Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
உங்க குழந்தை ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இதை அவங்க உணவில் சேர்க்க மறக்காதீங்க..
குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ற அளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்குவது மிகவும் முக்கியமானது என்று ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தான் அதிக அக்கறை செலுத்துவதுண்டு. ஆரோக்கியமாக இருப்பதற்கு, குழந்தைகளுக்கு ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து கொடுப்பதில் கவனம் செலுத்துவார்கள். குழந்தைகள் சாப்பிடுவதே சிறிதளவு உணவு தான். ஆனால், அந்த உணவில் அனைத்து சத்துக்களும் அடங்கி இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும்.

குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ற அளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்குவது மிகவும் முக்கியமானது என்று ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. ஏனெனில், அவர்கள் வயது அதிகரிக்கும்போது, அவர்களின் வளர்சிதை மாற்றமும், செரிமான அமைப்பும், உடல் செயல்பாடும் மாறுபடும். அவற்றிற்கு ஏற்ப குழந்தைகளின் உணவுகளில் சத்துக்களின் உள்ளடக்கமும் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் குழந்தை எந்த உணவில் அல்லது எந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டிகிறார்களோ, அதை அவர்களுக்கு வழங்குங்கள்.
ஊட்டச்சத்தைப் பொறுத்தவரை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் வித்தியாசப்படுத்தக்கூடாது. வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக தேவை என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்து. இருப்பினும், குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவை, அவர்களது வயதுடன் தொடர்புடையது. ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில், குழந்தைகளுக்கு கடுமையான உணவு முறைகளை கடைப்பிடிப்பதை காட்டிலும், பல வகையான உணவுகளைக் கொடுப்பதையே பரிந்துரைக்கிறார். சில குறிபிட்ட வகை உணவுகள் ஆற்றலுக்கான நல்ல ஆதாரமாக உள்ளன. அவை உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் இளம் வயதில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க மிகவும் முக்கியமானது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

கால்சியம்
கால்சியம் சத்து குழந்தைகளுக்கு மிக முக்கியமான ஒன்று. வலுவான எலும்புகள், பற்கள் உருவாவதற்கு கால்சியம் தேவை. நரம்புகள், தசைகள் மற்றும் இதயத்திற்கும் கால்சியம் அவசியம். ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்கள் வாழ்நாள் முழுவதும் அவசியம் என்பதால், தினந்தோறும் போதுமான கால்சியத்தை எடுத்து கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். கால்சியத்தின் சிறந்த ஆதாரம் பால். மற்ற கால்சியம் நிறைந்த உணவுகள் சீஸ், தயிர், கீரை, ப்ரோக்கோலி, டோஃபு மற்றும் பல உணவுகள் உள்ளன.

நார்ச்சத்து
நார்ச்சத்து ஒவ்வொருவரின் உணவிலும் இன்றியமையாத அமைகிறது. குழந்தைகளுக்கு இது அவசியமான ஒன்று ஆனால், குறைந்த அளவில். இது உங்கள் குழந்தையின் செரிமானத்தை சீராக வைத்திருக்கும். பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உங்கள் குழந்தைகளின் உணவில் ஃப்ரெஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்க்கலாம். இது அவர்களுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

இரும்புச்சத்து
இரும்புச்சத்து குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு உதவிடும். ஏனெனில், இரும்புச்சத்து தான் இரத்த சிவப்பணுக்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை மற்றும் பிற கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் விளைவாக, உங்கள் குழந்தையின் உணவில் போதுமான இரும்புச்சத்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முழு தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ், பீன்ஸ் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே, அவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

புரதச்சத்து
புரதச்சத்தானது, குழந்தையின் உடல் செல்களை உருவாக்கவும், உணவை ஆற்றலாக மாற்றவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்லவும் உதவுகிறது. இது குழந்தைகளின் உடலில் தசைகள் மற்றும் பிற திசுக்களை உருவாக்குகிறது. இதுதவிர, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது. புரதம் நிறைந்த உணவுகள் என்றால் மீன், கோழி, வான்கோழி, லீன் மீட், நட்ஸ், முட்டை, பால், தயிர், சீஸ், பீனட் பட்டர் ஆகியவை அடங்கும்.

வைட்டமின் டி
வைட்டமின் டி சத்தானது, உடலில் கால்சியத்தை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது முற்றிலும் வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க உதவிடும். வைட்டமின் டி-ன் மற்ற ஆரோக்கிய நன்மைகள் என்னவென்றால், மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, சிறந்த மூளை செயல்பாடு மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்திறன் ஆகியவை அடங்கும். குழந்தைகள் வெளியே சென்று சூரிய ஒளியில் விளையாடுவதன் மூலம் இயற்கையாகவே அவர்கள் வைட்டமின் டி-யை பெறுகிறார்கள்.

நிபுணர்களின் ஆலோசனை
4-8 வயதுடைய குழந்தைகளுக்கு தினசரி குறைந்தபட்சம் 25 மில்லிகிராம் அளவிற்கு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அதேசமயம், 9-13 வயதுடைய குழந்தைகளுக்கு தினசரி குறைந்தபட்சம் 45 மில்லிகிராம் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. தங்கள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தினசரி ஊட்டச்சத்து அளவு கிடைப்பதை உறுதி செய்வது பெற்றோராகிய உங்களின் பொறுப்பாகும். நற்பதமான ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, ப்ராக்கோலி, கிவி பழங்கள், முட்டைக்கோஸ், மிளகுத்தூள் மற்றும் பிற காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலமாகவும் ஊட்டச்சத்தைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications