For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு சளி பிடிச்சா இனி டாக்டர் வேண்டாம்… வெறும் புதினா போதும்…

குழந்தைகளுக்கு உண்டாகிற சில தீராத சளி மற்றும் ஜலதோஷப் பிரச்னைகளுக்கு வீட்டிலேயே மேற்கொள்ளப்படும் சில பாரம்பரியமான முறைகள் சிறந்த தீர்வை அளிக்கும்.

By Gnaana
|

ஸ்கூலுக்கு போகும் பிள்ளைகளாக இருந்தாலும், பிறந்து சில ஆண்டுகளேயான குழந்தைகளானாலும், அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் ஒரு உடல்நல பாதிப்பு, சளி மற்றும் ஜலதோசம்.

health

எவ்வளவு கவனமாக பார்த்துக்கொண்டாலும், குழந்தைகளுக்கு வருடத்துக்கு நான்கைந்து முறை, சளி போன்ற சுவாச பாதிப்புகள் ஏற்பட்டுவிடுகின்றன. இதை சரியாக்கி, குழந்தைகளின் ஆரோக்கியத்தை எப்படி காப்பது? இதற்காக, மருத்துவமனைக்கு சென்றால், பக்கவிளைவுகள் உள்ள ஊசிமருந்துகள், குழந்தைகளுக்கு பல்வேறு சிரமங்களைத் தந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜலதோஷம்

ஜலதோஷம்

இந்த நிலைகளில், குழந்தைகளுக்கு, மேலை மருத்துவத்தைத் தவிர்த்து, பாதுகாப்பான இயற்கைமருந்துகளின் மூலம், அவர்களின் சீசன் பாதிப்புகளைத் தடுக்கமுடியும். கைக்குழந்தைகளைத் தவிர, அனைத்து குழந்தைகளுக்கும், பக்க விளைவுகள் இல்லாத இயற்கை மருந்துகளை அளித்து, அவர்களின் ஃப்ளூ மற்றும் சளி பாதிப்புகளைத் தடுக்கமுடியும். அவையென்ன இயற்கை மருந்துகள்? வீடுகளில் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்கள்தான் அவை. சக்திமிக்க மூலிகைகளான, மஞ்சள், துளசி, பூண்டு, புதினா, கற்பூரவல்லி போன்றவை மூலம், குழந்தைகளின் சளி, ஜலதோச பாதிப்புகளை, விரைவில் குணமாக்க முடியும். அவற்றின் செயல்முறைகளைப் பார்ப்போம்.

தொற்று கிருமிகளை அழிக்கும் பூண்டு எண்ணை.

தொற்று கிருமிகளை அழிக்கும் பூண்டு எண்ணை.

பனிக்காலங்களில், நிலவும் கடுங்குளிரும், வீட்டின் வெப்பமும் சேர்ந்து, மூக்கின் சுவாச சவ்வுகளை, உலர வைத்துவிடுவதால், சுவாசத்தில் எரிச்சல் ஏற்படுகின்றன. சுவாச சவ்வுகளின் ஈரத்தன்மைகளை அதிகரிக்க சுரக்கும் நீரே, மூக்கடைப்பு போன்ற மூச்சு பாதிப்பு சமயங்களில், மூக்கிலிருந்து நீராக நம்மையறியாமல் வடிந்து, அளவுகடந்த சிரமத்தைத் தந்துவிடுகிறது. ஜான் டொவ்லியார்டு எனும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர், சுவாச பாதிப்புகளைத்தவிர்க்க, சிறந்த கிருமியெதிர்ப்பு ஆற்றல்மிக்க, பூண்டை சிபாரிசு செய்கிறார்.

பூண்டு எண்ணையை, சற்றே சூடாக்கி, காதுபொறுக்கும் சூட்டில், காதில்விட்டு, எண்ணை கீழே வடிந்துவிடாமல் இருக்க, பஞ்சை காதில் வைத்துவரவேண்டும். இதுபோல, தினமும், இருவேளைகள் செய்துவர, மூக்கின் சுவாச சவ்வுகள் ஈரப்பதத்தை மீண்டும் அடைந்து, சுவாச கிருமிகளின் பாதிப்பிலிருந்து குணமாகி, மூக்கிலிருந்து நீர்வடிதல், சளிபோன்ற ஜலதோஷ பாதிப்புகள் விலகி, குழந்தைகள் முகமலர்ச்சியுடன், விளையாடுவார்கள், என்கின்றனர் மருத்துவர்கள்.

புதினா எண்ணை

புதினா எண்ணை

சில துளிகள் புதினா எண்ணையோடு தேனைக் கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்துவர, சளி மூக்கடைப்பு மற்றும் ஒவ்வாமை, அழற்சி போன்ற பாதிப்புகள் இருந்த இடம் தெரியாமல் விலகும்.

யூகலிப்டஸ் மூலிகை.

யூகலிப்டஸ் மூலிகை.

