For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேப்கின்னா என்ன? எதுக்கு யூஸ் பண்றீங்க! #SexEducation_02

By Volga
|

வார இறுதி நாட்களில் பஸ்ஸில் வருவது எவ்வளவு கொடுமையானது என்பதை அனுபவித்தால் தான் புரியும். டிக்கெட் விலை அதிகம் என்பதையும் தாண்டி எக்ஸ்ட்ரா டிக்கெட் என்று சொல்லி லாபத்திற்காக அதிகமான ஆட்களை ஏற்றிக் கொள்வது, ஒன்பது மணிக்கு வண்டி கிளம்பும் என்று சொல்லி பதினோறு மணி வரையில் பஸ் ஸ்டாண்டை விட்டு கிளம்பாமல் இருப்பது.... அதோடு இறங்குவது கூட பிரச்சனை தான்.

நேராக பஸ் ஸ்டாண்டில் தான் பஸ் நிற்கும் என்று சொல்லி மீண்டும் வீட்டிற்கு இரண்டு பஸ் மாறிப் போகச் சொல்வார்களே.... வருகிற ஒன்றரை நாளுக்கு இத்தனை கலேபரங்கள் தேவையா என்றிருக்கும்.

அக்காளின் மகளுக்குச் சடங்கு.... இரண்டு நாட்களுக்கு முன்னிருந்தே வரச் சொல்ல.... விடுமுறை கிடைக்காது,.. ஃப்ங்க்ஷன் நடக்குறப்போ வந்திடறேன் என்று கெஞ்சி கூத்தாடி பெர்மிஷன் வாங்கிவிட்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன நடக்கிறது :

என்ன நடக்கிறது :

இதோ இன்றைக்கு மாலை விஷேசம். நான் சரியாக இரவு ஒன்பது மணிக்கு ஊருக்கு வந்து இறங்கியிருக்கிறேன். எப்படியும் வீட்டிற்குள் நுழைய பத்து மணியாகிவிடும். என்ன நடக்கிறது என்று நீங்களே பாருங்கள்.

9.50க்கு வீட்டில் நுழைய அம்மா தான் கதவைத் திறந்தார். மகாராணிக்கு இப்போ தான் நேரம் கிடச்சதோ.... சாய்ந்தரம் ஆறு மணிக்கு ஃபங்கஷனுக்கு பத்து மணிக்கு வர்ற என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.

கோபக்கார கிளி :

கோபக்கார கிளி :

அக்காவுக்கு பயங்கர கோபம். பேசவேயில்லை, அதைவிட இவ்விழாவின் நாயகி தான் உள்ளறையில் இருந்து என்னைப் பார்த்து டூ விட்டுக் கொண்டிருந்தாள். அடிக்கிளியே இன்னக்கி சேலை கட்டினாயா டீ என்று அவளை கட்டிப்பிடிக்கப் போக விடுச் சித்தி.... நீ பேட் கேர்ள் ஒண்ணும் வேணாம் போ என்று என்னை விளக்கி விட்டாள். நானும் விடாப்பிடியை அவளை இறுக்கி பிடிக்க அவள் அலறினாள்.

டைகர் பாய் :

டைகர் பாய் :

எங்களின் சத்தத்தை கேட்டு அவளின் தம்பி ஓடிவந்து விட்டான். சித்தி என்று என் முதுகில் ஏறிக் கொள்ள அக்கா மகளை விட்டு விட்டு மகனை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தேன்.

அந்த வீட்டில் அவனுக்கு மட்டும் தான் என் மீது கோபமில்லை. ஏனென்றால் அவனுக்கே இதில் ஏகப்பட்ட கம்ப்ளைண்ட் இருந்தது.

