For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள்கிட்ட இந்த அறிகுறிகள் இருந்தால் லேசுல விட்றாதீங்க...

எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு நேரத்தில் உடல் நல குறைவை சந்தித்து தான் ஆக வேண்டியுள்ளது. பெரும்பாலான நேரங்களில் குழந்தைகளுக்கு வரும் பிரச்சினைகள் மருத்துவரிடம் செல்லாமலே சரியாக கூடியது.

|

எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு நேரத்தில் உடல் நல குறைவை சந்தித்து தான் ஆக வேண்டியுள்ளது. பெரும்பாலான நேரங்களில் குழந்தைகளுக்கு வரும் பிரச்சினைகள் மருத்துவரிடம் செல்லாமலே சரியாக கூடியது.

parenting

ஆனால் சில நேரங்களில் நமது குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நல குறைவை மருத்துவரிடம கொண்டு செல்லாமல் சரியாக்குவது கடினம். குழந்தைகள் அழுகையின் மூலமே நம்மிடம் பேசுவதால் அது பசியில் அழுகிறதா? அல்லது உடல் நல குறைவால் அழுகிறதா? என்பதை கண்டுபிடிப்பது கடினம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தையின் அழுகை

குழந்தையின் அழுகை

குழந்தை ஏன் அழுகிறது? எது அதனை கஷ்டப்படுத்துகிறது என்பதை பெற்றோர்கள் தான் கண்டறிய வேண்டும். 8 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் இது இன்னும் கடினமானது. அந்த குழந்தைகள் தனக்கு நடக்கும் விஷயத்தை சில சமயம் மிகைப்படுத்தி காட்டும் சில நேரங்களில் ஒன்றுமே செய்யாமல் இருந்து விடும்.

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு

தலையில் சிறியதாக ஏதாவது இடித்து விட்டால் தொண்டை தண்ணீர் வற்ற கத்தும் இதே குழந்தைகள் உடலில் உள்ள வலி அல்லது திடீரென உடல் எடை குறைவது போன்றவற்றை விளையாட்டு கவனத்தில் நம்மை கண்டு கொள்ளாமல் விடாமல் செய்து கஷ்டப்படுத்தும். குழந்தைகளுக்கு எந்த வயதாக இருந்தாலும் சரி அதை பாதுகாக்க வேண்டியது தாய் தந்தையரின் கடமையாகும். இப்போது குழந்தைகளிடம் இருக்கும் எந்த எந்த அறிகுறிகளை உதாசீனப்படுத்த கூடாது என பார்ப்போம். கீழ்காணும் அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்லவும்.

காய்ச்சல்

காய்ச்சல்

பெரிய குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும் போது நாம் மிகவும் கவலைப்பட தேவையில்லை. அது இயல்பானது. ஆனால் பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலை நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விட கூடாது. 4 மாதம் அல்லது அதை விட சிறிய குழந்தைகளின் உடல் வெப்பம் 38 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தால் அது மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. 4 மாத வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் வெப்பம் கூடும் போது, அந்த காய்ச்சலில் குழந்தை எவ்வாறு இருக்கிறது என கவனிக்க வேண்டும். குழந்தையின் நடவடிக்கைகள் இயல்பாக இருந்தால் கவலைப்பட வேண்டாம்.

மூச்சு விடுவதில் பிரச்சினை

மூச்சு விடுவதில் பிரச்சினை

குழந்தை எவ்வாறு மூச்சு விடுகிறது என நாம் கவனித்து கொண்டே இருக்க வேண்டும். குழந்தைகள் இயல்புக்கு மாறாக வேகமாக மூச்சு விட்டால் அல்லது மூச்சு விட கஷ்டப்பட்டால் உடனே கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். குழந்தை மூச்சு விடும் போது அதன் மூக்கு துளைகளை நன்கு கவனிக்க வேண்டும். அதை சுற்றியுள்ள இடங்களில் ஏதேனும் அடைப்பு மாதிரி தெரிகிறதா என பார்க்க வேண்டும். மேலும் மூச்சு விடும் போது குழந்தைகள் தோல் வெளிறி போனாலோ அல்லது சாம்பல் நிறம் போல் மாறினாலோ அல்லது மூச்சு விடும் போது விசில் சத்தம் போல் கேட்டாலோ ரொம்ப உஷாராகிட வேண்டும். ஏனெனில் இதெல்லாம் ஆஸ்துமா, நிமோனியா, மூச்சு குழல் அழற்சி மற்றும் தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளின் அறிகுறிகள் ஆகும். தாமதிக்காமல் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் வாமிட்

பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் வாமிட்

எல்லா குழந்தைகளுமே பொதுவாக ஆரம்ப சில வருடங்களுக்கு வாந்தி எடுக்கும். இது இயல்பானது தான். ஆனால் இதன் நிறம் பச்சை அல்லது மஞ்சள் நிறமாக இருந்தால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் இது குடல் அடைப்பின் அறிகுறிகள் ஆகும். மேலும் பிறவி கோளாறுகள்,குடல் கொடி பாதிப்புகள் அல்லது மெக்கோனியத்தில் உள்ள அடைப்புகள் போன்ற நோய்களின் அறிகுறிகளும் இதே போன்ற நிறம் மாறிய வாந்தி தான். காரணம் எதுவாக இருந்தாலும் சரி, மருத்துவரிடம் உடனே குழந்தையை காண்பித்து ஆலோசனை பெற வேண்டும்.

