For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கிறது?

குழந்தைகள் இந்த சமுதாயம், வாழ்க்கை மற்றும் உலகின் விதிகள் இவற்றை புரிந்து கொள்ள கொஞ்சம் அவகாசம் தேவை. பொறுமையுடன் பக்குவமாக அவர்களை அணுக வேண்டும். அதற்கு சில தந்திரங்களை நீங்கள் கையாள வேண்டியிருக்கும்

By Suganthi Rajalingam
|

கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு தான் நம் செல்லக் குழந்தைகள். இந்த உலகத்தில் பிறக்கும் வரை அவர்களுக்கே எதுவுமே தெரியாது. எல்லாம் புதிதாக கற்று தான் அவர்கள் வளரவே ஆரம்பிக்கிறார்கள். அவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

how to handle Tempered Children

அதிலும் பெற்றோர்களுக்கு நிறைய பொறுமையும் அமைதியும் அவசியம். அவர்கள் சீரற்று இருப்பதை நாம் சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகள் இந்த சமுதாயம், வாழ்க்கை மற்றும் உலகின் விதிகள் இவற்றை புரிந்து கொள்ள கொஞ்சம் அவகாசம் தேவை. பொறுமையுடன் பக்குவமாக அவர்களை அணுக வேண்டும். அதற்கு சில தந்திரங்களை நீங்கள் கையாள வேண்டியிருக்கும். அதற்காகத்தான் நாங்கள் சில டிப்ஸ்களை உங்களுக்கு கூறயுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவனத்தை திருப்புதல்

கவனத்தை திருப்புதல்

சில நேரங்களில் குழந்தைகள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பிப்பார்கள். இதை கண்டதும் முதலில் அவர்களின் கவனத்தை திசை திருப்ப முற்பட வேண்டும். அங்கே பாரு அழகான பறவை பறக்குது, பூவெல்லாம் பாரு எப்படி அழகா ஆடுது என்று அவர்களின் கவனத்தை வேற திசையில் செலுத்த வேண்டும். அப்படி செய்ய முயன்றால் அவர்களின் கோபம் குறையத் தொடங்க ஆரம்பித்து விடும்.

நெருக்கமாக கவனித்தல்

நெருக்கமாக கவனித்தல்

ஒவ்வொரு தாயுக்கும் தன் குழந்தை எதற்காக அழுகிறது எப்படி அழுவார்கள் என்பது நல்லா தெரிந்த விஷயமே. அப்படி நீங்கள் அவர்களின் உணர்வுகளை சரியாக புரிந்து வைக்கவில்லை என்றால் அவர்களை நெருக்கமாக கவனியுங்கள். அவர்களிடம் உரையாடுங்கள். நல்ல பழக்க வழக்கங்களை உற்சாகப்படுத்துங்கள். ஏங்கி ஏங்கி அழுத பிறகு கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள். அவர்கள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். எனவே முன்னரே அவர்கள் உணர்வுகளை புரிந்து அதற்கேற்ப அவர்களை தயார்படுத்தி வாருங்கள்.

விதிகளை வளைக்காதீர்கள்

விதிகளை வளைக்காதீர்கள்

சில நேரங்களில் அவர்களின் அடம் பிடித்தலுக்கு இணங்க உங்கள் விதிகளை மாற்றாதீர்கள். பின்னர் அவர்கள் அதையே பிடித்து கொண்டு சாதனையாக நிற்க முயல்வார்கள். உதாரணமாக உங்கள் குழந்தைகள் படிக்கும் நேரத்தில் டிவி பார்க்க கூடாது என்ற விதி இருந்தால் அதை கண்டிப்புடன் பின்பற்றுங்கள். எக்காரணம் கொண்டும் அவர்களின் அழுகைக்கு இறங்கி விதியை தளர்த்தாதீர்கள்.

உதவி செய்யுங்கள்

உதவி செய்யுங்கள்

ஒரு குழந்தை ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டு வளர்ந்து வருகிறது. உங்கள் குழந்தையின் கெட்ட பழக்க வழக்கங்களை மாற்ற அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்களுக்கு பிடித்த பொம்மையின் உதவியுடன் அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். எளிதாக புரியும் வகையில் அவர்களுக்கு சொல்லும் போது அவர்கள் அதை புரிந்து செயல்படுவார்கள். வளர வளர அந்த நல்ல பழக்க வழக்கங்களை மற்ற மனிதர்களிடமும் காட்டி நன்மக்களாக இருப்பார்கள்.

