For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க குழந்தை உயரமாக வளர உதவும் பயிற்சிகள் என்னென்ன தெரியுமா?

நீச்சல் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள செல்களைத் தூண்டுகிறது. நீச்சல் ஒவ்வொரு தசையையும் தூண்ட உதவுகிறது. இது இயற்கையாக உயரத்தை அதிகரிக்க உதவுகிறது.

|

பொதுவாக நிறைய குழந்தைகளின் உயரம் தற்போது குறைவாகவே இருக்கிறது. இது குட்டை, நடுத்தர அல்லது உயரமாக இருப்பது முற்றிலும் நன்றாக இருந்தாலும், உங்கள் குழந்தைகள் நல்ல உயரத்துடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில், குழந்தைகள் அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப உயரம் அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், சில பல உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தலாம் அலல்து உருவாக்கலாம்.

Exercises to increase Height in children

ஒரு நபரின் உயரத்தை தீர்மானிப்பதில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், உயரத்தை பாதிக்கும் பல உடல் காரணிகள் உள்ளன என்பது உண்மை. உங்கள் குழந்தைகள் அதிகபட்ச உயரத்தை அடைய உதவும் சில மிகவும் பயனுள்ள பயிற்சிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீச்சல்

நீச்சல்

நீச்சல் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள செல்களைத் தூண்டுகிறது. நீச்சல் ஒவ்வொரு தசையையும் தூண்ட உதவுகிறது. இது இயற்கையாக உயரத்தை அதிகரிக்க உதவுகிறது.

MOST READ: சர்க்கரை நோயாளிகளே! உங்க குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த 'இந்த' ஒரு பொருள் போதுமாம்...!

தொங்கும் பயிற்சிகள்

தொங்கும் பயிற்சிகள்

தொங்குவது உயரத்தை அதிகரிக்க சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். இது உங்கள் கைகளின் சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உங்கள் மேல் தசைகளைத் தூண்டுகிறது. இது உடலை டோனிங் செய்யவும் மற்றும் வடிவமைக்கவும் உதவுகிறது. உடலின் டோனிங் மற்றும் ஷேப்பிங் உயரத்தை அதிகரிக்க உதவும்.

கால் தொடுதல்

கால் தொடுதல்

கால் தொடுதல் என்பது உங்கள் முதுகு மற்றும் கால்களின் தசைகளைத் தூண்டும் மற்றும் உங்கள் தொடையின் தசைகளுக்கு நல்ல மசாஜ் கொடுக்கும் எளிதான உடற்பயிற்சியாகும். உங்கள் கால்விரல்களைத் தொட முயற்சி செய்யுங்கள் ஆனால் உங்கள் வரம்புகளுக்கு அப்பால் உங்களைத் தள்ளாதீர்கள். உங்கள் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி செய்யச் செய்யலாம்.

MOST READ: டெய்லி 'இந்த' ஆறு உணவை நீங்க சாப்பிட்டீங்கனா? உங்க உடல் எடை ரொம்ப வேகமா குறையுமாம்...!

கோப்ரா போஸ்

கோப்ரா போஸ்

கோப்ரா போஸ் செய்ய, உங்கள் வயிற்றில் படுத்து மெதுவாக உங்கள் மேல் உடலை உயர்த்தவும். உங்கள் உடல் உயிரணுக்களின் வளர்ந்து வரும் திறன்களை அதிகரிக்க உங்கள் உடல் அனுமதிக்கும் அளவுக்கு வளைக்கவும். இது உயரத்தை அதிகரிக்க உதவும்.

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங் செய்வது ஒரு வேடிக்கையான செயலாகும். இந்த செயல்பாடு உயரத்தை அதிகரிக்க உதவுகிறது. குதிப்பது உங்கள் உடலின் செல்களை தலை முதல் கால் வரை தூண்டுகிறது மற்றும் உயிரணுவை சுறுசுறுப்பாக்குகிறது. இந்த வகை தசை வேலை நமது உடலின் சீரான வளர்ச்சி மற்றும் உயரத்தை அதிகரிக்க சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Exercises to increase Height in children

Here are the list of easy exercises to increase your child's height.
Story first published: Thursday, September 16, 2021, 13:12 [IST]
Desktop Bottom Promotion