நீல நிற உதடுகள்

நீல நிற உதடுகள்

உங்கள் குழந்தைகளுக்கு நீல நிறத்தில் உதடுகள் இருந்தால் உஷாராக இருங்கள். ஏனென்றால் இது குழந்தையின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவதாலோ அல்லது குழந்தையின் இரத்த ஓட்டத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் ஏற்பட கூடியது. குழந்தையின் தோல் நீல நிறத்தில் மாறுவது இதயப் பாதிப்புகள், நிமோனியா அல்லது ஆஸ்துமா நோய்களின் அறிகுறிகள் ஆகும். அதீத சோர்வு அல்லது நியுரோலாஜிக்கல் பிரச்சினையின் வெளிப்பாடாகவும் இந்த நீல நிறமேறுதல் ஏற்படும். இதில் எதுவானாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

அதீத தாகம்

அதீத தாகம்

6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் தண்ணீர் குடிக்க விரும்புவது உண்மையில் சிறந்த விஷயமாகும். ஆனால் இந்த தாகம் திடீரென அவர்களுக்கு ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள். ஒரு வேளை வெயில் காலத்தில் இதே போல ஏற்பட்டாலோ அல்லது குழந்தை அதிகமாக விளையாடும் போதோ இதே போல் தாகம் ஏற்பட்டால் கவலை வேண்டாம். ஆனால் இந்த மாதிரி சூழ்நிலைகள் இல்லாமல் குழந்தை அதிகமாக தண்ணீர் கேட்டால் எச்சரிக்கையாக இருங்கள் இது நீரிழிவு நோயின் அறிகுறிகள் ஆகும். அதிக பசி, சோர்வு, உடல் எடை குறைவு, அடிக்கடி சிறுநீர் போதல் மற்றும் அதிக அளவு போதல் போன்றவைகளும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் தான்.

இரத்த கசிவு

இரத்த கசிவு

குழந்தைகள் வளரும் போது அடி படுதல், காயங்கள் ஆகுதல் போன்றவைகள் மிக இயல்பானது. அவர்களுக்கு இதே போல அடிபடும் போது இரத்த கசிவு இருந்தால் அச்சம் கொள்ள அவசியம் இல்லை. ஆனால் இந்த இரத்தம் கசிவு நிற்காமல் இருந்து கொண்டே இருந்தால் மருத்துவரிடம் காண்பித்து கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரிடம செல்லும் முன் ஒரு சுத்தமான துணி கொண்டு காயத்தை துடைத்து மெல்லிய அழுத்தம் கொடுங்கள். இரத்த கசிவு நின்று விட்டால் காயத்தை மருத்துவர் வரும் வரை மூடியே வைக்க வேண்டும்.

சிறுநீர் கழிப்பு

சிறுநீர் கழிப்பு

உங்களுக்கு முடியுமானால் உங்கள் குழந்தை சிறுநீர் கழிக்கும் அளவு மற்றும் நேரத்தை கணக்கில் வைத்து கொள்ளுங்கள். வெயில் காலத்திலோ அல்லது குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லாத போது குழந்தையின் சிறுநீர் அளவு குறைவது இயல்பானது தான். ஆனால் மற்ற நேரங்களில் குறைய கூடாது. குழந்தைக்கு டயாப்பர் மாற்றும் போது அதில் இரத்தம் அல்லது வேறு ஏதும் சீழ் போல் உள்ளதா என கவனிக்க வேண்டும். குழந்தைக்கு டயாப்பர் அணிவிக்கும் போது அதன் உள்ளுறுப்பை அழுத்தாமல் போட்டு விட வேண்டும். டயாப்பர் அணியும் போது குழந்தையின் தோல் சுருங்கி இருந்தால் அது குழந்தைக்கு நீர் குறைப்பாட்டை வெளிப்படுத்தும். குழந்தையின் டயாப்பரில் இரத்தம் இருந்தால் சிறுநீரக பிரச்சினையின் வெளிப்பாடு. இதே போன்ற சூழ்நிலைகளில் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு குழந்தையை கூட்டி செல்ல வேண்டும்.

திடீரென உடல் எடை குறைவு

திடீரென உடல் எடை குறைவு

உங்கள் குழந்தை திடீரென அதன் எடையில் 7 சதவீதம் குறைந்தால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு பத்து நாள் பொறுத்திருந்து குழந்தை மறுபடியும் அதனுடைய இயல்பான எடைக்கு திரும்புகிறதா என்று பாருங்கள். அப்படி அதன் எடை இயல்பான நிலைக்கு மாறவில்லை என்றால் தாமதிக்காமல் அடுத்த நாளே டாக்டரிடம் கொண்டு செல்லுங்கள். இப்படி எடை குறைவது ஒரு நோய் இல்லை என்றாலும் இது பலவிதமான நோய்களின் அறிகுறியாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Symptoms That You Should Never Ignore In A Baby

The difficulty with a baby or a child's sickness is that it is hard to find out what is ailing him.
Story first published: Tuesday, May 29, 2018, 13:12 [IST]
Desktop Bottom Promotion