For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Krishna Janmashtami 2023: கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தைக்கு கிருஷ்ணர் வேடம் போடுவது எப்படி?

|

Krishna Janmashtami 2023: கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 06 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி என்பது கிருஷ்ணர் பிறந்த நாளாகும்.

பலரும் கிருஷ்ண ஜெயந்தி நாளன்று விரதமிருந்து வீட்டில் கிருஷ்ணரை அழகாக அலங்கரித்து, அவருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து வழிபடுவது வழக்கம். இது தவிர வீட்டினுள் கிருஷ்ணரின் பாதங்களை வரைவார்கள். இதுமட்டுமின்றி, வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு ஃபோட்டோசூட் எடுக்கவும் செய்வார்கள்.

Krishna Janmashtami 2023: How to Dress Up Your Child as Lord Krishna In Tamil

நீங்கள் உங்கள் குழந்தைக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு ஃபோட்டோசூட் எடுக்க நினைத்தால், பின்வரும் விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் இவையெல்லாம் கிருஷ்ணர் வேடம் போடுவதற்கு தேவையான பொருட்களாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேஷ்டி

வேஷ்டி

ஆண்களுக்கான பாரம்பரிய இந்திய உடை தான் வேஷ்டி. இந்தியாவின் பெரும்பாலான கிராமப்பகுதிகளில் ஆண்கள் வேஷ்டியை தான் அணிவார்கள். நீங்கள் உங்கள் குழந்தைக்கு கிருஷ்ணர் வேடம் போட நினைத்தால், நல்ல காட்டன் அல்லது சில்க் வேஷ்டியை கட்டிவிடுங்கள். ஏனெனில் கிருஷ்ணரும் வேஷ்டி தான் கட்டியிருப்பார்.

கிரீடம்

கிரீடம்

கிருஷ்ணர் வேடத்திற்கு தேவையான மற்றொரு முக்கியமான பொருள் கிரீடம். தற்போது கடைகளில் கிரீடங்களை எளிதில் காணலாம். எனவே அழகான கோல்டன் அல்லது சில்வர் நிற கிரீடத்தை வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், வீட்டிலேயே அழகாக கிரீடத்தை செய்யலாம்.

மயில் இறகு

மயில் இறகு

கிருஷ்ண பகவானின் அடையாளங்களுள் மயில் இறகும் ஒன்று. கிருஷ்ணர் வேடம் போட்டால் இது கட்டாயம் இருக்க வேண்டும். கிருஷ்ணரிடம் இருக்கும் மற்றொரு முக்கியமான பொருள் புல்லாங்குழல் ஆகும். இது மயில்களுடன் நடனமாட கிருஷ்ணர் புல்லாங்குழலைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

புல்லாங்குழல்

புல்லாங்குழல்

கிருஷ்ணருக்கு "முரளிதர்" என்ற பெயரும் உண்டு. இதற்கு "முரளி அல்லது புல்லாங்குழல் அணிந்தவர்" என்று பொருள். கிருஷ்ணர் இந்த புல்லாங்குழலில் பல அழகான இசையை வாசித்து, அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் கவர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே உங்கள் குழந்தைக்கும் புல்லாங்குழலை கையில் கொடுங்கள்.

வெண்ணெய்

வெண்ணெய்

கிருஷ்ணருக்கு வெண்ணெய் என்றால் மிகவும் பிடிக்கும். கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும் போது கோகுலத்தில் உள்ள பல வீடுகளில் இருக்கும் வெண்ணெய், பால், தயிர் போன்றவற்றை கொள்ளையடித்ததாக புராணங்கள் கூறுகின்றன. எனவே போட்டோ எடுக்கும் போது கிருஷ்ணர் வேடம் போட்ட உங்கள் குழந்தையின் அருகில் அல்லது கையில் வெண்ணெய் குடத்தை கொடுக்கலாம்.

அணிகலன்கள்

அணிகலன்கள்

கிருஷ்ணரின் வேடத்தில் அணிகலன்கள் மிகவும் முக்கியமாகும். கிருஷ்ணர் பொதுவாக நெக்லேஸ், பிரேஸ்லெட், காலில் காப்பு மற்றும் பிற நகைகளை அணிந்திருப்பார். எனவே கிருஷ்ணர் வேடம் போடும் உங்கள் குழந்தைக்கு அணிகலன்களை போட்டுவிட மறக்காதீர்கள்.

திலகம்

திலகம்

கிருஷ்ணரின் வேடத்தில் உள்ள மற்றொரு முக்கியமான விஷயம் நெற்றித் திலகம் ஆகும். இதுவே கிருஷ்ணரின் தோற்றத்தை நிறைவு செய்யும். திலகத்தைத் தவிர வேறு எந்த மேக்கப்பையும் குழந்தைகளுக்கு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் அது குழந்தையின் சருமத்தை சேதப்படுத்தும். மேலும் உங்கள் குழந்தையின் கண்ணில் ஐ-லைனர் அல்லது காஜல் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Krishna Janmashtami 2023: How to Dress Up Your Child as Lord Krishna In Tamil

Krishna Janmashtami 2023: How to Dress Up Your Child as Lord Krishna In Tamil, Read on...
Desktop Bottom Promotion