நீலகிரி தைலம் எனும் யூகலிப்டஸ் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தைலத்தை நாம் அனைவரும், சளி ஜலதோச நேரங்களில், முன்பு பயன்படுத்தியிருப்போம். சிலர் நீலகிரி தைலத்தை, குளிக்கும் நீரிலிட்டு குளித்து, உடல்வலி, தலைவலி, போன்ற வேதனைகளில் இருந்து, விடுபடுவார்கள். இத்தனை சிறப்புமிக்க, மூலிகை, குழந்தைகளின், ஜலதோசம் மற்றும் ஜுர பாதிப்புக்ளுக்குத் தீர்வு தராமல் போய்விடுமா என்ன? குழந்தைகளுக்கு சளித் தொல்லையால், மூக்கடைப்பு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்போது, யூகலிப்டஸ் இலைகளை அல்லது யூகலிப்டஸ் தைலத்தை, சில துளிகள் கொதிக்கும் நீரில்விட்டு, போர்வையால் முழுக்க மூடி, குழந்தைகளின் கண்களையும் மூட வைத்து சற்றுநேரம், அந்த தைல வாசனையை, நன்கு மூச்சினுள் இழுக்க வைக்க, மூச்சுத் திணறல் நீங்கி, குழந்தைகள் நன்றாக மூச்சு விட ஆரம்பிக்கும். ஜலதோச பாதிப்புகளும் நீங்கிவிடும்.

காட்னிப் மூலிகை

காட்னிப் மூலிகை

தனிச்சிறப்புமிக்க துளசி மற்றும் கர்ப்பூரவல்லி போன்ற தேவ மூலிகைகளின் வகையில் உள்ள மேலைநாடுகளின் காட்னிப் மூலிகையும், குழந்தைகளின் சளித்தொல்லைகளைத் தீர்க்கும் என்கிறார்கள். காட்னிப் இலைகளை, நீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரை, தேநீர் அல்லது பழச்சாறுகளில் கலந்து குடிக்க, சளியால் ஏற்பட்ட ஜுரம் மற்றும் மூக்கில் ஏற்பட்ட எரிச்சல் நீங்கும். காட்னிப் குடிநீரை, தனியாகவும் குடிக்கலாம். காட்னிப் கிடைக்காதவர்கள், துளசி அல்லது கர்ப்பூரவல்லி இலைகளை நீரில் நன்கு கொதிக்கவைத்து, அந்த நீரை, அவ்வப்போது பருகி வரலாம்.

சமோமிலி பூக்கள்.

சமோமிலி பூக்கள்.

நம்ம ஊரு வெள்ளை சாமந்திப்பூக்கள் போன்று இருந்தாலும், இவை மேலை நாடுகளைக் கொண்டவை. இந்தப்பூக்களை நீரில் கொதிக்கவைத்து, அதை தேநீர் போல மேலைநாட்டினர் குடிக்கின்றனர். இதன்மூலம், மனச்சோர்வு, உடல் அசதி நீங்கி, உற்சாகம் மற்றும் ஞாபக சக்தி அதிகரிப்பை அடைவதாகக் கூறுகின்றனர்.

சமோமிலி பூக்களை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி, குழந்தைகளுக்கு மூலிகைக் குடிநீர் போல கொடுத்துவர, ஜுரம் மற்றும் ஜலதோச பாதிப்புகள் நீங்கிவிடும். குளிக்கும் நீரில், இந்தப் பூக்களை இட்டு காய்ச்சி, அதன் பின் குழந்தைகளை, இந்த நீரில் குளிப்பாட்டிவர, குழந்தைகளின் ஜுரம் மற்றும் ஜலதோஷம் தணிந்துவிடும்.

எசினாசியா மூலிகைப் பூக்கள்.

எசினாசியா மூலிகைப் பூக்கள்.

எசினாசியாவும், சமோமிலி போன்ற அமெரிக்க மூலிகை மருத்துவ மலர்களாகும். மூலிகை ஆய்வாளர் ரோஸ்மேரி, எசினாசியா மூலிகைமலர்கள், ஜலதோசம் போன்ற சுவாச பாதிப்புகளுக்கு, சிறந்த நிவாரணம் அளிப்பதாகக் கூறுகிறார். மேலும், எசினாசியா மூலிகை, கேன்சர் போன்ற தீவிர உடல் பாதிப்புகளைப் போக்கி, உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி, தீர்வளிப்பதாகக்கூறுகிறார். எசினாசியா பூக்களை நீரில் கொதிக்க வைத்து, தேநீராகப் பருகிவர, அது உடலின் வியாதி எதிர்ப்பு ஆற்றலை வலுவாக்கி, சுவாச தொற்றுக்களால் ஏற்படும், ஜலதோச பாதிப்புகளை, நீக்கி, சுவாசத்தை சீராக்குகிறது.

மேர்ஷ்மெல்லோ மூலிகை வேர்கள்.

மேர்ஷ்மெல்லோ மூலிகை வேர்கள்.

குழந்தைகளின் ஜலதோச பாதிப்புகளை அகற்றவல்லது, இந்த அமெரிக்க மூலிகை வேர்கள். வேர்களை நீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரை குழந்தைகள் குடித்துவர, சுவாச பாதிப்புகளால் ஏற்பட்ட நெஞ்செரிச்சல், தொண்டைவலி நீங்கிவிடும். வேர்களின் தூளை, குழந்தைகளின் சிற்றுண்டிகளில் சேர்த்து சாப்பிட வைக்க, பாதிப்புகள் தீரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

natural remedies for kids cold and cough

some traditional home treatments cures kids cold and cough problems.
Desktop Bottom Promotion