For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தால் என்ன செய்றது-ன்னு தெரியாம தவிக்கிறீங்களா? இத படிங்க...

பெற்றோர்களுக்கு கொரோனா பாதித்த குழந்தையை கவனித்துக் கொள்வதும், தங்கள் சொந்த ஆரோக்கியத்தைக் கவனிப்பதும் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும். அதோடு அவர்களைத் தனிமைப்படுத்துவது மிகவும் கடினம்.

|

கோவிட்-19 இன் முதல் அலையுடன் ஒப்பிடும் போது, கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு அதிகமான குழந்தைகளை பாதிக்கிறது. அதுவும் கொரோனாவின் இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 1-8 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு ஏராளமான கோவிட்-19 பாசிட்டிவ் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் பெரும்பாலான குழந்தைகளிடம் லேசான அறிகுறிகள் இருந்தாலோ அல்லது அறிகுறியற்றவர்களாக இருந்தாலோ, அவை எளிதில் கடுமையான நோய்க்கு வழிவகுக்கும்.

Coronavirus: What To Do If Your Child Tests Positive For COVID-19

பெற்றோர்களுக்கு கொரோனா பாதித்த குழந்தையை கவனித்துக் கொள்வதும், தங்கள் சொந்த ஆரோக்கியத்தைக் கவனிப்பதும் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும். அதோடு அவர்களைத் தனிமைப்படுத்துவது மிகவும் கடினம். குறிப்பாக பத்து வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளை மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்ற வைப்பது கடினமான ஒன்று. நீங்கள் இப்படியொரு சூழ்நிலையுடன் போராடுகிறீர்கள் என்றால், உங்கள் குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் வந்திருந்தால், அவரை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பது குறித்த சில எளிய கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சித்துள்ளோம்.

MOST READ - கொரோனா இரண்டாம் அலையின் முக்கியமான ஆரம்ப அறிகுறி இதுதாங்க... ஜாக்கிரதையா இருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு ஏன் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது?

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு ஏன் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது?

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு ஆரம்ப கால வைரஸுடன் ஒப்பிடும் போது, குழந்தைகளை அதிகம் பாதிக்கும் திறனைக் கொண்டுள்ளது. குழந்தைகள் பெரும்பாலும் வெளியே சென்று வரும் பெரியவர்களிடம் இருந்து வைரஸுடன் தொடர்பு கொள்கிறார்கள். மேலும் புதிய மாறுபாடானது நோயெதிர்ப்பு மண்டலத்தில் இருந்து தப்பித்து சுவாசக் குழாயில் தொற்றை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸின் முதல் அலைகளில் கூட குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். ஆனால் பெரும்பாலும் அறிகுறியற்றவர்களாக இருந்தனர். ஆனால் இந்த நேரத்தில் குழந்தைகளில் மல்டிசிஸ்டம் அழற்சி நோய்க்குறி (Multisystem Inflammatory Syndrome in Children) கொண்ட பெரும்பாலான குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதோடு, லேசான அறிகுறிகளையும் காட்டுகிறார்கள்.

குழந்தைகளில் பொதுவான கோவிட்-19 அறிகுறிகள்

குழந்தைகளில் பொதுவான கோவிட்-19 அறிகுறிகள்

பெரியவர்களைப் போலவே, குழந்தைகளும் கொரோனா வைரஸின் பெரும்பாலான அறிகுறிகளை சந்திக்கிறார்கள். அதில் அதிக காய்ச்சல், குளிர், மூச்சுத்திணறல், இருமல், வாசனை இழப்பு, தொண்டை புண், சோர்பு, தசை வலி மற்றும் இரைப்பைக் குடல் அறிகுறிகளான வாந்தி, பசியின்மை மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தால் என்ன முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும்?

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தால் என்ன முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும்?

குழந்தையிடம் கோவிட்-19 இன் அறிகுறிகள் தோன்றியவுடன், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டியது அவசியம். அவர்களது உடலில் வைரஸ்கள் இருப்பதை சோதிக்கவும் மற்றும் அவர்களின் ஆக்சிஜன் செறிவு அளவைக் கண்காணிக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு 94 சதவீதமாக இருந்தால், அவர்களுக்கு ஆதரவான பராமரிப்பு, போதுமான நீரேற்றம், சரியான ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் பாராசிட்டமால் மாத்திரை ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக மருத்துவர்களை அணுகி அவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள். நிலைமை மோசமாக இருந்தால், உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

குழந்தைகளை எவ்வளவு காலம் தனிமைப்படுத்த வேண்டும்?

குழந்தைகளை எவ்வளவு காலம் தனிமைப்படுத்த வேண்டும்?

பெரும்பாலான வழக்குகளில், குழந்தைகள் கோவிட்-இன் முதல் அறிகுறிகள் தோன்றிய 3 முதல் 5 நாட்களில் குழந்தைகள் நன்றாகி விடுவார்கள். அரிதான சந்தர்ப்பங்களில், ஏற்கனவே ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால், குணமாவதற்கு சற்று அதிக காலம் எடுக்கலாம். குழந்தைக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் வந்தால், பின்வரும் மூன்று நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் நீங்கள் வீட்டைத் தனிமைப்படுத்துவதை நிறுத்தலாம்.

* அறிகுறிகள் முதலில் தோன்றி 10 நாட்களுக்கு பின் நிறுத்தலாம்.

* 24 மணி நேரம் காய்ச்சல் இல்லாமல் மற்றும் காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகள் இல்லாமல் இருந்தால் நிறுத்திக் கொள்ளலாம்.

* கோவிட்-19 இன் பிற அறிகுறிகள் மேம்படும் போது நிறுத்தலாம்.

குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி எப்போது கிடைக்கும்?

தற்போது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி இல்லை. இருப்பினும், இருப்பினும், உலகெங்கிலும் உள்ள மருந்து உற்பத்தியாளர்கள் குழந்தைகளிடையே தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை ஆய்வு செய்வதற்கான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கோவாக்சின் 3 ஆம் கட்ட மருத்துவ சோதனைக்கு இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் ஒப்புதல் கோரியது.

ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை பரிசோதனை செய்து அதன் செயல்திறன் மற்றும் பக்க விளைவுகளை ஆராய்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus: What To Do If Your Child Tests Positive For COVID-19

What to do if your child tests positive for COVID-19? Here is what you need to do when your kids test positive
Desktop Bottom Promotion