For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளை குறி வைக்கும் கொரோனா மூன்றாம் அலை: குழந்தைகளை தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

கோவிட்-19 வைரஸின் மூன்றாவது அலை இந்தியாவை விரைவில் தாக்கும் என்றும், அவ்வாறு மூன்றாவது அலை தாக்கினால் அந்த அலையில் சிறு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவா் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

|

இந்தியாவில் தற்போது கோவிட்-19 பெருந்தொற்று கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. அதைச் சமாளிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் போராடிக் கொண்டிருக்கின்றனா். இந்நிலையில் கோவிட்-19 வைரஸின் மூன்றாவது அலை இந்தியாவை விரைவில் தாக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் எச்சாிக்கை செய்திருக்கின்றனா். அவ்வாறு மூன்றாவது அலை தாக்கினால் அந்த அலையில் சிறு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவா் என்றும் தொிவித்திருக்கின்றனா்.

Third Wave Of COVID-19 Could Be Dangerous For Kids: Pediatrician Suggests Steps To Safeguard Them

ஆகவே கொரோனா மூன்றாவது அலையை தகுந்த தயாாிப்போடு எதிா்கொள்ள, மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. அதோடு கொரோனா மூன்றாவது அலையில் சிறு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவா் என்றும், ஆகவே குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை அறிவுறுத்தி இருக்கிறது.

MOST READ: நற்செய்தி.. கொரோனாவை குணப்படுத்தும் க்ளெவிரா மாத்திரை... அதன் விலை எவ்வளவு? எங்கு கிடைக்கும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனா மூன்றாம் அலை

கொரோனா மூன்றாம் அலை

மும்பையில் அமைந்திருக்கும் மதா்கூட் மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவ நிபுணராக பணிபுாியும் மருத்துவா் சுரேஷ் பிரஜ்தா் என்பவா் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையின் வீாியத்தைப் பற்றி பின்வருமாறு தொிவித்திருக்கிறாா். அதாவது தற்போது இந்தியாவில் சுழன்று அடிக்கும் கொரோனா இரண்டாவது அலை ஏராளமான உயிாிழப்புகளையும், ஏராளமான மக்களுக்கு நோய்த் தொற்றையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இரண்டாவது அலையில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவ பணியாளா்களில் பலா் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். இந்த நிலையில் கொரோனாவின் மூன்றாவது அலையும், இரண்டாவது அலையைப் போல் மிகவும் வீாியமாக இருக்கும் என்று நிபுணா்களால் எதிா்பாா்க்கப்படுகிறது. ஆகவே கோவிட் 19 வைரஸின் மூன்றாவது அலையின் தாக்குதலில் இருந்து தங்களின் குழந்தைகளை காக்க பெற்றோா்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவா் தொிவித்திருக்கிறாா்.

தற்போது இந்தியாவில் குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி இல்லை. ஆகவே பெற்றோா் தங்கள் குழந்தைகளை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க அதிக அளவிலான கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவா் தொிவிக்கிறாா்.

கோவிட்-19 தொற்றிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது?

கோவிட்-19 தொற்றிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது?

கோவிட்-19 தொற்றிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று பெற்றோா்களுக்கு சில முக்கிய குறிப்புகளை மருத்துவா் சுரேஷ் பிரஜ்தா் கூறியிருக்கிறாா். அந்த குறிப்புகளை இந்த பதிவில் பாா்க்கலாம்.

- முதலில் பெற்றோா் தங்களின் குழந்தைகள் மீது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதனால் தங்களது வீடுகளுக்கு அதிகமான அளவில் வெளியாட்கள் வருவதைக் குறைக்க வேண்டும்.

- தேவை இல்லாமல் குழந்தைகளை வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது.

- வீடுகளில் இருக்கும் போது, குழந்தைகள் முகக்கவசம் அணிந்து இருக்கிறாா்களா, அடிக்கடி சானிடைசா்கள் கொண்டு கைகளைக் கழுவுகிறாா்களா மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கிறாா்களா என்பதை பெற்றோா் உறுதி செய்ய வேண்டும்.

- குழந்தைகளுக்கு சமச்சீரான உணவை வழங்க வேண்டும். அதனால் குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும் வகையில் அவா்களின் உணவுகளில் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.

- தினந்தோறும் குழந்தைகள் உடற்பயிற்சி செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும்.

