ப்பதோடு, சற்று தாயின் உடலையும் கவனிக்க வேண்டும். அவ்வாறு கவனிக்கும் போது உடலுக்கு சற்று மசாஜ் செய்தால், உடல் ரிலாக்ஸ் ஆவதோடு, உடலும் சற்று ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் அந்த நேரத்தில் உடலுக்கு மசாஜ் மிகவும் அவசியமானது. அத்தகைய மசாஜ் செய்தால் என்னென்ன பயன் உள்ளது என்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

பிரசவத்திற்கு பின் மசாஜ் செய்தால்...

* பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணும் சற்று மன அழுத்தத்துடன் காணப்படுவர். பிறந்த குழந்தையை கவனமாக பார்ப்பதில் புதிதாக தாயானவர்களுக்கு மனஅளவிலும், உடலளவிலும் சற்று கடினமாக இருக்கும். ஆகவே அப்போது மிசாஜ் செய்தால், உடல் சற்று ரிலாக்ஸ் ஆக இருப்பதோடு, மனமும் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும்.

* பிரசவத்திற்கு பிறகு கால்கள், தொடை, தோள்பட்டை, கழுத்து, முதுகு போன்றவை மிகவும் வலியுடன் இருக்கும். அப்போது மசாஜ் செய்தால் உடல் வலி நீங்கிவிடும். அதிலும் அந்த மசாஜை இரவில் படுக்கும் போது செய்தால் நன்றாக இருக்கும். ஆகவே படுக்கும் முன் கணவரை அழைத்து சற்று மசாஜ் செய்து விடுமாறு சொல்லுங்கள்.

* மசாஜ் செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், உடல் வலி குறைவதோடு, உடலில் ஆக்ஸிஜன் சரியான அளவில் கிடைத்து, இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

* ஒவ்வொரு பெண்ணும் பிரசவத்திற்கு பின் தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் மார்பகத்தில் சற்று மசாஜ் செய்தால், உடலில் தாய்ப்பாலின் உற்பத்தி அதிகரிப்பதோடு, புரோலாக்டின் உற்பத்தியும் அதிகரிக்கும். அதிலும் இந்த வகையான மசாஜ் தாய்ப்பால் சுரப்பியில் ஏதேனும் அடைப்பு இருந்தாலும் அதனை நீக்கிவிடும்.

* பிரசவத்திற்கு பின் உடலில் தசைகள் சுருங்கியிருக்கும். ஆகவே அப்போது உடலுக்கு மசாஜ் செய்தால், உடலில் இருக்கும் தசைகள் வலுவடைவதோடு, உடல் நன்கு பிட்டாகவும் இருக்கும்.

* கர்ப்பமாக இருக்கும் போது எடை அதிகமாக இருக்கும். ஆனால் பிரசவத்திற்கு பின்னும் சில சமயங்களில் எடை கூட ஆரம்பிக்கும். மேலும் தொப்பை கூட வந்துவிடும். ஆகவே அந்த நேரத்தில் உடல் எடையை குறைக்க, தொப்பையை குறைக்க மசாஜ் செய்தால், உடல் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.

* சிசேரியன் பிரசவத்தில் தையல்களின் குறிகள் சருமத்தில் இருக்கும். இதனை முற்றிலும் போக்குவது என்பது மிகவும் கடினம். ஆனால் அந்த குறியினை மசாஜ் செய்வதன் மூலம் மெதுவாக குறைக்கலாம். முக்கியமாக, மசாஜ் செய்யும் போது சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டும்.

* அதுமட்டுமல்லாமல், மசாஜ் செய்வதால் உடலில் இருக்கும் இறந்த செல்கள் போய்விடும். அதிலும் புதிதாக தாயானவர்கள், சருமத்தின் மீது சரியான கவனிப்பை, பராமரிப்பை செய்வதில்லை. ஆகவே மறக்காமல் மசாஜ் செய்ய வேண்டும்.

முக்கியமாக சிசேரியன் மூலம் பிரசவம்த ஆனவர்கள், உடனே மசாஜ் செய்ய வேண்டாம். ஏனெனில் தையல்கள் நன்கு காய சற்று நாட்கள் ஆகும். ஆகவே தையல்களை காய்ந்து சரியானதும், பின்னர் மசாஜ் செய்ய தொடங்குங்கள். அதிலும் மசாஜ் செய்யும் போது சூடான அல்லது வெதுவெதுப்பான எண்ணெயை பயன்படுத்த வேண்டும். வேண்டுமென்றால் அந்த எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு மசாஜ் செய்தால் மிகவும் நல்லது. ஆகவே மசாஜை வீட்டில் செய்து உடலை ஆரோக்கியமாக, பிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.

Read more about: postnatal pregnancy care
English summary

why new mom should do body massage | பிரசவத்திற்கு பிறகு உடலுக்கு மசாஜ் செய்யுங்க!!!

The post pregnancy massage is specifically suited to the needs of women who have just given birth. For many generations, new mothers have been given daily, full-body massages during the first few weeks after the delivery. This post pregnancy massage is believed to strengthen the new mother and help her recover.
Story first published: Thursday, August 23, 2012, 11:04 [IST]
Desktop Bottom Promotion