For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் பொய் சொல்வதை தடுப்பது எப்படி ?

குழந்தைகள் பொய் சொல்வதை தடுப்பது எப்படி என கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தை நல்ல குழந்தையாக வளர வேண்டும் ஆசை இருக்கும். குழந்தைகள் செய்யும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். அதில் ஒன்று பொய் சொல்வது. குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. நிஜங்கள் பற்றி சிந்திதல்

1. நிஜங்கள் பற்றி சிந்திதல்

குழந்தைகளுக்கு கற்பனை உணர்வு இருப்பது சிறந்தது தான். ஆனால் நாம் இருக்கும் சூழ்நிலைக்கு எது ஏற்றது. நமக்கு எது சாத்தியம், எது சாத்தியம் இல்லை என்ற உண்மைகளை புரிய வைக்க வேண்டியது அவசியம்.

2. நீங்களே கற்பிக்காதீர்கள்

2. நீங்களே கற்பிக்காதீர்கள்

பெற்றோர்கள் தங்களை அறியாமலேயே குழந்தைகளை பொய் சொல்ல பழக்கப்படுத்துகிறார்கள். வீட்டில் இருந்து கொண்டே யாராவது கேட்டால் அப்பா இல்லை என்று சொல் என்று நீங்களே குழந்தைகளுக்கு பொய் சொல்ல பழக்கப்படுத்தாதீர்கள்.

3. குழந்தைகள் முன் பொய் வேண்டாம்

3. குழந்தைகள் முன் பொய் வேண்டாம்

குழந்தைகள் முன் நீங்கள் யாரிடமும் பொய் சொல்ல வேண்டாம். அதை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

4. பெரிய தண்டனைகள் வேண்டாம்

4. பெரிய தண்டனைகள் வேண்டாம்

குழந்தைகள் பொய் சொன்னால், அதை மீண்டும் செய்யாமல் தடுக்க பெற்றோர்கள் அடிப்பது சூடு வைப்பது போன்ற பெரிய தண்டணைகளை கொடுக்காதீர்கள். இது அவர்களது மனதில் பெரிய பயத்தை உண்டாக்கிவிடும். பின்னர் அவர்கள் பொய்யை நன்றாக சொல்ல கற்றுக்கொள்வார்கள்.

5. பயத்தை உண்டாக்க வேண்டாம்

5. பயத்தை உண்டாக்க வேண்டாம்

குழந்தைகளுக்கு பொய் சொல்வதால் உண்டாகும் தீமைகளை சொல்லி அவர்களை பயப்படுத்த வேண்டாம். உண்மை சொல்வதால் விளையும் நன்மைகள் பற்றி கூறலாம். நீதிகதைகள் போன்றவற்றை கூறுங்கள்.

6. கண்டிப்புகள்

6. கண்டிப்புகள்

குழந்தைகளிடம் இதை செய்யாதே, அதை செய்யாதே என தொட்டதிற்கு எல்லாம் தடை விதிக்க வேண்டாம். அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். அதிக தடைகளை விதிப்பதும், உத்தரவுகளை போடுவதும் அதை மீற வேண்டிய சூழ்நிலை வந்தால், குழந்தைகளை பொய் சொல்ல வைக்கும்.

7. வாய்மை உணர்த்தும் குறள்கள்

7. வாய்மை உணர்த்தும் குறள்கள்

குழந்தைகளுக்கு உண்மை சொல்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய திருக்குறள்கள் மற்றும் பழமொழிகளை சொல்லி கொடுங்கள். அவர்கள் நல்வழியில் செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும்.

8. கதைகள் எழுதுதல்

8. கதைகள் எழுதுதல்

குழந்தைகளுக்கு நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தெரிய கதைகள் எழுதுதல் மற்றும் சொல்லும் திறனை ஊக்கப்படுத்துங்கள்.

9. கேள்விகள்!

9. கேள்விகள்!

குழந்தைகள் ஒரு தவறு செய்தது உங்களுக்கு தெரிந்தால், அதை நேரடியாக சொல்லி புரிய வையுங்கள். அவர்களது வாயில் இருந்தே உண்மையை வர வைக்க வேண்டும் என்று சாமர்த்தியமான கேள்விகளை கேட்டு அடுக்கு அடுக்காக பொய் சொல்ல வைக்காதீர்கள்.

10. உண்மையை பாராட்டுங்கள்

10. உண்மையை பாராட்டுங்கள்

உங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்துவிட்டு உங்களிடம் உண்மையை கூறினால், செய்த தவறுக்காக அவருக்கு தண்டனை கொடுக்காதீர்கள். உண்மை சொன்னதற்காக பாராட்டுங்கள். அடுத்த முறை இது போன்ற தவறை செய்யக்கூடாது என்று மட்டும் கூறுங்கள், அதுவே போதுமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten ways to Get Your Children to Stop Lying

Here are the ten ways to get your children to stop lying
Story first published: Monday, June 19, 2017, 12:48 [IST]
Desktop Bottom Promotion