Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
பெற்றோர்களே! உங்க குழந்தை எல்லாரிடமும் மரியாதையா நடந்துக்கணுமா? அப்ப இந்த விஷயங்கள சொல்லிக்கொடுங்க!
எது பொருத்தமானது என்பதைப் பற்றிய தெளிவான உணர்வை உங்கள் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். ஒரு நல்ல ஆசிரியராக இருப்பதற்கு நீங்கள் அவர்களை அவமானப்படுத்தவோ கத்தவோ தேவையில்லை
ஒவ்வொரு குழந்தையையும் வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவாலான கடமையாக இருக்கும். அவர்களின் ஆரோக்கியம் முதல் அவர்களின் எதிர்கால வாழ்க்கை முதல் எல்லாவற்றையும் பெற்றோர்களே முன்னின்று கவனிக்க வேண்டும். அந்த வகையில், உங்கள் குழந்தைகளுக்கு மரியாதையை கற்பிப்பது, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக அவசியம். ஒவ்வொரு பெற்றோரும் மரியாதைக்குரிய குழந்தையைதான் வளர்க்க விரும்புகிறார்கள். ஆனால், உங்கள் குழந்தைகளுக்கு மரியாதை கற்பிப்பது மிகவும் கடினமான வேலை. மற்றவர்களுக்கும் தங்களுக்கும் மரியாதை கற்பிக்க நேரமும் முயற்சியும் தேவை.

'மன்னிப்பு', 'தயவு செய்து', 'நன்றி' போன்ற கண்ணியமான வார்த்தைகள் மற்றும் வெளிப்பாடுகளைப் பயன்படுத்த உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். மரியாதை என்பது அவர்களின் செயல்களில் மட்டுமல்ல, மற்றவர்களைப் பார்க்கும் விதத்திலும் காட்டப்படுகிறது என்பதை அவர்களுக்கு விளக்குவது அவசியம். உங்கள் குழந்தைக்கு எவ்வாறு மரியாதையை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குழந்தை உங்களுக்கு நண்பர் அல்ல
உங்கள் குழந்தையிடம் நீங்கள் நண்பராக பழக வேண்டும். ஆனால், எல்லா நேரங்களிலும் நீங்கள் நண்பராக இருக்க முடியாது. உங்கள் குழந்தை வளரத் தொடங்கும்போது, ஒரு பெற்றோராக அவர்களுக்கு மரியாதையை கற்று தர வேண்டும். உங்கள் பிள்ளைக எல்லாரிடமும் எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்பிப்பது உங்கள் பொறுப்பு. ஏனென்றால் நீங்கள் அவர்களின் ஆசிரியர், அவர்களின் வழிகாட்டி மற்றும் அவர்களின் பயிற்சியாளர். இந்த இடத்தில் உங்கள் குழந்தை உங்கள் நண்பர் அல்ல, அவர்கள் உங்கள் குழந்தை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குழந்தை வளரும்போது உங்கள் உறவு மேலும் நட்பாக உருவாகலாம். ஆனால், சிறு வயதினராக அவர்கள் விஷயங்களைக் கற்கும் வயதில் இருக்கும்போது, நல்ல வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.

மரியாதையுடன் அவர்களைத் திருத்தவும்
உங்கள் குழந்தை அவமரியாதையாக பேசுவதையோ மற்றும் நடந்து கொள்வதையோ நீங்கள் கண்டால், அவர்களிடம் உங்கள் குரலை உயர்த்தி பேச வேண்டாம். அவர்களைத் திருத்தும்போது கத்தவோ திட்டவோ தேவையில்லை. அந்த நேரத்தில், நீங்கள் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும். நீங்கள் மரியாதையுடன் நடந்துகொள்வதன் மூலம் அவர்களுக்கு மரியாதையை கற்ப்பிப்பதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்தவும். அவர்களைத் திருத்தும்போது கத்துவது அல்லது முரட்டுத்தனமாக நடந்துகொள்வதால் எந்தப் பயனும் இல்லை. உண்மையில், இது விஷயங்களை மோசமாக்கும்.

சரி மற்றும் தவறு இடையே வேறுபாடு
எது பொருத்தமானது என்பதைப் பற்றிய தெளிவான உணர்வை உங்கள் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். ஒரு நல்ல ஆசிரியராக இருப்பதற்கு நீங்கள் அவர்களை அவமானப்படுத்தவோ கத்தவோ தேவையில்லை. ஒரு பொது இடத்தில் கூட, உங்கள் பிள்ளையின் நடத்தையை நீங்கள் சரிசெய்ய வேண்டுமானால், தனியாக அழைத்து பேச வேண்டும். மற்றவர்கள் முன்னிலையில், அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டாம். மேலும், சரி தவறுக்கு இடையேயான வேறுபாடுகளை அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

"மன்னிக்கவும்" என்று சொல்ல கற்றுக்கொடுங்கள்
மரியாதை என்பது உங்கள் குழந்தைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்பிப்பது. 'மன்னிக்கவும்', "நன்றி" மற்றும் "தயவுசெய்து" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்ற பலவிதமான நடத்தைகளை உங்கள் பிள்ளைக்கு கற்பிக்க வேண்டும். அதேபோல, நீங்கள் ஏதேனும் தவறு செய்தாலும், உங்கள் பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பெற்றோர்களுடைய நடத்தையும் குழந்தைகளுக்கு மரியாதையை கற்பிக்கும் படமாக இருக்க வேண்டும்.

வெளிப்படுத்த கற்றுக்கொடுங்கள்
வருத்தம் தெரிவிப்பது மரியாதை காட்டுவதற்கான ஒரு வழி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். பாராட்ட வேண்டிய விஷயங்களுக்கு உண்மையிலேயே பாராட்ட உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். உங்கள் குழந்தை ஏதாவது நல்ல விஷயத்திற்காக பாராட்டுகளைப் பெற்றால், "நன்றி" என்று சொல்லவும், மற்ற நபரிடம் பணிவையும் கருணையையும் சேர்க்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.



Click it and Unblock the Notifications