For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிடம் இருந்து பாதுகாக்கும் வழிகள் என்ன தெரியுமா?

குழந்தையின் உள் அமைப்பை வலுப்படுத்துவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. முன்கூட்டிய பருவமடைதல், உடல் பருமன் மற்றும் முடி நரைத்தல் ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கிறது.

|

குழந்தைகளில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்று மற்றும் தடுப்பூசி கிடைக்காதது அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை கூடுதலாக கவனித்துக்கொள்வது மிக முக்கியமானது. வலுவான நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகளில் தொற்றுநோயைக் குறைத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மிக அடிப்படையான வழிகளில் ஒன்று ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது.

Expert-approved tips to boost kids immunity amid COVID-19

குழந்தையின் உள் அமைப்பை வலுப்படுத்துவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. முன்கூட்டிய பருவமடைதல், உடல் பருமன் மற்றும் முடி நரைத்தல் ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில முக்கியமான உதவிக்குறிப்புகளை தெரிவித்துள்ளனர். இக்கட்டுரையில், உங்கள் குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகளை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாவல் பழம்

நாவல் பழம்

உங்கள் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு பருவகால அல்லது உள்ளூர் பழத்தைச் சேர்க்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் எல்லா பழத்தையும் சாப்பிட விரும்பவில்லை என்றால், நாவல் பழம் போன்ற உள்ளூர் பழங்களை அவர்களுக்குக் கொடுப்பது நல்ல குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

லட்டு அல்லது அல்வா

லட்டு அல்லது அல்வா

எல்லோரும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆரோக்கியமான மற்றும் சத்தான ஸ்நாக்ஸை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ரொட்டி, நெய் மற்றும் வெல்லம் ரோல் அல்லது சுஜி அல்வா அல்லது ராகி லட்டு போன்ற இனிமையான மற்றும் எளிமையான உணவைக் கொடுப்பது அவர்களுக்கு உற்சாகமாக இருக்க உதவும்.

அரிசி

அரிசி

ஜீரணிக்க எளிதான மற்றும் சுவையான அரிசி குழந்தையின் உணவில் சேர்க்க ஒரு முக்கியமான உணவு. அரிசி பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. ஆனால் எல்லாவற்றிலும் மிக முக்கியமானது, அதில் உள்ள ஒரு சிறப்பு வகையான அமினோ அமிலமாகும். பருப்பு, அரிசி மற்றும் நெய் ஆகியவை குழந்தைகளுக்கு சிறந்த இரவு விருப்பமாக அமைகின்றன.

ஊறுகாய் அல்லது சட்னி

ஊறுகாய் அல்லது சட்னி

குழந்தைகளுக்கு தினசரி சில வீட்டில் ஊறுகாய் அல்லது சட்னி அல்லது முராபா கொடுங்கள். இந்த பக்க உணவுகள் அவர்களின் குடல் பாக்டீரியாக்களை செழிக்க உதவும். அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் மகிழ்ச்சியாக இருக்க உதவும்.

முந்திரி

முந்திரி

உணவுக்கு இடையில் ஒரு சில முந்திரி அவர்களை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கவும் அவர்களுக்கு தேவையான நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது வலியைக் குறைக்க உதவும்.

பின்பற்ற வேண்டிய பிற உதவிக்குறிப்புகள்

பின்பற்ற வேண்டிய பிற உதவிக்குறிப்புகள்

ஆரோக்கியமாக சாப்பிடுவதைத் தவிர, நம் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் வேறு சில விஷயங்களும் உள்ளன. உணவு என்பது ஒரு காரணியாகும், இது உண்மையில் உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் வேறு சில அன்றாட நடவடிக்கைகள் நாம் உணர்வுபூர்வமாகவும் அறியாமலும் செய்கிறோம், அவை நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

தூக்கம்

தூக்கம்

மக்கள் பெரும்பாலும் தூக்க நேரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால் நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் பேணுவதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடல் பருமன் அபாயத்தை குறைக்கிறது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான ஏக்கத்தைத் தடுக்க உதவுகிறது.

குப்பை உணவுகளை தவிர்க்கவும்

குப்பை உணவுகளை தவிர்க்கவும்

அனைத்து வகையான பதப்படுத்தப்பட்ட அல்லது குப்பை உணவுகளை தவிர்க்கவும். இந்த உணவுகள் டிரான்ஸ் கொழுப்புடன் நிரம்பியுள்ளன மற்றும் குறைந்தபட்ச ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. அவை பெரும்பாலும் எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கின்றன. ஆரோக்கியமானவை என்று பெயரிடப்பட்ட தொகுக்கப்பட்ட உணவுகள் கூட ஆரோக்கியமானவை அல்ல.

உடல் செயல்பாடு

உடல் செயல்பாடு

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மற்றொரு முக்கியமான வாழ்க்கை முறை பழக்கமாகும். இது உங்களுக்கு ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்வது அல்லது மத்தியஸ்தம் செய்வது கூட வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நாட்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Expert-approved tips to boost kids immunity amid COVID-19

Here we are talking about the expert-approved tips to boost kids immunity amid COVID-19.
Story first published: Wednesday, June 2, 2021, 13:57 [IST]
Desktop Bottom Promotion