அம்மா மாதிரி :

அம்மா மாதிரி :

ஆறிப்போன காளாண் பிரியாணியும் ஸ்வீட்ஸும் வைத்துக் கொடுத்தாள் அம்மா. சாப்பிட்டுக் கொண்டே டைகர் பாயிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

என்னடா பண்ணாங்க உங்க அக்காவ இன்னக்கி?

சித்தி அவ அம்மா மாதிரி சேலையெல்லாம் கட்டி அவ்ளோ பூ, ஜுவல் எல்லாம் போட்டுகிட்டு போஸ் கொடுத்தா தெரியுமா? வர்றவங்க எல்லாரும் ஸ்வீட்ஸ் அவளுக்கே கொடுத்தாங்க... பாட்டி கூட அவளுக்கு தான் ஜூஸு ஸ்நாக்ஸ்னு கொடுத்துட்டே இருந்தாங்க. என்னைய யாருமே கண்டுக்கவேயில்ல.

அச்சோ.... உன்கிட்ட யாருமே பேசலையா? சித்தி தான சூப்பர் நேர டைகர் பாய்கிட்ட பேச வந்திருக்கேன் என்று கொஞ்ச கையை தட்டிவிட்டான். போ நீயும் பேட் ஈவ்னிங் வராம நைட் வந்திருக்க

உன்னைப் பார்க்கவே :

உன்னைப் பார்க்கவே :

சாய்ந்தரம் வந்திருந்தா உன்ன இப்டி கொஞ்ச முடியாது . நிறைய பேர் வந்திருப்பாங்க நீயும் உன் பிரண்ட்ஸ் கூட விளையாடிட்டு இருப்ப அதான் எல்லாரும் போனதுக்கு அப்பறம் டைகர் பாய் தூங்குறதுக்கு முன்னாடி வரணும்னு இப்போ வந்திருக்கேன் என்றேன்..

அவனும் நம்பியவனாக அப்டியா என்று ஆச்சரியமாய் கேட்டான். நம்பிவிட்டான் போல லவ் யூ சித்தி என்று அணைத்துக் கொண்டான்.

 எனக்கும் வேணும் :

எனக்கும் வேணும் :

நானும் அக்கா மாதிரி பிக் பாய் ஆனதும் இப்டி ஃபன்க்ஷன் வைப்பாங்கள்ள அப்போ ஃபைவ் டேஸும் லீவ் போட்டுட்டு வந்திடணும் சரியா?

பாய்ஸுக்கு எல்லாம் இது வைக்கமாட்டாங்கடா என்று சொல்ல.... ஏன் எனக்கு மட்டுமில்ல.. எனக்கும் வேணும் என்று அழ ஆரம்பித்தான். சமாதானப்படுத்தி சரி ஃபன்க்ஷன் அப்போ வரேன் என்று உறுதியளித்தேன். சமாதானவன் அடுத்தக் கேள்வியை வீசினான்.

எப்படிச் சொல்ல :

எப்படிச் சொல்ல :

அது எப்போ வைப்பாங்க? சொல்லு எனக்கு எப்போ பன்க்ஷன் வைப்பாங்க சித்தி என்று கேட்க எனக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.

தங்கம்.... இந்த ஃபன்க்ஷன் பாய்ஸுக்கு வைக்க மாட்டாங்க கேர்ல்ஸுக்கு மட்டும் தான் வைப்பாங்க. அக்கா ஏஜ் அட்டண்ட் பண்ணிட்டால்ல அது நாள ஃபன்க்ஷன் வச்சிருக்காங்க.

 அதீத உதிரப் போக்கு :

அதீத உதிரப் போக்கு :

அவன் சமாதானமாகவில்லை.

சரி வா சித்தி உனக்கு கத சொல்றேன் என்று தூக்கிக்கொண்டேன். இங்க பாரு அவளுக்கு எந்த பேட் கொடுக்கலாம்... ரெண்டு நாள இதக் கொடுத்தேன் அவளுக்கு அன்கம்ஃபர்டபிளா இருக்கு போல சொல்லத் தெர்ல என்று வெவ்வேறு பிரண்டுகளின் பேடை நீட்டினாள் அக்கா.

