For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளிடம் இந்த ஆரம்பகால கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே சோதனை செய்யுங்க... இல்லனா ஆபத்தாகிரும்!

|

கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொது மக்களால் கவனிக்கப்பட்டது. இவ்வளவு வேகமாக பரவும் வைரஸை உலகம் இதுவரை கண்டதில்லை. இந்த வைரஸ் காரணமாக எண்ணற்ற மக்கள் இறந்தனர், பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து விலகி இருப்பது, தனிமைப்படுத்தல் செய்வது மற்றும் அரசாங்க சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதைத் தவிர வேறு என்ன செய்வது என்று யாருக்கும் தெரியாது. இப்போதுதான் தடுப்பூசிகள் நம்மை ஓரளவு காப்பாற்றும் கேடயமாக மாறியுள்ளது.

COVID-19 தொற்றுநோயின் முதல் அலையின் போது, நிறைய வயதுவந்தோர் மற்றும் முதியவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டனர், மேலும் சிறு குழந்தைகள் அல்லது குழந்தைகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல வழக்குகள் அவ்வளவாக இல்லை. இருப்பினும், முதல் அலைக்குப் பிறகு, சிறு குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளான சம்பவங்கள் அதிகரித்தன, மேலும் பெற்றோரிடமிருந்து குழந்தைகள் தொற்றை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் வைரஸ் பிறழ்வுற்றது. தற்போது வரவிருக்கும் மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகளுக்கான ஆபத்து

குழந்தைகளுக்கான ஆபத்து

தடுப்பூசி உருவாக்கப்பட்டவுடன், அது முதலில் வயதானவர்களுக்கும் படிப்படியாக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்டது. சாதாரண தடுப்பூசி கூட பெறாத குழந்தைகள் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை கொண்டிருப்பார்கள், குறிப்பாக ஆறு மாதத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கு எந் தடுப்பூசியும் போடப்படுவதில்லை. இந்த சூழலில் அவர்கள் கொரோனவால் பாதிக்கப்படும்போது விளைவுகள் கடினமானதாக இருக்கும். குழந்தைகளுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். குழந்தைகளிடம் தோன்றும் எந்த அறிகுறிகளையும் அலட்சியமாக கருதக்கூடாது. குழந்தைகளிடம் காணப்படும் ஆரம்பகால அறிகுறிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

தடிப்புகள் மற்றும் கண் வீக்கம்

தடிப்புகள் மற்றும் கண் வீக்கம்

எந்தவொரு புதிய தடிப்புகள், வீக்கமடைந்த கண்கள் அல்லது வீக்கமடைந்த உதடுகள், கண்கள் அல்லது உதடுகளில் சிவத்தல், ஏதேனும் அசாதாரண வீக்கம், லேசான தலை, வேகமான இதயத் துடிப்பு, 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் காய்ச்சல், வயிற்றில் வலி, வாந்தி தளர்வான மலம் போன்றவை ஆபத்திற்கான அறிகுறிகள். இவை MIS-C இன் அடையாளமாக இருக்கலாம். MIS-C என்பது மல்டி-இன்ஃப்ளமேட்டரி சிஸ்டம் என்ற நிலையைக் குறிக்கிறது. இந்த அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் விரைவில் தங்கள் குழந்தை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்.

MOST READ: இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வராமல் இருக்க இதனை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் போதுமாம்...!

கொமொர்பிடிட்டிகள்

கொமொர்பிடிட்டிகள்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஏதேனும் கொமொர்பிடிட்டிகள் இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொமொர்பிடிட்டிகள் இருந்தால் அவர்களை வைரஸ் தாக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். கொமொர்பிடிட்டிகளை லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது, ஏனெனில் கொமொர்பிடிட்டிகளும் கோவிட்டும் ஒன்றாக இரு மடங்கு அல்லது மூன்று மடங்கு ஆபத்தானவை. இந்த சூழ்நிலையில் அவர்கள் நேராக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். எல்லா கொமொர்பிடிட்டிகளும் ஆபத்தானவையும் அல்ல என்றாலும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பல வழிகளில் பாதிக்கிறது.

சுவாச சிக்கல்கள்

சுவாச சிக்கல்கள்

இந்த பதட்டமான காலங்களில் ஒவ்வொரு குடும்பமும் வேகமாக சுவாசிக்கும் அறிகுறிகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. வழக்கமான செயல்பாட்டைச் செய்வதில் சிரமம், விரைவான மார்பு அசைவுகள், படுத்திருக்கும் போது இருமல், தூக்கத்தின் தரம் குறைவு, உணவை விழுங்குவதில் சிரமம் ஆகியவை சுவாசக் சிக்கல்களின் அறிகுறிகளாகும். உங்கள் குழந்தைக்கு இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், தயவுசெய்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்று மருத்துவர் உதவியுடன் ஆக்ஸிஜன் செறிவூட்டலைக் கண்காணிக்கவும்.

சரும மாற்றம்

சரும மாற்றம்

உங்கள் குழந்தையை எப்போது மருத்துவரிடம் அழைத்துச் செல்வது என்பதை அறிந்து கொள்வதற்கான ஒரு வழி என்னவென்றால், தோல் வெளிர் அல்லது நீல நிறமாக மாறுவதைக் கண்டால், கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்று வலி அல்லது வாந்தி மற்றும் எரிச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும். குழந்தைகளின் உடல் வெப்பநிலையைக் கண்காணித்து, என்ன மருந்துகள் வழங்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.]

MOST READ: முதல் டோஸ் தடுப்பூசி போட்டாச்சா?இரண்டாவது டோஸால் என்னென்ன கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

வயிற்றுப்போக்கு மற்றும் இருமல்

வயிற்றுப்போக்கு மற்றும் இருமல்

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, இருமல், மிக அதிக காய்ச்சல், பலவீனம், சுவை இழப்பு அல்லது வாசனை இழப்பு, வியர்வை போன்ற தீவிரமான பிரச்சினை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மேலும் குழந்தைக்கு 2 நாட்களுக்கும் மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து கொரோனா சோதனை எடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Early COVID Signs to Watch Out in Your Kids

Check out the early COVID signs to watch out for in your kids that need paediatric intervention.