For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆட்டிசத்தின் அறிகுறியை வெளிப்படுத்தும் குழந்தையின் பற்கள்

ஆட்டிசம் என்பது குழந்தை பருவத்தில் உண்டாகும் ஒரு மனநலக் கோளாறாக அறியப்படுகிறது. இது ஒரு வகை மன இறுக்கம் ஆகும்.

|

ஆட்டிசம் என்பது குழந்தை பருவத்தில் உண்டாகும் ஒரு மனநலக் கோளாறாக அறியப்படுகிறது. இது ஒரு வகை மன இறுக்கம் ஆகும். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதிலும், பேசுவதிலும் கடினமான சூழ்நிலையை உணர்வார்கள்.

parenting tips

குழந்தைகளின் பற்களை கூர்ந்து கவனிப்பதால், ஆட்டிசத்தின் அறிகுறியை உணர்ந்து கொள்ள முடியும் என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைகளின் பற்களில் கூர்ந்து பரிசோதனை செய்வதன் மூலம், ஆட்டிசத்தின் வேர்களை ஆரம்பத்திலேயே கண்டறிய இயலும்.

ஆட்டிசம்

குழந்தைகள் உடலில், இரண்டு முக்கிய ஊட்டச்சத்துகளான ஜிங்க் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்து எந்த குழந்தைக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என்பதை கணிக்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

"ஊட்டச்சத்து வளர்சிதை மாற்றத்தில் சுழற்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை ஆரோக்கியமான நரம்பியல் வளர்ச்சியில் வெளிப்படையாகக் குறைபாடுள்ளவை என்று அறியப்படுகின்றன. மற்றும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகளில் இவை ஒழுங்கற்றதாக இருப்பதாக அறியப்படுகின்றன என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர்களான பால் கர்டின் கூறினார். சயின்டிபிக் அட்வான்ஸ் என்ற நாளிதழில் இது பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ரசாயன வெளிப்பாட்டின் பதிவு

அவரது குழு "வளர்ச்சியடைந்த சுழற்சிகளிலிருந்து பெறப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் ஒரு குழந்தைக்கு மன இறுக்கம் ஏற்படுமா அல்லது இல்லையா என்பதை கணிக்க கூடிய விதிகளை கண்டறிந்துள்ளதாக கர்டின் கூறினார். அவர் நியூயார்க் நகரில் மவுண்ட் சினாய், இகாஹ்ன் மருத்துவப் பள்ளியில் சுற்றுச்சூழல் மருத்துவ உதவியாளர் பேராசிரியராக இருக்கிறார்.

இந்த ஆய்வுக்காக, கார்டின் மற்றும் அவரின் சக ஊழியர்கள், ஆட்டிசம் இருக்கும் குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் பாதிக்கப்படாத குழந்தைகள் ஆகிய இருவருக்கும், ஊட்டச்சத்து மற்றும் நச்சுக் கூறுகளை வெளிகொணர்வதற்கு குழந்தையின் பற்களை பயன்படுத்தினர்.

குழந்தை கருவில் உள்ள நாள் முதல் குழந்தை பருவம் வரை, தினமும் புதிய பல் அடுக்கு உருவாகிக்கொண்டே இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கொடுத்தனர். இந்த வளர்ச்சி வளையங்கள் ஒவ்வொன்றும், உடலை சுற்றியிருக்கும் பல்வேறு ரசாயனக் கலவைகளின் வெளிப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. அவை வெளிபாட்டுப் பதிவை வழங்குகின்றன. லேசர்கள் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் இந்த அடுக்குகளை மாதிரியாக்கி, மரத்தின் வளர்ச்சி வரலாற்றை தீர்மானிக்க ஒரு மரத்தில் வளர்ச்சி வளையங்களைப் பயன்படுத்துவதைப் போலவே கடந்தகால வெளிப்பாடுகளை மீண்டும் உருவாக்க முடிந்தது.

அசாதாரண ஜின்க் மற்றும் தாமிரம் வளர்சிதை மாற்றத்தின் விளைவுகளை தீர்மானிக்க, கர்டின் அணி ஸ்வீடனில் ஒரு இரட்டை குழந்தைகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பற்கள் மீது கவனம் செலுத்துகிறது. ஆட்டிஸத்துடன் உள்ள குழந்தைகளை தங்கள் பொதுவாக வளரும் உடன்பிறப்புகளுடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிடுகையில், பற்களில் செப்பு மற்றும் துத்தநாகம் அளவுகளில் கணிசமான வேறுபாடுகளை கண்டனர்.

