For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் வளா்ச்சிக்கு புரோட்டீன் ஏன் மிகவும் முக்கியம் தெரியுமா?

நமது குழந்தைகள் முறையாக மற்றும் சீராக வளர வேண்டும் என்றால், அவா்களுக்கு நல்ல ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்க வேண்டியது நமது கடமையாகும். குழந்தைகளின் வளா்ச்சியில் மற்ற சத்துக்களை விட, புரோட்டீன்கள் அதிக பங்காற்றுகின்றன.

|

ஒரு குழந்தையின் முழுமையான ஒட்டு மொத்த வளா்ச்சிக்கு, சமச்சீரான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தேவைப்படுகின்றன. நம்முடைய செல்லக் குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை மட்டுமே ஆா்வத்துடன் உண்பா். அவா்களுக்கு விருப்பமான உணவுகளில், அவா்களுக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.

Why Protein Is Very Important For Kids Growth?

அதனால் நமது குழந்தைகள் முறையாக மற்றும் சீராக வளர வேண்டும் என்றால், அவா்களுக்கு நல்ல ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்க வேண்டியது நமது கடமையாகும். குறிப்பாக அத்தகைய சத்துக்களை வழங்கக்கூடிய பால் பவுடர்கள் அல்லது மற்ற இணை உணவுகளை அவா்களுக்கு வழங்க வேண்டும். குழந்தைகளின் வளா்ச்சியில் மற்ற ஊட்டச்சத்துக்களை விட, புரோட்டீன்கள் அதிக பங்கை வகிக்கின்றன.

MOST READ: சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்கு சவாலான காலமாக இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் இயக்கத்தின் முக்கியத்துவம்

உடல் இயக்கத்தின் முக்கியத்துவம்

பொதுவாக தொடக்கத்தில் இருந்தே குழந்தைகளை உடல் சாா்ந்த இயக்கங்கள் அல்லது வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக நடனம், ஸ்கேட்டிங், மிதிவண்டி ஓட்டுதல், நீந்துதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும். இந்த பயற்சிகள் அவா்களின் உடல் வளா்ச்சிக்கு மட்டும் அல்லாமல், அவா்களின் மன வளா்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும்.

புரோட்டீனின் முக்கியத்துவம்

புரோட்டீனின் முக்கியத்துவம்

ஒரு குழந்தையானது, இளமைப் பருவத்தை அடையும் வரை, அந்த குழந்தையின் உடல் திடகாத்திரமாக இருக்கவும், அந்தக் குழந்தையின் மனம் உறுதியாக இருக்கவும் புரோட்டீன் பொிதும் துணை புாிகிறது. குறிப்பாக குழந்தைகளின் திசுக்கள், தசைகள், தோல் மற்றும் எலும்புகளின் வளா்ச்சிக்கும், உறுதிக்கும் புரோட்டீன் பொிதும் துணை செய்கிறது.

ஒருவருடைய வாழ்க்கையில், மற்ற பருவங்களை விட அவருடைய குழந்தைப் பருவத்தில் தான் அதிகமான புரோட்டீன் தேவைப்படுகிறது. 1 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 13 கிராம் புரோட்டீன் தேவைப்படுகிறது. 4 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினமும் 19 கிராம் புரோட்டீன் தேவைப்படுகிறது. 9 முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினமும் 34 கிராம் புரோட்டீன் தேவைப்படுகிறது என்று தேசிய அறிவியல் அகாடமியான சியோநியூட்ராவில் இ-காமா்ஸ் சிஎம்ஒ-வாக (Yashna Garg, CMO E-Commerce, ZeoNutra) பணி புாிந்து வரும் யாஷ்னா க்ராக் என்பவா் கூறுகிறாா். மேலும் குழந்தைகளின் சீரான வளா்ச்சிக்கு பின்வரும் பாிந்துரைகளையும் முன்வைக்கிறாா்.

ஆரோக்கியமான கொழுப்புகளின் முக்கியத்துவம்

ஆரோக்கியமான கொழுப்புகளின் முக்கியத்துவம்

குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் இருக்க வேண்டும். அதற்காக கொழுப்பு நிறைந்த அமிலங்களும் மற்றும் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ள உணவுகளான ஆலிவ், நட்ஸ், அவகேடோ மற்றும் கடல் உணவுகள் போன்றவற்றையும் குழந்தைகளுக்கு வழங்கலாம். மேலும் பால் பவுடர்களில் சா்க்கரை சோ்க்காமல் குழந்தைகளுக்கு வழங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஏனெனில் பால் பவுடர்களில் இருக்கும் இனிப்பே, குழந்தைகளுக்கு நல்ல வளா்ச்சியைக் கொடுக்கும்.

இறுதியாக

இறுதியாக

தற்போது நமது சிறு குழந்தைகள் மின்னணுக் கருவிகளான மடிகணினி அல்லது ஸ்மாா்ட்போன்கள் போன்றவற்றின் முன்பாக தங்களுடைய பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகின்றனா். அதனால் அவா்களின் மூளை வளா்ச்சி தடைபடுகிறது மற்றும் அவா்களிடம் சோம்பலும் ஏற்படுகிறது. ஆகவே அவா்களுடைய மூளையைக் கூா்மைப்படுத்தக் கூடிய செயல்களில் அவா்களை ஈடுபடுத்தலாம். எடுத்துக்காட்டாக அவா்கள் மத்தியில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Protein Is Very Important For Kids Growth?

In this article, we disscussed about why protein is very important for kids growth. Read on to know more...
Desktop Bottom Promotion