For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளைத் தாக்கும் கொரோனா நோய்த்தொற்று குறித்து மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்கள்!

தற்போது பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவதைப் பற்றி அதிகம் கவலைக் கொள்கிறார்கள். அதோடு அதைப் பற்றி பல கேள்விகளும் பெற்றோர்களின் மனதில் எழுந்துள்ளது.

|

குழந்தைகள் எப்போதும் கோவிட் கேரியர்களாக கருதப்படுகின்றனர். ஆனால் கோவிட்-19 இன் முதல் அலையின் போது பல குழந்தைகளிடம் எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால் இரண்டாம் அலையில் கோவிட் நோய்த்தொற்று பல குழந்தைகளை பாதித்துள்ளதோடு, அவர்களிடம் அறிகுறிகளும் தென்படுகின்றன. எனவே தற்போது பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவதைப் பற்றி அதிகம் கவலைக் கொள்கிறார்கள். அதோடு அதைப் பற்றி பல கேள்விகளும் பெற்றோர்களின் மனதில் எழுந்துள்ளது. கீழே குழந்தைகளில் கொரோனா நோய்த்தொற்று குறித்த பொதுவான கேள்விகளுக்கான நிபுணர்கள் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

COVID-19 In Kids: Some Frequently Asked Questions And Answers In Tamil

கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் அறிகுறியற்றவர்கள் அல்லது மிகவும் லேசான நோய்த்தொற்றைக் கொண்டுள்ளனர். ஆனால் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய குழந்தைகளோ மிகக்குறைவு.

MOST READ: கொரோனா இரண்டாம் அலையின் முக்கியமான ஆரம்ப அறிகுறி இதுதாங்க... ஜாக்கிரதையா இருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனா இரண்டாவது அலையின் போது அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்களா?

கொரோனா இரண்டாவது அலையின் போது அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்களா?

ஆம். இதற்கு கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு காரணமாக இருக்கலாம். மேலும் தற்போது குழந்தைகளுக்கான கொரோனா சோதனையும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக அதிகமான வழக்குகள் கண்டறியப்படுகின்றன.

இரண்டாம் அலையில் அறிகுறிகள் வேறுபட்டுள்ளதா?

இரண்டாம் அலையில் அறிகுறிகள் வேறுபட்டுள்ளதா?

முதல் அலையில் இருந்தது போன்றே தான் இரண்டாம் அலையிலும் அறிகுறிகள் உள்ளன. ஆனால் இரண்டாம் அலையில் அவை நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் சற்று கடுமையாக இருக்கும். அதோடு இரண்டாம் அலையில் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற இரைப்பை குடல் அறிகுறிகள் பொதுவாக காணப்படுகின்றன.

குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்?

குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்?

பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் பிற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமே பாதிக்கப்படுவார்கள். அதில் பெரும்பாலும் நேரடி மற்றும் வான்வழி மூலம் குழந்தைகள் கொரோனாவைப் பெறுவார்கள்.

குடும்பத்தில் யாருக்காவது பாசிட்டிவ் என்றால், அறிகுறியற்ற குழந்தைகள் உட்பட அனைவருமே சோதனை மேற்கொள்ள வேண்டுமா?

குடும்பத்தில் யாருக்காவது பாசிட்டிவ் என்றால், அறிகுறியற்ற குழந்தைகள் உட்பட அனைவருமே சோதனை மேற்கொள்ள வேண்டுமா?

ஆம், குழந்தைகளுக்கும் சோதனை மேற்கொள்ள வேண்டும். 0.1 சதவீதத்திற்கும் குறைவான மக்களே கடுமையான நோயை உருவாக்குவார்கள் மற்றும் அறிகுறி ஏதுமின்றி சோதனையில் பாசிட்டிவ் பெறும் குழந்தைகளும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது முக்கியம்.

ஒரு குழந்தைக்கு கோவிட் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் என்ன சோதனைகள் செய்யப்படுகின்றன?

ஒரு குழந்தைக்கு கோவிட் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் என்ன சோதனைகள் செய்யப்படுகின்றன?

ஒரு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை (RT-PCR Test) வெறுமனே செய்யப்படுகிறது. ஆர்டி-பி.சி.ஆர் அறிக்கைகள் மிகவும் தாமதமாக இருப்பதால் ஒருவர் விரைவான ஆன்டிஜென் (Rapid Antigen Test) பரிசோதனையையும் செய்யலாம். ஆனால் குழந்தைக்கு அறிகுறி இருந்தால் மற்றும் சோதனையில் நெகட்டிவ் வந்தால், அதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டும்.

கோவிட் பாசிட்டிவ் குழந்தையை எவ்வாறு நிர்வகிப்பது?

கோவிட் பாசிட்டிவ் குழந்தையை எவ்வாறு நிர்வகிப்பது?

குழந்தைக்கு காய்ச்சல் 100F க்கு மேல் இருந்தால் வீட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் காய்ச்சலுக்கு பாராசிட்டமால் எடுக்க வேண்டும். அதுவே அறகுறிகள் லேசானதாக இருந்தால், நல்ல நீரேற்றம் மற்றும் சாதாரண உணவை கொடுக்க வேண்டும். ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், குழந்தையை உடனே மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

பெற்றோர்களுக்கு பாசிட்டிவ் இருந்தால், குழந்தையை எவ்வாறு கவனித்துக் கொள்வது?

பெற்றோர்களுக்கு பாசிட்டிவ் இருந்தால், குழந்தையை எவ்வாறு கவனித்துக் கொள்வது?

குழந்தைகளை குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்துவது என்பது கடினம். சிறு கைக்குழந்தைகள் தாயுடன் இருக்க வேண்டும். மேலும் பெற்றோர்கள் எல்லா நேரங்களிலும் முகமூடியை அணிந்திருக்க வேண்டும். ஒருவேளை குழந்தைகள் அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும், அவர்களை தாத்தா பாட்டியிடம் அனுப்புவது ஆபத்தானது. வேண்டுமானால் அவர்களிடம் அனுப்புவதற்கு முன்பு குழந்தையை பரிசோதிக்கலாம்.

தாய்க்கு கொரோனா பாசிட்டிவ் என்றால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?

தாய்க்கு கொரோனா பாசிட்டிவ் என்றால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு இருக்கும் ஆபத்தின் அளவைக் குறைக்கும். கொரோனா உள்ள தாய்மார்கள் குழந்தையை கையாளுவதற்கு முன்னும், பின்னும் முகமூடி அணிவது மற்றும் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்வது போன்ற போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

COVID-19 In Kids: Some Frequently Asked Questions And Answers In Tamil

Parents are worried about their kids getting infected and have various questions about it. Here are some of the most common questions answered by experts about coronavirus infection in kids.
Desktop Bottom Promotion