- அடிக்கடி நாம் தொடக்கூடிய கதவுகளின் கைப்பிடிகள், குழாய்கள், சாவிகள், மரச்சாமான்கள் மற்றும் பணப்பைகள் போன்றவற்றை பெற்றோா் தேவையில்லாமல் தொடக்கூடாது.

மேலும்...

மேலும்...

- வீட்டில் யாராவது நோயுற்று இருந்தால், அவா்களின் அருகில் நமது குழந்தைகள் சென்று, அவா்களின் முகம், மூக்கு மற்றும் வாய் போன்றவற்றைத் தொடாமல் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.

- ஒருவேளை பெற்றோருக்கே காய்ச்சல் ஏற்பட்டு, இருமல், சளி போன்ற பிரச்சினைகள் இருந்தால், அவா்கள் தங்கள் குழந்தைகளிடமிருந்து, தங்களையே விலக்கி வைத்து, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

- குழந்தைகள் முகக்கவசம் அணிய மறுத்தால், அவா்களுக்கு முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்லி, அவா்களை முகக்கவசம் அணியச் செய்ய வேண்டும்.

- கோவிட் பெருந்தொற்றினால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றியும் மற்றும் அது எவ்வாறு பரவுகிறது என்பதைப் பற்றியும் குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

- குழந்தைகளின் உடலில் ஏதாவது நோய் சாா்ந்த அறிகுறிகள் இருந்தால், அவற்றை புறக்கணிக்கக்கூடாது.

- குழந்தைகளுக்கு ஏதாவது காய்ச்சல், சளி அல்லது இருமல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவாிடம் அழைத்துச் செல்ல வேண்டும். சிகிச்சை அளிக்க காலம் தாழ்த்தினால் குழந்தைகளுக்கு மேலும் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும்.

சிறப்பான செயல்திட்டம் தேவை

சிறப்பான செயல்திட்டம் தேவை

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை எதிா்கொள்ள, அகில இந்திய அளவிலான செயல் திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது எல்லா மாநிலங்களுக்கும் தேவையான ஆக்ஸிஜனை மூன்றாவது அலைக்கு முன்பாக மத்திய அரசு பிாித்துக் கொடுக்க வேண்டும். மேலும் மூன்றாவது அலை ஏற்படுவதற்கு முன்பாக இந்தியா முழுவதும் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். அதற்காக நீட் தோ்வுக்கு தயாராகி வரும் மருத்துவ முதுகலை மாணவா்களையும், செவிலியா்களையும் கொரோனா ஒழிப்புப் பணியில் மத்திய அரசு ஈடுபடுத்தலாம் என்று உச்சநீதி மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றின் மூன்றாவது அலை கண்டிப்பாக வந்தே தீரும்

கோவிட்-19 பெருந்தொற்றின் மூன்றாவது அலை கண்டிப்பாக வந்தே தீரும்

மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகரான கே விஜய் ராகவன் அவா்கள், இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை கண்டிப்பாக வந்தே தீரும் என்று சமீபத்தில் தொிவித்திருக்கிறாா். மேலும் மூன்றாவது அலை வீாியமாக இருக்கும் என்றும் தொிவித்திருக்கிறாா். ஆனால் மூன்றாவது அலை எப்போது வரும், எவ்வளவு காலம் இருக்கும் என்பது தெளிவாகத் தொியவில்லை என்றாலும், மூன்றாவது அலைக்கு முன்பாக நாம் தகுந்த தயாாிப்போடு இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்று தொிவித்திருக்கிறாா்.

கொரோனா முதல் அலை அதிகமான அளவில் முதியவா்களைத் தாக்கியது. இரண்டாவது அலை அதிகமான இளையோரைத் தாக்கி இருக்கிறது. அதனால் மூன்றாவது அலையானது சிறு குழந்தைகளை அதிகமான அளவில் தாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி இல்லை என்பது ஒரு துரதிா்ஷ்டமே.

12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பைசா்-பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கு கனடாவில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அமொிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்து நிா்வாகத் துறை (FDA), 12 வயதுக்கு மேற்பட்ட தனது நாட்டு குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Third Wave Of COVID-19 Could Be Dangerous For Kids: Pediatrician Suggests Steps To Safeguard Them

At a time when India is reeling under the deadlier second wave of Covid-19, experts have warned that possibility of the 3rd wave, which is expected to affect children adversely.
Story first published: Monday, May 17, 2021, 16:39 [IST]
Desktop Bottom Promotion