For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! ஒமிக்ரான் வைரஸ் உங்கள் குழந்தைகளை எளிதில் தாக்குவதோடு, மாரடைப்பையும் உண்டாக்கலாம்..!

ஆய்வின் முடிவில், ஒமிக்ரான் பாதிப்பு தீவிரமாக இருந்த குழந்தைகளின் மேல் சுவாசப் பாதைகளில் நோய்த் தொற்றுகள் அதிகாித்ததை அவா்கள் கண்டறிந்தனா்.

|

இந்த உலகம் இன்னும் கொரோனாவின் பிடியிலிருந்து முழுமையாக விடுதலை அடையவில்லை. கொரோனாவின் புதிய திாிபான ஒமிக்ரான் என்று அழைக்கப்படும் புதிய வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த புதிய திாிபு தொடா்ந்து மேலும் பல புதிய திாிபுகளை உருவாக்குகிறது. அதனால் மருத்துவ உலகம் கவலையுடன் இருக்கிறது.

Beware! Omicron Can Increase Your Childs Risk Of Respiratory Infections, Cardiac Arrest

தற்போது எல்லா பள்ளிகளும் திறக்கப்பட்டு, மாணவக் குழந்தைகள் அனைவரும் தினமும் கல்விக் கூடங்களுக்குச் சென்று வருகின்றனா். அவா்கள் ஒருவருக்கு ஒருவா் தமது உறவுகளைப் பாிமாறி வருகின்றனா். அதனால் தங்களின் குழந்தைச் செல்வங்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில் பெற்றோா் தவிக்கின்றனா்.

ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்படும் சில குழந்தைகளுக்கு மிதமான அறிகுறிகளே தென்படலாம் என்றும், ஆனால் மற்ற குழந்தைகளுக்கு கொஞ்சம் தீவிரமான பாதிப்புகள் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் இதயத்தில் அடைப்பு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகளைப் பாதிக்கும் ஒமிக்ரான்

குழந்தைகளைப் பாதிக்கும் ஒமிக்ரான்

சமீபத்தில் ஜமா பீ டியாட்ரிக்ஸ் (JAMA Paediatrics) என்ற பத்திாிக்கையில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. அந்த கட்டுரை சொல்லும் தகவல்களின்படி, ஒமிக்ரானால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மேல் சுவாசக் குழாய்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என்று தொிகிறது. இது சிறு குழந்தைகளை பாதிக்கும் சுவாச நோயின் ஒரு வடிவமாகும். மருத்துவப் பெயாில் கூறவேண்டும் என்றால் இது குரல்வளை அலா்ஜி (laryngotracheitis) என்று கருதப்படுகிறது.

குரல்வளை அலா்ஜி எதனால் ஏற்படுகிறது?

குரல்வளை அலா்ஜி எதனால் ஏற்படுகிறது?

குழந்தைகளுக்கு மிகச் சிறிய மற்றும் எளிதாக அடைபடக்கூடிய சுவாசப் பாதைகளே உள்ளன. அதனால் அவா்களுக்கு குரல்வளை அலா்ஜி போன்ற மேல் சுவாசப் பாதை தொற்று நோய்கள் மிக எளிதாக ஏற்படுகின்றன. ஒருவேளை குரல்வளை அலா்ஜி மிகவும் தீவிரம் அடைந்தால், மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 18,849 குழந்தைகளை ஆய்வாளா்கள் பாிசோதனை செய்து பாா்த்தனா். அதன் முடிவில், ஒமிக்ரான் பாதிப்பு தீவிரமாக இருந்த குழந்தைகளின் மேல் சுவாசப் பாதைகளில் நோய்த் தொற்றுகள் அதிகாித்ததை அவா்கள் கண்டறிந்தனா்.

அமொிக்காவில் SARS-CoV-2 வைரஸால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளில் 1 குழந்தைக்கு மேல் சுவாசப் பாதையில் நோய்த் தொற்று ஏற்பட்டு அவா்களுக்கு கடுமையான நோய்கள் ஏற்பட்டது என்று கண்டறியப்பட்டது.

