For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டாவது முறை கர்ப்பமடைந்தால் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

முதல் குழந்தை பிறந்த போது உங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இருந்திருக்காது , உங்கள் வாழ்க்கையில் ஓர் புதிய வரவு வந்த சமயத்தில் நீங்கள் எப்படியெல்லாம் உணர்ந்தீருப்பீர்கள்,

By Vijaya Kumar
|

நீங்கள் மறுபடியும் கர்பம் அடைந்து இருக்கிறீர்களா? வாழ்த்துக்கள். முதல் குழந்தை பிறந்த போது உங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இருந்திருக்காது , உங்கள் வாழ்க்கையில் ஓர் புதிய வரவு வந்த சமயத்தில் நீங்கள் எப்படியெல்லாம் உணர்ந்திருப்பீர்கள், ஆச்சரியம் , மற்றும் உங்கள் மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டோடியிருக்கும். அந்த குழந்தையின் மீது நீங்களும் உங்கள் சொந்தங்களும் அன்பு மழையைப் பொழிந்திருப்பீர்கள்,

parenting

தற்போது நீங்கள் இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளீர்கள், இப்போது தங்களுக்கு இரண்டாவதாகப் பிறக்கப்போகும் குழந்தையை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் பெற்றுக்கொள்ள எல்லா முன் ஏற்பாடுகளையும் செய்து இருப்பீர்கள். முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது நிலவிய அதே சூழல்தான் தற்போது இரண்டாவதாகப் பெற்றுக்கொள்ளும் போதும் இருக்கிறதா என்றால் ? இல்லை என்றே சொல்லவேண்டும். ஆம். இப்பொழுது உங்கள் மூத்த குழந்தை உங்களுடன் இருக்கிறது. குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுவரை அவர்களுக்கு முன்னுரிமை தேவைப்படும் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனிமை

தனிமை

உங்கள் வீட்டின் மூத்தவர் இளையவரிடம் கோபம், அல்லது வெறுப்பு கொள்ள நீங்கள் விரும்பமாடீர்கள். பொதுவாக முதல் பிறந்த குழந்தைகளுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் தான் ஏதோ தனிமையாக உணரும் , தன்னுடைய அன்பையும் பாசத்தையும் யாருடனும் பங்குகொள்ள விரும்பமாட்டார்கள். ஒரு சிறிய அண்ணா / அக்காவிற்கு அவரது சிறிய உடன்பிறப்பைக் கவனித்து காக்கும் பொறுப்பு உள்ளது. அனால் அனைத்து குழந்தைகளும் அப்படி நினைப்பதில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும்

மூத்த குழந்தையின் கோபத்தை அவர் உள்ளத்தில் இருந்து அகற்ற வேண்டும்

இந்த பொறுப்பை உங்க குழந்தைகள் மனதில் பதியவைக்க வேறு சில வழிகள் உள்ளன அவற்றை பார்ப்போம்

அன்பை உறுதிப்படுத்துங்கள்

அன்பை உறுதிப்படுத்துங்கள்

கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் பிஸியாகவும் ஓய்வாகவும் இருப்பீர்கள். இருந்த போதிலும், உங்கள் மூத்த குழந்தையின் மீது வழக்கத்தை விட அதிகம் கவனம் செலுத்துங்கள். அவர்களிடம் நிறைய உரையாடுங்கள். அவர்களிடம் வீட்டுக்கு வரப்போகும் புதிய உறவைப் பற்றி பேசுங்கள். வயிற்றில் வளரும் குழந்தைமீது இப்போதிருந்தே ஈர்ப்பு உண்டாகும்படி செய்யுங்கள். நீ ஒரு அண்ணனாக / அக்காவாக போகிறாய் என்பதை பற்றி விவரியுங்கள். வரப்போகும் அவர்களின் இளவலின் மீது அவர்களுக்கு அன்பும் பாசமும் ஏற்படும்படி செய்யுங்கள்