எப்டி ரொம்ப போகுதா அவளுக்கு....

ஆமா

அப்போ இதெல்லாம் வேஸ்ட் நான் யூஸ் பண்ற பேட் தரேன் நைட்டுக்கு அது தான் கம்ஃபர்ட்டா இருக்கும் என்று என் பேகில் இருந்து எடுத்து நீட்ட ஐ.... எனக்கு என்று பிடுங்கிக் கொண்டான். அவனை அடித்து அவன் கையில் இருந்த பேடை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டாள் அக்கா.

எனக்கு ஏன் வாங்கல :

எனக்கு ஏன் வாங்கல :

அது அக்காவுக்கு.... என்றேன்.

அப்போ எனக்கு ஏன் பேட் வாங்கிட்டு வர்ல....?

அத அக்கா யூஸ் பண்ணுவா நீ என்ன பண்ணுவ?

நானும் யூஸ் பண்றேன் வாங்கித்தா.... இப்பவே என்று கை கால்களை உதறி அழ ஆரம்பித்தான்.

ப்ளீடிங் :

ப்ளீடிங் :

அவனைத் தூக்கிக் கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தேன். ஹேட் யூ... எல்லாரையும் ஹேட் பண்றேன். எல்லாரும் அக்காவுக்குத் தான் ஃபேவர் பண்றீங்க என்னைய யாருக்குமே புடிக்கல என்று கத்தினான்.

பாய்.... அக்காவுக்கு பீரியட்ஸ் சோ ப்ளீட் ஆகும்ல அதுக்காக பேட் கொடுத்திருக்கேன். இந்த பேட் வைக்கலன்னா ட்ரஸ் எல்லாம் ஆகி ஷேம்... ஷேம் ஆகிடும் என்றேன்.

பீரியட்ஸ்னா?

எப்படிப் புரியவைக்க :

எப்படிப் புரியவைக்க :

பீரியட்ஸ்.... பீரியட் எப்படிச் சொல்ல என்று யோசித்துக் கொண்டிருக்க அவன் தான் ஏடாகூடமா கேள்வி கேப்பான்னு தெரியும்ல எதுக்கு அவன் கிட்ட வாய விட்ற?

கொஞ்ச நேரம் அழுதுட்டு அவனே சமாதானம் ஆகிடுவான் சும்மா தேவையில்லாதத குழந்தைகிட்ட பேசிட்டு இருக்காத போ என்று அம்மா அதட்டினார்.

அவனுக்கு முகம் சுருங்கிப் போனது.

 வாட்சப் :

வாட்சப் :

அந்நேரம் பார்த்து வாட்சப் நோட்டிவிக்கேஷன் சத்தம் கேட்க ஐடியா வந்தது...

சொல்ல ஆரம்பித்தேன்.... அவன் மட்டுமல்ல குடும்பமே கேட்க ஆயுத்தமானது.

ம்ம்ம்... ஒவ்வொரு மாசமும் நம்ம பாடிக்கு ஒரு மெஸேஜ் வரும். டூ யூ வாண்ட் பேபி? டைகர் பாய் மாதிரி க்யூட்டான பேபி வேணுமான்னு.

யாரு அனுப்புவா?

நேச்சர்..... இந்த இயற்கையே நம்மகிட்ட கேக்கும்.

அதுக்கு எப்டி ரிப்ளே பண்றது?

ஹ்ம்.... நம்ம ரிப்ளே எல்லாம் பண்ண முடியாது. அந்த க்வஸ்டீனுக்கு ஆன்ஸரா நம்ம ஒரு ஃபைல் கொடுக்கணும். அது தான் ஸ்ப்ரம் ஃபைல். ஸ்பர்ம் ஃபைல் இருந்தது தான அதுவாவே யெஸ்னு எடுத்துக்கும். ஸ்பர்ம் ஃபைல் இல்லன்னா ஓகே.... அவங்களுக்கு வேணாம் போலன்னு நினச்சுக்கும்.

