Latest Updates
-
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது! -
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம்
உங்கள் பெண் குழந்தைக்கு முதல் மாதவிடாய் வரும் போது ஒரு அம்மா எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
Menstrual Hygiene Day 2023: ஒரு பெண் குழந்தைக்கு மாதவிடாய் பற்றிய விஷயங்களை சொல்லிக் கொடுப்பது என்பது தாய்க்கு எப்பொழுதுமே சவாலான காரியம் தான். அவளின் சந்தேகங்களை எப்படி தீர்ப்பது, மாதவிடாய் சுகாதாரத்தை எப்படி பேணிக் காப்பது போன்ற பல விஷயங்கள் இதில் இருக்கின்றன.
முதல் மாதவிடாய் வரும் போது உங்கள் குழந்தைகளை எப்படி கையாள வேண்டும், மாதவிடாய் பற்றிய புரிதல்களை அவர்களுக்கு எப்படி எடுத்துக் கூறுவது போன்ற பல சந்தேகங்களுக்கு நாங்கள் விளக்கமளிக்கிறோம்.

உங்கள் பெண் குழந்தை முதல் மாதவிடாய் ஆகும் நிலையில் இருந்தால் உங்களுக்கு இந்த டிப்ஸ்கள் உதவியாக இருக்கும். ஒரு பெண் அவளுடைய மாதவிடாய் சுகாதாரத்தை பேணிக் காப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
பெண்ணுக்கு வயது வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைக்கு 10-15 வயது வரை மாதவிடாய் பற்றி பேச காத்திருக்கின்றனர். ஆனால் சில குழந்தைகள் 9 வயதிலேயே மாதவிடாயை சந்திக்கின்றனர். எனவே உங்கள் குழந்தைக்கு தேவையான விஷயங்களை சீக்கிரமே ஆரம்பிப்பது நல்லது. மாதவிடாய் பற்றிய உயிரியலை அறிவியல் பூர்வமாக நீங்கள் எடுத்துச் சொல்லலாம். அறிவியல் பூர்வமாக அதை நீங்கள் எடுத்துச் சொல்வது மிகவும் எளிதாக இருக்கும்.
மாதவிடாய் பற்றிய புரிதலை எப்படி எடுத்துக் கூறுவது?
ஒரு பெண் பருவமடைதல் என்பது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது. ஒரு பெண்ணின் கருப்பையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் எனப்படும் ஹார்மோன்கள் கருப்பை மூலம் வெளியிடப்படுகிறது. கருப்பை என்பது பெண் உடலில் உள்ள ஒரு உறுப்பு. அதில் கருமுட்டைகள் காணப்படுகின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களும் ஒரு குழந்தை வளர்ச்சிக்கு உதவுகிறது.
கருப்பையில் உள்ள கருமுட்டை விந்தணுவுடன் இணைந்து கருவுறுதல் நடைபெறுகிறது. இந்த கருமுட்டை கருவுறாமல் இருக்கும் போது கருப்பையின் புறணி உடைந்து மாதவிடாய் இரத்த போக்காக வெளியேறுகிறது. இந்த இரத்தம் பெண்ணுறுப்பு வழியாக வெளியேற்றப்படுகிறது. இதுவே மாதவிடாய் என்று அழைக்கப்படுகிறது.
இந்த முழு செயல்முறையும் நடக்க ஒரு மாதம் காலம் ஆகும். எனவே மாதந்தோறும் இந்த மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. இதில் மாதவிடாய் இரத்த போக்கானது 3-5 நாட்கள் வரை நடைபெறும் என்று உங்கள் பெண் குழந்தைக்கு அறிவியல் பூர்வமாக எடுத்துக் கூறலாம்.
மாதவிடாய் வலி
சில சமயங்களில் மாதவிடாய் பிடிப்புகள் இருக்கும். கருப்பை தசைகள் சுருங்கி விரியும் போது இந்த வலி ஏற்படுகிறது. அதே மாதிரி மாதவிடாய் காலங்களில் மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். மாதவிடாய் பிடிப்புகள் சில மணி நேரங்கள் அல்லது ஒரு நாள் வரைக் கூட நீடிக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாதவிடாய் வலிகளை போக்க நாம் சில இயற்கை வழிகளை பின்பற்றலாம். மாதவிடாய் காலங்களில் ஓய்வெடுத்தல், சூடான குளியல், சுடுநீர் ஒத்தடம் கொடுத்தல், சீமைச்சாமந்தி மூலிகை டீ குடித்து வரலாம்.
மாதவிடாய் பற்றிய சந்தேகங்களுக்கு விடையளியுங்கள்
உங்கள் பெண் குழந்தைக்கு மாதவிடாய் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை சரி செய்ய அவர்களுக்கு உதவுங்கள். முதல் மாதவிடாய் ஆனது 5 நாட்கள் வரை நீடிக்கும். பெண் குழந்தையின் வயது, செயல்பாட்டு நிலை மற்றும் உடல்நிலை பொருத்து மாதவிடாய் நீளம் மாறுகிறது. இரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம் மாதவிடாய் சுழற்சியின் நடுவிலும் ஏற்படலாம். எனவே மாதவிடாய் சுழற்சியை மாதந்தோறும் சரியாக கண் காணிக்க வேண்டும்.
மாதவிடாய் காலங்களில் பயன்படுத்த வேண்டிய பொருட்கள்
பெரும்பாலான இளம் பெண்கள் தங்கள் முதல் சில மாதவிடாய்களுக்கு சானிட்டரி பேட்களை பயன்படுத்துகிறார்கள். உங்கள் பெண் குழந்தைக்கு செளகரியமான ஒன்றை தேர்ந்தெடுங்கள். தற்போது மாதவிடாய் கோப்பைகள், மாதவிடாய் கால உள்ளாடைகள், டம்பான் போன்ற பொருட்கள் உள்ளன. இதில் உங்கள் மகள் தேவைக்கேற்ற ஒன்றை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள்.
மாதவிடாய் சுகாதாரம் பற்றி எடுத்துக் கூறுதல்
* மாதவிடாய் நாப்கின்களை 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி வர வேண்டும். நீங்கள் டெம்போன்களை பயன்படுத்துகிறீர்கள் என்றால் 4-8 மணி நேரத்திற்கு ஒரு முறை அதை மாற்ற வேண்டும்.
* மாதவிடாய் காலங்களில் பிறப்புறுப்பு பகுதியை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இது தேவையில்லாத துர்நாற்றத்தை நீக்க உதவி செய்யும்.
* சோப்பு மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற விஷயங்களை பெண்ணுறுப்பு பகுதியில் பயன்படுத்த வேண்டாம். சோப்பு மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவை உங்கள் பெண்ணுறுப்பு பகுதியில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்க வாய்ப்பு உள்ளது.
* மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் மாதவிடாய் சரும அழற்சி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
* மாதந்தோறும் மாதவிடாய் சரியாக வருகிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஒழுங்கற்ற மாதவிடாய் உங்களுக்கு பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
* மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மனநிலை மாற்றத்தை சமாளிக்க உங்கள் பெண் குழந்தைக்கு தியானம் செய்வது, இசை கேட்பது மற்றும் புத்தகங்கள் படிப்பது போன்ற விஷயங்களை மேற்கொள்ள சொல்லலாம்.



Click it and Unblock the Notifications