For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிந்த கணவன் மனைவியால் அவர்கள் குழந்தைக்கு வரும் பாதிப்புகள் என்ன?

மனக் கவலைகள், அந்நியன் போல் தள்ளி வைக்கப்பட்ட ஒரு உணர்வு போன்றவை குழந்தைகள் இடையே ஏற்படும்

|

நீங்கள் உங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து விவகாரத்து வாங்கும் போது உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் மட்டுமல்ல உங்கள் சின்ன வயசு குழந்தைகள் கூட பாதிப்புக்குக்குள்ளாகின்றன. குழந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் குழந்தைகள் கூட இந்த சூழ்நிலையை கையாள முடியாமல் வெறியில் எதையாவது தூக்கி எறிவது, எரிச்சல் அடைவது, கோபம், குழப்பம், சாப்பிடாமல் அடம் பிடிப்பது, வலிக்குது என்று அழுகுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இதுவே டீன் ஏஜ் வயது குழந்தைகளாக இருந்தால் பள்ளியில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். நல்ல ஒழுக்கமுள்ள புத்திசாலி குழந்தைகள் கூட தவறான செயலில் ஈடுபட தொடங்குகின்றனர். இதனால் உங்கள் குழந்தையின் அழுகைக்கு செவி சாய்க்காவிட்டால் அவர்களின் சுய நம்பிக்கை, சுய தேவைகள் மற்றும் உறவுகளில் ஈடுபாடு போன்றவைகள் எல்லாம் கேள்விக் குறியாக மாறிவிடும் அபாயம் உள்ளது. டீன் ஏஜ் குழந்தைகள் போதை பொருட்கள், ஆல்கஹால் போன்ற தவறான தீய பழக்கங்களை நாடிச் செல்லும் அபாயமும் ஏற்படுகிறது.

கண்டிப்பாக இந்த விவகாரத்து விஷயம் டீன் ஏஜ் குழந்தைகளுக்கும் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் திருமண உறவு பிரிவு உங்கள் குழந்தைகளின் உடல் நலம் மற்றும் மன நலத்தில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை எப்படி கவனமாக கையாளுவது என்பது பொற்றோர்களின் பெரிய பொறுப்புகளாக உள்ளது. எனவே தான் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பதற்காக இக்கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகள் கண்டிப்பாக உங்கள் குழந்தைகளிடம் நல்ல புதிய மாற்றத்தையும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் கொடுத்து செல்லும்.

தனிமை எப்படி உங்கள் குழந்தையின் உணர்வுகளை பாதிக்கிறது

உணர்வுப் பூர்வமான பாதிப்புக்கு வயது ஒரு முக்கியம் இல்லை. பெற்றோர் இருவருக்கிடையேயான விவகாரத்து பிரிவு எல்லா வயது குழந்தைகளையும் வேகமாக பாதிக்கிறது.

இதில் அனிஸ்சிட்டி பிரச்சினைகள் இருந்தால் அதை உடனடியாக கவனித்து அவர்களை பாதுகாக்க வேண்டும்.

How divorce will affect your kids

இழந்த உணர்வு

உங்கள் குழந்தைகளிடம் எதையோ இழந்த உணர்வு ஏற்படும். இது வீட்டில் மட்டுமில்லை வெளியில் இந்த உலகத்தை பார்க்கும் போது கூட தாங்கள் எதையோ இழந்து விட்டதாக நினைத்து மன முடைவார்கள்.

கோபம்

இது ஒரு இயற்கையான விஷயம் தான். உங்கள் குழந்தைகளிடம் யாராவது உங்கள் விவகாரத்து பற்றி பேசினால் உடனே அவர்களுக்கு கோபம் ஏற்படக் கூடும். ஏனெனில் உங்கள் இருவருக்கிடையேயான பிரிவு அவர்களை மனதளவில் பாதிப்படையச் செய்துள்ளது.

குற்றவுணர்வு

உங்கள் இருவருக்கிடையேயான பிரிவுக்கு தாங்கள் தான் காரணமோ என்ற ஒரு குற்றவுணர்வை அவர்கள் தங்களுக்குள் வளர்த்து கொள்வர். அதை நினைத்து தினமும் கவலைபடவும் செய்வர்.

பயம் குடி கொள்ளும்

உங்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரிவால் அவர்கள் ஒரு வித தனிமையை உணர்வார்கள். இதனால் அவர்கள் மனதில் பயம் ஏற்படுகிறது. அவர்களை அரவணைக்க யாரும் இல்லாத பயம் ஏற்படுகிறது.

பாதுகாப்பின்மை

தன்னை விட்டு ஒரு பெற்றோர் விலகிச் செல்லும் போது அவர்கள் ஒரு பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். அவர்கள் விலக்க பட்டு விட்டதாக எண்ணி வருந்துகிறார்கள்.

பரிதாப நிலை

உங்கள் இருவருக்கிடையே சிக்கி தவிக்கும் பரிதாப நிலையை அடைகின்றனர்.

எரிச்சல்

அனிஸ்சிட்டி பிரச்சினைகள் ஏற்படும் வழக்கமாக நடப்பதை விட மிகுந்த எரிச்சலுடன் நடந்து கொள்வர்.

அனிஸ்சிட்டி மற்றும் மன அழுத்தம்

சில குழந்தைகள் அனிஸ்சிட்டி மற்றும் மன அழுத்தம் பிரச்சினைகளுடன் காணப்படுகிறது.

உணர்ச்சி வசத்துடன் நடத்தல்

மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது பெற்றோர்கள் விவகாரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு இடையே வாழும் குழந்தைகள் உணர்ச்சி வசத்துடன் நடந்து கொள்கின்றனர்.

மனக் கவலைகள், அந்நியன் போன்ற உணர்வு

வளரும் குழந்தைகளிடையே உங்கள் விவகாரத்து அவர்களுடைய பழக்க வழக்கங்களை பாதிக்கிறது.%3ugu=

English summary

How divorce will affect your kids

How divorce will affect your kids
Desktop Bottom Promotion