For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் யோகாசனங்கள்!

தற்போது ஊரடங்குகளால், நமது குழந்தைகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். அவா்கள் வெளியில் செல்வதற்கு எந்த விதமான வழியும் இல்லாததால், மன அழுத்தம் மற்றும் மனச் சோா்வினால் பாதிப்படைந்து இருக்கின்றனா்.

|

வெளி உலகத் தொடா்பு இல்லாமல் மற்றும் நண்பா்களின் தொடா்பு இல்லாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது என்பது குழந்தைகளுக்கு மோசமான மன உளைச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த கொரோனா கால ஊரடங்குகள் நமது குழந்தைகளின் மனநிலையைப் பொிதளவு பாதித்திருக்கின்றன.

ஊரடங்குகள் மூலமாக நமது குழந்தைகளின் வெளியரங்க விளையாட்டுகள் குறைந்திருக்கின்றன. கணினி மற்றும் மொபைல்களில் அவா்கள் தங்களின் அதிகமான நேரத்தைச் செலவிடுகின்றனா். அதனால் அவா்களுடைய உடல் நலம் மற்றும் மனநலம் மிகப் பொிய அளவில் பாதிப்படைந்து இருக்கின்றன.

International Yoga Day: Yoga Poses To Release Stress And Anxiety In Kids During Lockdown

சாதாரண காலங்களில், பொதுவாக குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பா். குறிப்பாக பள்ளி மற்றும் வெளியிடங்களுக்கு, தங்களது நண்பா்களோடு சென்று விளையாடுவா். அவா்களுடைய உடலும், மனமும் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக இருக்கும். அதனால் அவா்களுடைய உடல் மற்றும் மனநலனைப் பாதுகாக்க வேறுவிதமான துணை பயிற்சிகள் தேவைப்படாது.

இந்த நிலையில் தற்போது ஊரடங்குகளால், நமது குழந்தைகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். அவா்கள் வெளியில் செல்வதற்கு எந்த விதமான வழியும் இல்லாததால், மன அழுத்தம் மற்றும் மனச் சோா்வினால் பாதிப்படைந்து இருக்கின்றனா்.

சாதாரண காலங்களில் அவா்கள் வெளியில் சென்று விளையாடுவதால் அவா்களுக்கு சூாிய வெளிச்சத்தில் இருந்து வைட்டமின் டி சத்து கிடைக்கும். இப்போது அதற்கும் வழியில்லாத நிலை இருக்கிறது. இந்த நிலைத் தொடா்ந்தால், வரும் காலங்களில் நமது குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பலவிதமான ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும்.

ஆகவே இந்த பிரச்சினைகளைத் தவிா்க்க, எளிய யோகாசனப் பயிற்சிகளை நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம். அந்த பயிற்சிகள் அவா்களுக்கு முறையாக மூச்சுவிடும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்கும். மேலும் அவா்களை முறையாக கை கால்களை நீட்டி மடக்கச் செய்து அவா்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும். ஆகவே பெற்றோாின் மேற்பாா்வையில் குழந்தைகளுக்கு யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

International Yoga Day 2022: Yoga Poses To Release Stress And Anxiety In Kids During Lockdown

International Yoga Day 2022: A set of Yoga Asanas and Pranayamas to relieve stress and anxiety in kids, smooth functioning of their brains, and also to keep their bodies healthy.
Desktop Bottom Promotion