For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு வைரஸ் காரணமாக தடிப்பு ஏற்படுவதை கண்டறிவது எப்படி?

கிருமி தொற்று காரணமாக குழந்தைகளுக்கு பல்வேறு வகையான தடிப்புகள் உடலில் தோன்றலாம். இவற்றின் காரணமாக சிவப்பு அல்லது பிங்க் நிற திட்டுக்கள் உடலில் காணப்படலாம்.

|

பெரியவர்களாகிய நமக்கு உடலில் ஏதேனும் தடிப்பு இருப்பதை எளிதாக கண்டறிந்துவிடலாம். ஆனால் குழந்தைகளுக்கு அப்படி உடனே பார்க்க முடியாது. ஆகவே குழந்தைகள் உடலில் தென்படும் தடிப்புகள் மற்றும் இதர பிரச்சனைகளை பெற்றோர்கள் கவனத்துடன் ஆராய்ந்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

கிருமி தொற்று காரணமாக குழந்தைகளுக்கு பல்வேறு வகையான தடிப்புகள் உடலில் தோன்றலாம். இவற்றின் காரணமாக சிவப்பு அல்லது பிங்க் நிற திட்டுக்கள் உடலில் காணப்படலாம். சில குழந்தைகளுக்கு இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் தடிப்புகளும் தென்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தட்டம்மை

தட்டம்மை

சுவாச தொற்று காரணமாக உண்டாகக்கூடிய ஒரு கிருமி தொற்று தட்டம்மை. இதன் காரணமாக அரிப்பை உண்டாக்கும் திட்டுக்கள் சருமத்தில் உண்டாகும். இதற்கான தடுப்பூசி போடுவதால் குழந்தைகளை இந்த பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும்.

சின்னம்மை

சின்னம்மை

வரிசெல்லா ஜோஸ்டர் என்ற கிருமி காரணமாக உண்டாகக்கூடிய ஒரு பாதிப்பு சின்னம்மை. உடல் முழுக்க சீழ் நிரப்பப்பட்ட கொப்பளங்கள் தோன்றும். நாளடைவில் இவை அதிகரிக்கக்கூடும். இந்த தொற்று பாதிப்பு 2-3 வாரங்கள் நீடிக்கும். இந்த பாதிப்பையும் தடுப்பூசி மூலம் தடுக்க முடியும்.

கை, பாதம் மற்றும் வாய் நோய்கள்

கை, பாதம் மற்றும் வாய் நோய்கள்

இது காக்ஸாகீ வைரஸால் குழந்தைகளுக்கு ஏற்படும் மற்றொரு வைரஸ் தடிப்பு ஆகும். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை இது பாதிக்கிறது.

ரோஸல்லா

ரோஸல்லா

இரண்டு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடிய 6-வது நோயாக அறியப்படுவது இந்த நோய். ஹ்யுமன் ஹெர்பஸ் வைரஸ் காரணமாக இது உண்டாகிறது.

கிருமிகள் காரணமாக தடிப்பு உண்டாவதற்கான அறிகுறிகள்:

கிருமிகள் காரணமாக தடிப்பு உண்டாவதற்கான அறிகுறிகள்:

* இந்த வகை பாதிப்புகள் அனைத்தும் தீவிர நிலையை அடைவதில்லை. காலப்போக்கில் அதாவது சில வாரங்களில் அல்லது சில நாட்களில் முற்றிலும் மறைந்துவிடக் கூடும்.

* இருப்பினும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள் அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இந்த வகை தடிப்புகள் அல்லது காய்ச்சலுக்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை தெரிந்து கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதை கண்டறிவது எளிது.

கிருமிகளால் உண்டாகும் தடிப்புகளுக்கான பொதுவான அடையாளங்கள்:

கிருமிகளால் உண்டாகும் தடிப்புகளுக்கான பொதுவான அடையாளங்கள்:

* பிங்க் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள்

* சீழ் நிரம்பிய கொப்பளங்கள்

* திட்டுக்களை சுற்றி அரிப்புகள்

* கொப்பளங்கள்

* மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல்

* காய்ச்சல்

* கண்களில் நீர் வழிதல்

* வயிற்றுப்போக்கு

தடிப்புகளுக்கான தீவிர அறிகுறி மற்றும் உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் தடிப்புகளுக்கான அறிகுறிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

* தடிப்பு உள்ள இடத்திற்குள் அல்லது அந்த இடத்தை சுற்றி வலி

* குழந்தை நாள் முழுவதும் சோம்பலாக இருப்பது

* குழந்தை பால் அல்லது தண்ணீர் குடிக்க மறுப்பது

* தடிப்பை சுற்றி வீக்கம் உண்டாவது

* நீடித்த அதிகமான காய்ச்சல்

* சில நாட்களுக்கு பிறகும் தடிப்புகள் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்து இருப்பது.

குழந்தைகளுக்கு இவ்வித தடிப்புகள் வராமல் தடுக்க அவர்களை நோயெதிர்ப்பு சக்தியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தையின் வயதிற்கு ஏற்ப அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொடுப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பருவ நிலைக்கேற்ப தோன்றும் நோய்கள் குறித்த அறிகுறிகளை தெரிந்து கொண்டு அதில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பது நல்லது. உங்கள் குழந்தை சற்று அசௌகரியமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

குழந்தைகளுக்கு கிருமிகள் காரணமாக உண்டாகும் தடிப்புகளை தடுப்பது எப்படி?

குழந்தைகளுக்கு கிருமிகள் காரணமாக உண்டாகும் தடிப்புகளை தடுப்பது எப்படி?

* தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதால் கிருமிகளால் உண்டாகும் தடிப்புகளை தடுக்க முடியும்.

* சின்னம்மை , தட்டம்மை , ரூபெல்லா போன்ற கிருமிகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தேவையான தடுப்பூசிகளைப் போட வேண்டும். மருத்துவர் உங்களுக்கு தடுப்பூசிக்கான அட்டவணையை வழங்குவார்.

* மோசமான சுகாதார நிலைகள் உள்ள இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்லாமல் இருப்பது நல்லது.

* பருவநிலை மாறுப்பாட்டின் போது, குறிப்பாக மழைக்காலங்களில் கிருமி தொற்று அதிகம் உண்டாகும் வாய்ப்பு இருப்பதால் அந்த காலகட்டத்தில் சுற்றுப்புற சுகாதாரத்தை காப்பது நல்லது.

* நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் குழந்தையிடம் நெருங்காமல் பார்த்து கொள்வது நல்லது.

* இருமல் அல்லது தும்மல் போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுடன் நெருக்கமாக விளையாடுவதை தவிர்ப்பது நல்லது .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Identify and Diagnose A Viral Rash In Infants

Here are some tips to identify and diagnose a viral rash in infants. Read on...
Desktop Bottom Promotion