அடிப்பதை நிறுத்துங்கள்

அடிப்பதை நிறுத்துங்கள்

அவர்களின் கெட்ட நடவடிக்கைகளை நீங்கள் அடித்து திருத்தும் போது அவர்கள் உங்களுக்கு பயப்படுவார்கள். ஆனால் உண்மை என்ன இது உங்கள் இருவருக்கிடையே உள்ள உறவை பாதிக்கும். இந்த பயமே காலப்போக்கில் உங்கள் மீது வெறுப்பை உண்டாக்கி விடும். எனவே இதற்கு பதிலாக நல்ல வார்த்தைகளை எடுத்துக் கூறி கெட்ட நடவடிக்கையால் விளையும் பாதிப்புகளை சொல்லி அவர்களை மீட்டெடுங்கள்.

 செயலில் ஈடுபடுத்துங்கள்

செயலில் ஈடுபடுத்துங்கள்

குழந்தைகள் என்றாலே எப்பொழுதும் துறு துறுவென்று விளையாடிக் கொண்டே இருப்பார்கள். எனவே அவர்களுக்கு நிறைய வித்தியாசமான செயல்களை சொல்லிக் கொடுத்து ஊக்குவிங்கள். அவர்களின் திறமையை வளருங்கள். ஓடுதல், ஆடுதல், பாடுதல், வரைதல், ஓவியம் போன்ற திறமைகளை விருப்பமாக்குங்கள். இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடும் போது அவர்கள் கெட்ட நடவடிக்கைகளையும் மறந்து விடுவார்கள். ஒவ்வொரு நாளும் நல்ல எண்ணங்களை அவர்கள் மனதில் விதையுங்கள்.

தொடர்ச்சியான உரையாடல்

தொடர்ச்சியான உரையாடல்

உங்களுக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் உங்கள் குழந்தைகளிடம் பேசுவதற்கு என்று சில நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் தனிமையை உணரும் போது இந்த மாதிரியான கெட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தூண்டப்படுகிறார்கள். எனவே அவர்களின் எதிர்கால கனவுகள், தினந்தோறும் பள்ளியில் நடப்பவைகள், பிடித்தவைகள் என்று அவர்களுடன் உரையாடுங்கள்.

ஆராயுங்கள்

ஆராயுங்கள்

உங்கள் குழந்தையின் கெட்ட நடவடிக்கைக்கு பின்னாடி ஒழிந்திருக்கும் காரணங்களை தேடுங்கள். பொறுமையாக அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை கேட்டு ஆராயுங்கள். பொறுமையாக அணுகும் போது அவர்கள் உங்களிடம் எதையும் மறைக்க மாட்டார்கள். நீங்கள் உணர்ச்சி வசத்துடன் நடந்து கொள்ளும் போது அவர்கள் அதை மறைக்க திட்டம் தீட்டி விடுவார்கள். எனவே ஒரு நண்பன் போல் அணுகுங்கள்.

தவறை உணர்தல்

தவறை உணர்தல்

குழந்தை எதாவது தவறாக நடந்து கொண்டால் அவர்களை தனிமையில் விடுங்கள். இது அவர்களின் தவறை அவர்கள் உணர்ந்து கொள்ள உதவியாக இருக்கும். தன் தவறை உணர்ந்த பிறகு அவர்களாகவே முன்வந்து மன்னிப்பு கோருவார்கள்.

இளம் வயதிலேயே பருவத்தை பயிர் செய் என்பார்கள். உங்கள் குழந்தையின் பருவத்தை நல்ல விதமாக பயிர் செய்து நல்ல மனிதராக மாற்றுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. என்ன பெற்றோர்களே தயாராகுங்கள் உங்கள் குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்காக.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Ways To Handle Short Tempered Children

Actually, children need a lot of time to get used to the life, people and rules of the world. So, we as grownups , need to show a lot of patience. Here I shall present to you some simple tricks to handle a short tempered child if you have one.Divert The Child’s Attention, never bend the rules and so on
Story first published: Wednesday, May 16, 2018, 18:28 [IST]
Desktop Bottom Promotion