இந்த உயிர்வேதியல் அறிகுறிகள் பிறக்கும்போது அல்லது பிறப்பதற்கு முன்பே இருப்பதால், குழந்தை பிறந்த பிறகு நோயறிதல் சோதனை மூலம் உடனடியாக இந்த கோளாறை கண்டுபிடிக்க முடியும். தற்போதுள்ள காலகட்டத்தில் குழந்தை பிறந்து பல ஆண்டுகளுக்கு பிறகு நிர்வகிக்கப்படும் இந்த சோதனை முயற்சி சற்று முன்னதாகவே நிகழ்த்தப்படலாம் என்று கார்டின் கூறுகிறார்.

தீர்மானமான கணிப்பு

இந்த கண்டுபிடிப்பை மேலும் உறுதி செய்வதற்காக, ஆராச்சியாளர்கள் வேறு மூன்று குழுக்களிடம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். ஒரு குழுவினர், நியூ யார்க்கில் உள்ள இரட்டையர்கள் அல்லாத உடன்பிறப்புகள், மற்ற இரண்டு குழுக்களில் உள்ளவர்கள், டெக்சஸ் மற்றும் யு.கேவில் உள்ள எந்த ஒரு தொடர்பும் இல்லாத வெவ்வேறு குழந்தைகள்.

90% துல்லியம் கொண்ட மன இறுக்கம் அபாயத்தை முன்னறிவிக்கும் வகையில் கண்டறியப்பட்ட முதல் ஆய்வு இதுவாகும் என்று ஆராய்ச்சி குழு கூறியது, மற்றும் மன இறுக்கத்தைக் கண்டறிவதற்கான சாத்தியமான புதிய ஆய்வுகளுக்கு இந்த ஆய்வு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம் என்றும் கூறினர்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆய்வின் பொருட்டு, ஆட்டிசம் மனநலக் கோளாறின் முன்கூட்டிய அறிகுறி மற்றும் சிகிச்சைக்கான எந்த ஒரு மருத்துவ உட்குறிப்பு அல்லது பரிசோதனை உடனடியாக நிகழ்த்தப்படவில்லை என்று, கோஹன் குழந்தைகள் மருத்துவ மையத்தில் அபிவிருத்தி மற்றும் நடத்தை சார்ந்த குழந்தைகளின் தலைமை டாக்டர் ஆண்ட்ரூ ஆட்ஸ்மேன் கூறினார்.

ஆரம்ப ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் பல் பரிசோதனைக்கு ஒரு பெரிய தடை இருக்கிறது என்று ஆட்ஸ்மேன் கூறினார்.

இந்த பரிசோதனை குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து முளைத்த பின்பே நடத்தப்படுகின்றன என்று அவர் குறிப்பிடுகிறார். இதன் பொருள் என்னவென்றால், இத்தகைய பல் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் உருவாகியிருந்தாலும் கூட, மருத்துவர்கள் உண்மையிலேயே ஆட்டிசம் பற்றிய அறிகுறிகளை முன்னறிவிக்க அனுமதிக்க மாட்டார்கள், ஏனென்றால் பிள்ளைகள் தங்கள் பற்களை இழக்கத் தொடங்கும் நேரத்திலேயே நோய் கண்டறிதல் மருத்துவ ரீதியாக தெளிவாகிறது. "ஆனால் இந்த புதிய கண்டுபிடிப்பு ஒரு தோல்வி என்று அர்த்தம் கொள்ள முடியாது என்று ஆட்ஸ்மேன் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சியாளர்களின் பல் பரிசோதனை மூலமான ஆட்டிசம் அறிகுறி கண்டுபிடிப்பு , இன்னும் பல புதிய ஆராய்ச்சிக்கு வழி வகுக்கும். இதனால், குழந்தை பிறப்பிற்கு முன்னதாகவே ஆட்டிசம் அறிகுறியை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கும். இதனால் இந்த அறிகுறிகள் முன்னதாகவே அறியப்பட்டு இத்தகைய மனநலக் கோளாறுகள் தவிர்க்கப்படும் என்று கூறுகிறார்.

நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் படி, அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு 68 குழந்தைகளிலும் ஒரு மன இறுக்கம் ஸ்பெக்ட்ரம் கோளாறு கண்டறியப்பட்டது. தென் ஆபிரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை படி, சுமார் 150,000 குழந்தைகள் (0-18) மன இறுக்கம் என்னும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தையின் பற்களைக் கொண்டு, மூளை வளர்சிதை மாற்றத்துடன் தொடர்படைய ADHD மற்றும் இதர நிலைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தேர்விக்கின்றனர்.

English summary

Baby teeth give clues to origins of autism

A close examination of baby teeth is giving new insight into the roots of autism.
Desktop Bottom Promotion