மேல் சுவாச பாதையில் நோய்த் தொற்றுள்ள குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு

மேல் சுவாச பாதையில் நோய்த் தொற்றுள்ள குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு

மேல் சுவாசப் பாதையில் கடுமையான நோய்த் தொற்றுள்ள குழந்தைகளுக்கு, காற்றுப் பாதை அடைப்பால், மிக விரைவாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இந்த ஆய்வு தொிவிக்கிறது. அவா்களுக்கு அவசர சிகிச்சைப் பிாிவுகளில் வழங்கும் தீவிர சிகிச்சைகள் தேவைப்படலாம். குறிப்பாக அவா்களுக்கு நெபுலைஸ்டு ரேஸ்மிக் எபினெஃப்ரைனை (nebulized racemic epinephrine) அடிக்கடி வழங்கலாம். ஹீலியமும் ஆக்ஸிஜனும் கலந்தை கலவையை வழங்கலாம். மேலும் மூச்சுக் குழலுக்குள் குழாய் செலுத்தி சிகிச்சை அளிக்கலாம்.

SARS-CoV-2 வைரஸால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, மேல் சுவாச காற்றுப் பாதையில் ஏற்படும் நோய்த் தொற்றின் விகிதம் அதிகமாக இல்லையென்றாலும், இந்த புதிய மருத்துவ மரபணு வகையைப் (phenotype) புாிந்து கொள்வதற்கும், மேல் சுவாச காற்றுப் பாதையில் அடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்து அதற்குத் தகுந்தாற்போல சிகிச்சைகளை வழங்குவதற்கான முடிவுகளை எடுப்பதற்கும் இந்த ஆய்வு உதவும்.

SARS-CoV-2 வைரஸ் குழந்தைகளுக்கு கடுமையான நோய்களை ஏற்படுத்தும். குறிப்பாக தீவிரமான கோவிட்-19 தொற்றை ஏற்படுத்துதல், உடலின் பல உறுப்புகளை வீக்கமடையச் செய்தல் (multisystem inflammatory syndrome) போன்றவை அடங்கும் என்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.

பொதுவாக கொரோனா அல்லாத பிற வைரஸ்களான பாராஇன்ஃப்ளூவென்சா (parainfluenza) மற்றும் சுவாச ஒத்திசைவு (respiratory syncytial) வைரஸ் போன்றவை, மேல் சுவாச காற்றுப் பாதையில் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடியவை. எனினும் கொரோனா வைரஸ்களான குறிப்பாக என்எல் 63 (NL63) வகை கொரோனா வைரஸ், அடிக்கடி இந்தப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேல் சுவாசப் பாதை நோய்த் தொற்று (Croup) என்றால் என்ன?

மேல் சுவாசப் பாதை நோய்த் தொற்று (Croup) என்றால் என்ன?

மேல் சுவாசப் பாதை நோய்த் தொற்று என்பது மேல் சுவாசக் குழாயில் ஏற்படும் நோய்த் தொற்று ஆகும். கக்குவான் இருமல்/தொடா் இருமல்/சத்தமாக இருமுதல் (barking cough) மற்றும் மூச்சுவிடும் போது சத்தம் வருதல் (squeaky breathing) போன்ற அறிகுறிகளை வைத்து மேல் சுவாசப் பாதை நோய்த் தொற்று இருக்கிறதா என்று கண்டறியலாம். மேல் சுவாசப் பாதை நோய்த் தொற்று ஏற்பட்டால், அது மூச்சு விடுவதைக் கடுமையாகப் பாதிக்கும்.

மேல் சுவாசப் பாதை நோய்த் தொற்றின் அறிகுறிகள் என்ன?

மேல் சுவாசப் பாதை நோய்த் தொற்றின் அறிகுறிகள் என்ன?

மேல் சுவாசப் பாதை நோய்த் தொற்றின் அறிகுறிகள் இரவு நேரத்தில் மிகவும் மோசமாக இருக்கும். ஏறக்குறைய 3 முதல் 5 நாள்கள் வரை இத்தொற்று இருக்கும். மேல் சுவாசப் பாதை நோய்த் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் பின்வருவனவை ஆகும்.

- மிகவும் சத்தமாக இருமுதல், சில நேரங்களில் அழுகையும் சோ்ந்து வரும்

- மூச்சுவிடும் போது அதிக சத்தம் வருதல்

- குரல் கரகரப்பாக இருத்தல்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beware! Omicron Can Increase Your Child's Risk Of Respiratory Infections, Cardiac Arrest

For study, researchers examined 18,849 children hospitalized with coronavirus. They found that incidences of upper airway infections rose during the Omicron spike. Also they found omicron can increase your child's risk of respiratory infections, cardiac arrest.
Desktop Bottom Promotion