 ஒவ்வொரு மாதமும் :

ஒவ்வொரு மாதமும் :

யெஸ் ஆச்சுன்னா பாப்பா பொறந்துருமா?

ஆமா ஒன்பது மாசம் கழிச்சு பாப்பா பொறக்கும்.

நோ சொன்னா?

நோ...ன்னா நோ சொன்னா தான் நமக்கு ப்ளீட் ஆகுது.

முழித்தான். அவனுக்கு இன்னும் சரியாக விளங்கவில்லை......

கேர்ல்ஸ் பாடில யூட்ரஸ்னு ஒரு பார்ட் இருக்கு உள்ள... Ovum இருக்கும். அப்டின்னா கருமுட்டை. ஒவ்வொரு மாசமும் அந்த கருமுட்டை முழுசா வளர்ந்ததும் தான் நமக்கு யூ வாண்ட் பேபின்னு ஃக்வஸ்டீன் வரும். நோன்னதும் அந்த கருமுட்டை உடஞ்சிடும்.

எவ்ரி 28 டேஸ் அந்த கருமுட்டை வளர்ந்துரும் .சிலருக்கு முன்ன பின்ன ஆகலாம். அதாவது எவ்ரி மன்த் இது நடக்கும்.

ஆர் யூ ஓகே மம்மி :

ஆர் யூ ஓகே மம்மி :

அப்டி உடையும் போது வெஜைனா வழியா ப்ளீடிங் ஆகும். அதுனால தான கேர்ல்ஸ் அந்த டைம்ல பேட் யூஸ் பண்றாங்க அந்த ப்ளட்ட பேட் அப்டியே அப்சேர்வ் பண்ணிடும்.... 3 டூ 5 டேஸ் இந்த ப்ளீடிங் இருக்கும் அப்பறம் நார்மல்.

இந்த 5 டேஸ்ல வயித்து வலி, தலைவலி, டென்சன், கோபம் எல்லாம் இருக்கும் எதக்கேட்டாலும் எரிச்சலா இருக்கும். ரொம்ப டையர்டா இருக்கும். என்று சொல்ல சொல்ல அவன் அம்மாவை பார்த்துக்கொண்டிருந்தவன் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக் கொண்டான்.

அழும் குரலில் ஆர் யூ ஒகே மம்மி.... என்றான்.

ஸ்பர்ம் :

ஸ்பர்ம் :

ஓரளவுக்கு பெண்களின் மாதவிடாய்ப் பற்றிய தெளிவு அவனுக்கு வந்துவிட்டது.

இந்த யூட்ரஸ் கேர்ல்ஸுக்கிட்ட தான் இருக்கு சோ.... பீரியட்ஸும் கேர்ல்ஸுக்குத் தான் வரும்.

அப்போ பாய்ஸ் கிட்ட ஒண்ணுமேயில்லையா?

ஏன் இல்ல.... ஃபர்ஸ்ட் ஒரு ஸ்பர்ம் ஃபைல் சொன்னேனே.... அது பாய்ஸ் கிட்ட தான் இருக்கு அந்த ஃபைல் பாய்கிட்ட இருந்து தான் கேர்ல்ஸுக்கு கிடைக்கும்.

அப்டியா? என்று ஆச்சரியத்துடன் கேட்டான். அப்டினா என்ன??? அது எப்டி கேர்ல்ஸுக்கு கொடுக்குறது என்று ஆயுத்தமாக...... இந்தக்கதய சித்தி நெக்ஸ்ட் டைம் வரும் போது சொல்றேன் என்று அப்போதைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்தேன்.

- தொடரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what is Periods?

Starting early with age-appropriate information about sex is a good idea.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more