Latest Updates
-
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்
உங்க குழந்தை எப்பவும் மூக்கு நோண்டிக்கிட்டே இருக்கா? அப்ப இத பண்ணுங்க...இனிமே பண்ணா மாட்டாங்க!
குழந்தைகளின் விளையாட்டுத் தனங்களையும் குட்டிக் குறும்புகளையும் பெற்றோர்கள் அதிகம் ரசிப்பார்கள். ஆனால், குழந்தைகள் மூக்கு நோண்டுவது, எந்தப் பெற்றோரையும் வெறுப்படையச் செய்யும் ஓர் மோசமான செயல். இது குழந்தைகளிடையே இருக்கும் வெறும் சாதாரண பழக்கம் மட்டுமல்ல, மிகவும் ஆரோக்கியமற்றது.
குழந்தைகளின் மூக்கு நோண்டு பழக்கத்தால், கிருமிகள் பரவி அவர்களுக்கு தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தப் பழக்கத்தை கைவிட குழந்தைகளை ஊக்குவிப்பதும், சுகாதாரம் மற்றும் தூய்மையின் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்பிப்பதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை.

மூக்கை நோண்டுவது குழந்தைகளிடையே இருக்கும் மிகவும் பொதுவான பழக்கம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். குழந்தைகளிடம் இருக்கும் இந்த பழக்கத்தை நினைத்து பெற்றோர்கள் அடிக்கடி கவலைப்படுகிறார்கள். இது ஒரு தீங்கற்ற பழக்கம் போல் தோன்றினாலும், அது உண்மையில் கவனிக்கப்படாமல் விட்டால் சில கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
சளியை அகற்ற அல்லது அரிப்புகளை போக்க குழந்தைகள் மூக்கை நோண்டலாம். ஆனால் அவ்வாறு செய்வது பாக்டீரியாவை அவர்களின் மூக்கின் வழியாக பரவலாம். இது தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தைகளிடம் இருக்கும் இந்த ஆரோக்கியமற்ற பழக்கத்தை எவ்வாறு தடுப்பது என இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த பழக்கத்தை எப்படி நிறுத்துவது?
மூக்கை நோண்டுவது பொதுவாக எல்லா குழந்தைகளிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம். அது மிகவும் தொல்லையாகவும் ஆரோக்கியமற்ற பழக்கமாகவும் இருக்கிறது. இந்தப் பழக்கத்தை குழந்தையிலேயே தடுக்க, உங்கள் பிள்ளைக்கு உதவ வேண்டும்.
காரணத்தை புரிந்து கொள்ளுங்கள்
மூக்கு நோண்டுவதை நிறுத்துவதற்கு முன், அது ஏன் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். உங்கள் பிள்ளை மன அழுத்தத்தில் இருக்கிறாரா, சலிப்புடன் இருக்கிறாரா அல்லது கவலையாக இருக்கிறாரா? அவருக்கு ஒவ்வாமை அல்லது சளி பிரச்சனை இருக்கிறதா? உங்கள் பிள்ளை ஏன் மூக்கை நோண்டுகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்பதே, அந்தப் பழக்கத்தைத் தொடர்வதைத் தடுக்க உதவும்.
கவனச்சிதறல்களை உருவாக்குங்கள்
உங்கள் குழந்தை மூக்கை நோண்டுவதை நீங்கள் கவனிக்கும்போது, மற்றொரு செயலில் அவர்களை திசை திருப்ப முயற்சிக்க வேண்டும். அவை ஒரு பொம்மை, புத்தகம் அல்லது விளையாட்டாக இருக்கலாம். இது உங்கள் பிள்ளையை வேறொரு விஷயத்தின் மீது கவனம் செலுத்தவும், பழக்கத்தை பாதியிலே நிறுத்தவும் உதவும்.
நேர்மறை வலுவூட்டலைப் பயன்படுத்தவும்
உங்கள் குழந்தை மூக்கை நோண்டாத போது அவரைப் பாராட்டுங்கள். இது அவர்களை ஊக்குவிப்பதோடு, விரைவாக பழக்கத்தை முறித்துக் கொள்ள உதவும். இந்தப் பழக்கத்தை உங்கள் குழந்தை தொடர்ந்து செய்து வந்தால், குழந்தை மருத்துவர் அல்லது மனநல நிபுணரிடம் உதவி பெறலாம். உங்கள் பிள்ளையின் மூக்கை நோண்டுவதை நிறுத்துவதற்கு அவர்கள் கூடுதல் உத்திகளை வழங்கலாம்.
இறுதிக் குறிப்பு
குழந்தைகள் மூக்கு நோண்டுவதை தடுப்பது ஒரு கடினமான விஷயமாக இருக்கலாம். ஆனால் அது சாத்தியமாக்கலாம். ஒரு பெற்றோராக, பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பது முக்கியம்.
பழக்கவழக்கங்கள் தடுக்க நேரம் எடுக்கும், மேலும் மூக்கு நோண்டுவது ஏன் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
பொறுமை, நிலைத்தன்மை மற்றும் இது ஏன் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், உங்கள் பிள்ளைக்கு மூக்கு நோண்டும் பழக்கத்தை கைவிட நீங்கள் உதவலாம்.



Click it and Unblock the Notifications