நேரத்தை செலவிடுங்கள்

நேரத்தை செலவிடுங்கள்

நீங்கள் இதற்கு முன் எப்போதும் எல்லா நேரத்தையும் உங்கள் மூத்த குழந்தையுடன் கழித்து இருப்பீர்கள். அனால் தற்போது இன்னொரு குழந்தை வயிற்றில் உள்ளது. நீங்கள் நேரமின்மையால் அவதிப்படுவீர்கள் என்றாலும் உங்கள் மூத்த குழந்தையிடம் தரமான நேரத்தை நீங்கள் செலவிட்டுத்தான் ஆகவேண்டும். அவர்களிடம் அவர்களின் இளம் வருகையைப் பற்றி உற்சாகத்தை ஏற்படுத்தவேண்டும்

வார்த்தைகளில் கவனம் தேவை

வார்த்தைகளில் கவனம் தேவை

சில நேரங்களில், நீங்கள் சொல்வது சரியானதுதான் என்றாலும் நீங்கள் ஒரு சின்னஞ்சிறிய குழந்தையை கையாளுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதுமே பேசும் போது கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால், நீங்கள் மூத்த குழந்தையை தீட்டினாலோ , கடிந்து கொண்டாலோ நீங்கள் தீட்டியதற்கு காரணம் சின்னக் குழந்தைதான் என்று தவறாக நினைத்துவிடுவார்கள். அவர்களின் கோபம் சின்ன குழந்தையின் மீது திரும்பிவிடும். வார்த்தைகளில் கவனம் தேவை

புரிய வையுங்கள்

புரிய வையுங்கள்

ஒரு குழந்தையின் வரவு உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டுவரும் , இந்த மாற்றங்களோடு நம் குழந்தைகளையும் பிணைத்து அவர்களுக்கு மிகச்சசிறந்ததை நாம் வழங்கவேண்டும், எதுவாக இருந்தாலும் அவர்கள் தனித்து விடப்பட்டவராக உணரக்கூடாது, அவரிடம் அவரது இளவளுக்கு நீங்கள் ஏதாவது தயார்செய்யும்போது மூத்தவரின் உதவியை பெறுங்கள் .இது அவரிடம் உள்ள நேர் மறை எண்ணைகளை அகற்றும் .

நேர்மறை எண்ணங்கள்

நேர்மறை எண்ணங்கள்

உங்கள் மூத்த குழந்தைக்கும் அவரது இளவளுக்கும் இடையே ஏற்படப் போகும் நல்ல நேர் மறை விஷயங்களை பட்டியலிடுங்கள். இது அவர்களுக்கிடையே நல்ல சமாதானத்தையும் இணக்கத்தையும் உண்டாக்கும்.

பெரும் உணர்ச்சிகள்

பெரும் உணர்ச்சிகள்

இப்போது, நீங்கள் உங்கள் மூத்த குழந்தை தனது சிறிய உடன்பிறப்பை ஏற்றுக்கொள்ள எளிதாக்கும் பொருட்டு முடிந்தவரை ஒரு நல்ல அடித்தளத்தை அமைக்க வேண்டும். ஆனால் சில நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் அதனால் ஏற்படும் உணர்வுகள் எல்லா தயாரிப்புகளுக்கும் அப்பால் இருக்கும். அச்சமயங்களில் நீங்கள் கோபப்பட்டு உங்கள் மூத்த குழந்தையை பயமுறுத்தக்கூடாது, உணர்ச்சி என்பது அன்பின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். உங்கள் உணர்வுகள் மகிழ்ச்சிக்கும் அன்பிற்கும் வழிகாட்டுபவராக இருக்கவேண்டும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reassuring Your First Born That You Won't Love Your Newborn More

would be different when compared to that of your first time. Mainly, because you would already have your firstborn at home.
Story first published: Monday, April 23, 2018, 17:06 [IST]
Desktop Bottom Promotion