Latest Updates
-
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க.. -
வறுத்து அரைச்ச கோவக்காய் சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
1 வருடம் கழித்து வக்ரமடையும் சுக்கிரனால் பணத்தையும், புகழையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
இந்தியாவின் எத்தனை செயற்கைகோள்கள் விண்வெளியில் உள்ளது? எந்த நாட்டிடம் மிக அதிக செயற்கைகோள்கள் உள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் நாளாக இருக்குமாம் -
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
செப்டம்பரில் சனி-செவ்வாயால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!
Mother’s Day 2024: அன்னையர் தினத்தில் அம்மாவாக போகும் உங்கள் மனைவிக்கு கொடுக்க வேண்டிய பரிசுகள்!
Mother's Day 2024: அன்னையர் தினம் என்பது உலகெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தினமாகும். அன்புக்கு விலை ஏது என்பார்கள் அப்படிப்பட்ட அந்த அன்பை ஈடு இணையில்லாமல் கொடுக்கக் கூடிய ஒரே நபர் அன்னை தான்.
அம்மாவின் ஈடு இணையற்ற பாசத்தையும் தியாகத்தையும், அன்பையும் போற்றும் விதத்தில் இந்த அன்னையர் தினமானது கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் முதல் முறையாக அம்மாவாக ஆகப் போகும் உங்கள் மனைவிக்கு எந்த மாதிரியான அன்பான பரிசுகளை வழங்கலாம் எனப் பார்ப்போம்.

மகப்பேறு மசாஜ்
உங்கள் மனைவி அம்மாவாக ஆகப் போகும் சமயத்தில் அவர்களுக்கு மகப்பேறு மசாஜ்யை ஏற்பாடு செய்யலாம். பிரசவத்திற்கு முந்தைய மசாஜ் என்பது அவர்களை அமைதிப்படுத்த உதவுகிறது. அவர்கள் ரிலாக்ஸாக ஓய்வெடுக்க முடியும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கிறது. பதற்றத்தை தணிக்க உதவுகிறது.
கர்ப்ப கால தலையணை
கர்ப்ப காலத்தில் தூங்குவது என்பது சிரமமான விஷயமாகும். எனவே இந்த மாதிரியான சமயங்களில் அவர்கள் செளகரியமாக தூங்குவதற்கு தலையணையை வாங்கி பரிசளிக்கலாம். தூங்கும் சமயத்தில் தலையணை அவர்களுக்கு சப்போர்ட் ஆக இருக்கும்.
புகைப்படம் பொரிக்கப்பட்ட நகைகள்
குழந்தையின் பெயரை அல்லது குழந்தையின் வரவேற்பை பறைசாற்றும் விதத்தில் பொரிக்கப்பட்ட நகைகளை அவர்களுக்கு பரிசாக வழங்கலாம். இது காலம் முழுவதும் மறக்க முடியாத நினைவார்ந்த பரிசாக இருக்கும்.
பிரசவத்திற்கு பிறகான நர்சிங் கிஃப்ட்
பிரசவத்திற்கு பிறகு பயன்படக்கூடிய வகையில் நர்சிங் கிஃப்ட்டை கொடுக்கலாம். குழந்தைக்கு மற்றும் தாய்க்கு தேவையான பொருட்களை வாங்கி பரிசளிக்கலாம்.
பாம்பரிங் கிஃப்ட் செட்
தாய்க்கும் மற்றும் குழந்தைக்கும் ஏற்ற நறுமணமுள்ள சோப்புகள், லோஷன்கள், சரும பராமரிப்பு அத்தியாவசிய பொருட்கள், ஸ்ட்ரெச் மார்க் க்ரீம்கள் போன்றவற்றை அவர்களுக்கு பரிசாக வழங்கலாம்.
கர்ப்ப கால புகைப்படங்கள்
கர்ப்ப கால நினைவுகளை நினைவூட்டும் வகையில் கர்ப்ப காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எல்லாம் தொகுத்து ஒரு ஆல்பத்தை உருவாக்கி கொடுக்கலாம். இது காலத்திற்கும் நினைவான ஒன்றாக இருக்கும்.
ஒரு வார விடுமுறை
உங்கள் மனைவிக்கு ஒரு வார விடுமுறையை அளித்து அவர்களை ஓய்வெடுக்க செய்யலாம். அந்த ஒரு வாரமும் அவர்களுக்கு பதில் நீங்கள் வேலை செய்து கொடுக்கலாம். அவர்களுக்கு தேவையானவை எல்லாவற்றையும் நீங்கள் செய்து கொடுக்கலாம்.
மகப்பேறு உடைகள்
மகப்பேறு காலத்தில் நல்ல காற்றோட்டமான உடைகளை அணிய வேண்டியது அவசியம். எனவே உங்கள் மனைவிக்கு ஏற்ற உடைகளை வாங்கி பரிசளிக்கலாம். அவர்களையும் உடன் கூட்டிச் சென்று ஷாப்பிங் செய்யலாம்.
தாய்ப்பால் ஊட்டும் சாதனங்கள்
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட ஏதுவான சாதனங்களை வாங்கி கொடுக்கலாம். தாய்ப்பால் ஊட்டும் போது வைப்பதற்கான தலையணைகள், பால் பாட்டில்கள், தாய்ப்பால் பம்ப் செய்யும் சாதனங்களை வாங்கி கொடுக்கலாம்.
உணவகத்திற்கு அழைத்துச் செல்லலாம்
அருகில் உள்ள அழகான ரெஸ்டாரென்ட்டுக்கு அழைத்துச் செல்லலாம். உங்கள் மனைவிக்கு பிடித்த உணவுகளை வாங்கி கொடுத்து ஒரு கேண்டில் லைட் டின்னரை நீங்கள் ஏற்பாடு செய்யலாம்.
ஃபுட் மசாஜர்
கர்ப்ப காலத்தில் கால் மற்றும் பாத வலி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே கர்ப்ப காலத்தில் ஃபுட் மசாஜரை வாங்கி பரிசளிக்கலாம். இது அவர்களுக்கு ரிலாக்ஸ்யை தரும்.
கர்ப்ப கால ஸ்நாக்ஸ் பாக்ஸ்
கர்ப்ப காலத்தில் எதையாவது சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோணும். எனவே நட்ஸ், உலர்ந்த பழங்கள், பழங்கள் அடங்கிய ஸ்நாக்ஸ் பேக்கை அவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம்.
கர்ப்ப கால சமையல் புத்தகம்
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். மேலும் கர்ப்ப காலத்தில் வாய்க்கு எதுவும் நன்றாக இருக்காது. எனவே கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாகவும் வித விதமாக பிடித்த மாதிரி சமைத்து சாப்பிட சமையல் டிப்ஸ்களைக் கொண்ட புத்தகத்தை வாங்கி கொடுக்கலாம்.
கர்ப்ப காலத்திற்கு ஏற்ற காலணிகள்
கர்ப்ப காலத்தில் தனித்துவமான காலணிகளை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். இந்த மாதிரியான சமயங்களில் ஹை ஹீல்ஸ் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. பாதங்களுக்கு செளகரியமான காலணிகளை தேர்ந்தெடுத்து கொடுங்கள்.



Click it and Unblock the Notifications