Latest Updates
-
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்
வீட்டில் இருந்து வேலை செய்யும் போது குழந்தைகளை எப்படி சமாளிப்பது என்று தெரியலையா? இத படிங்க..
Parenting Tips In Tamil: குழந்தைகள் பள்ளிக்கூடம் போனால் பரவாயில்லை. ஆனால் கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளும் பள்ளிக்கு செல்லவில்லை அதே நேரத்தில் பலரும் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு பக்கம் வேலையை பார்த்துக் கொண்டு மறுபக்கம் குழந்தைகளையும் சமாளிக்க வேண்டியுள்ளது.
குழந்தைகளை சமாளிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. திடீரென மீட்டிங் கால் வரும், ஒரு பக்கம் குழந்தைகளை சமாளிக்க வேண்டும், மறுபக்கம் மீட்டிங் கால்களையும் அட்டெண்ட் செய்ய வேண்டியிருக்கும். குழந்தைகள் அப்பொழுது பார்த்து தான் சத்தமும் போடுவார்கள்.

எனவே நீங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நபராக இருந்தால் உங்கள் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம், அதே நேரத்தில் உங்கள் வேலைகளையும் எப்படி பார்க்கலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது உங்கள் குழந்தைகளை சமாளிப்பதற்கான எளிய வழிகள்:
உங்கள் அட்டவணைகளை பற்றி தலைமை குழுவிடம் தெரிவியுங்கள்
நீங்கள் பெற்றோர்களாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வேலைக் குழுவிடம் இது குறித்து தெரிவிப்பது நல்லது. இதன் மூலம் சக ஊழியர்களின் சப்போர்ட் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் வேலை பார்க்கும் போது குழந்தைகள் உங்களுடன் இருப்பார்கள் என்றால் அது குறித்து உங்கள் மேலாளரிடம் தெரிவித்து விடுங்கள்.
உங்கள் வேலை அட்டவணையை முன்கூட்டியே பகிர்வது நல்லது. உங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் அது குறித்து தெரியப்படுத்தி விடுங்கள். இதன் மூலம் அடிக்கடி நீங்கள் ஆன்லைனில் இருக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்த திட்டமிட்டு இருந்தால் அதையும் சரியாக செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு ஒரு அட்டவணையை உருவாக்குங்கள்
நீங்கள் வேலை அட்டவணையை தயாரிப்பது போல உங்கள் குழந்தைகளையும் பிஸியாக வைக்க ஒரு அட்டவணையை தயார் செய்யுங்கள். அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது, அவர்களுடன் விளையாடுவது, அவர்கள் ஒவ்வொரு மணி நேரமும் என்ன செய்ய வேண்டும், எந்த மாதிரியான விளையாட்டை விளையாட வேண்டும், எப்பொழுது படிக்க வேண்டும் என ஒரு அட்டவணையை தயார் செய்து கொள்ளுங்கள்.
அழகான விலங்குகளை உருவாக்குதல்
உங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசமான விளையாட்டுகளை சொல்லிக் கொடுங்கள். உங்கள் வீட்டில் அட்டை பெட்டி கிடந்தால் அதைக் கொண்டு எப்படி அழகான விலங்குகளை உருவாக்கலாம் என்பதை கற்றுக் கொடுங்கள். இதன் மூலம் நீங்கள் வேலை செய்யும் போது அவர்களை உங்கள் பக்கத்தில் வைத்தே பார்த்துக் கொள்ளலாம்.
ஓவியம் தீட்டுதல்
உங்கள் குழந்தைக்கு ஓவியம் தீட்டுவது பிடிக்கும் என்றால் அவர்களுக்கு ஓவியம் தீட்ட சொல்லிக் கொடுக்கலாம். எதாவது ஒரு தலைப்பு கொடுத்து அதன்படி ஓவியம் தீட்ட சொல்லுங்கள். நீங்கள் வேலை செய்யும் போது உங்களை தொந்தரவு செய்யாமல் இந்த வேலைகளை அவர்கள் செய்வார்கள்.
கனவு வீடு அல்லது கனவு விளையாட்டு மைதானத்தை உருவாக்கலாம்
உங்கள் வீட்டில் வீடு கட்டும் பொருட்கள், ஐஸ் கிரீம் குச்சிகள் இவைகள் இருந்தால் அவர்களை ஒரு கனவு வீடு அல்லது கனவு விளையாட்டு மைதானத்தை கட்ட சொல்லலாம். இதன் மூலம் அவர்கள் மிகவும் பிஸியாக இருப்பார்கள். இதனால் வேலை நேரங்களில் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
சமைத்தல் விளையாட்டு
உங்கள் குழந்தைகளிடம் கிச்சன் செட் பொருட்கள் இருந்தால் அவர்களுக்கு சமையல் விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்கலாம். உங்களுக்கு பிடித்த எதையாவது ஒன்றை சமைத்து வரும் படி அவர்களுக்கு ஆர்டர் கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் காய்கறிகள், பிஸ்கட் மற்றும் பழங்களைக் கொண்டு அவர்களை சமைக்க சொல்லலாம்.
அனிமேஷன் மற்றும் வீடியோக்களை உருவாக்குதல்
உங்கள் குழந்தைக்கு அனிமேஷன் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதில் இருந்தால் அனிமேஷன் மற்றும் வீடியோக்களை உருவாக்க சொல்லிக் கொடுக்கலாம். இதன் மூலம் அவர்கள் தொழில் நுட்ப அறிவும் வளரும். அதே நேரத்தில் வேலை நேரங்களில் உங்களை தொந்தரவு செய்யவும் மாட்டார்கள்.
Puzzle விளையாட்டுகள்
குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் puzzle விளையாட்டுகளை விளையாடலாம். ஜிக்சா புதிர்கள், ரூபிக் கன சதுரம், மூளை புதிர் விளையாட்டுகள், வார்த்தை விளையாட்டுகள் மற்றும் குறுக்கெழுத்து புதிர்கள் இவற்றை செய்யச் செல்லலாம். இதன் மூலம் அவர்களின் அறிவும் வளரும் அதே நேரத்தில் உங்களை தொந்தரவு செய்யவும் மாட்டார்கள்.
பொறுமையாக இருப்பது அவசியம்
உங்களுக்கு வேலை சம்பந்தமாக 1000 டென்ஷன் இருந்தாலும் அதை குழந்தைகள் மீது காட்டாதீர்கள். பொறுமையாக இருப்பது அவசியம். அவர்களுடனும் நேரத்தை செலவிடுவது மிகவும் அவசியம். உங்கள் குழந்தைகளின் பேச்சையும் காது கொடுத்து கேட்பது மிகவும் அவசியம். எனவே நீங்கள் பொறுமையாக செயல்பட்டால் உங்கள் குழந்தைகளையும் வேலையையும் எளிதாக சமாளிக்க முடியும்.



Click it and Unblock the Notifications