For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு வலி நிவாரண மாத்திரைகளை கொடுக்கலாமா?

can give antibiotic tablets to baby

By Lakshmi
|

சிலர் பெரியவர்களுக்கு காய்ச்சல், தலைவலி போன்றவை வந்தால் கடைப்பிடிக்கும் அதே முறையை குழந்தைகளுக்கும் கடைப்பிடிக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. பெரியவர்களாகவே இருந்தாலும் கூட மருத்துவரிடம் பரிசோதனை செய்த பிறகு தான் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பகுதியில் குழந்தைகளுக்கு வலிநிவாரணி மாத்திரைகள் கொடுக்கலாமா என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாத்திரைகள் கொடுக்கலாமா?

மாத்திரைகள் கொடுக்கலாமா?

குழந்தைகளுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கலாம். ஆனால், அதற்கு முன், குழந்தையின் உடலை தலை முதல் பாதம் வரை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும்.

நோய்க்கான காரணம்

நோய்க்கான காரணம்

குழந்தையின் நோய்க்கான காரணம் என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், எஃப்.டி.ஏ. ஒப்புதல் அளித்த வலிநிவாரணி மாத்திரைகள் குறித்த முழுத் தகவல்கள், அந்த மாத்திரைகளால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை முழுவதுமாக அறிந்த பதிவுபெற்ற மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை மட்டும் குழந்தைகளுக்கு ஏற்ற அளவு கொடுக்கலாம்.

டாக்டர் பரிந்துரை

டாக்டர் பரிந்துரை

சரியான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வலிநிவாரணி மாத்திரைகள், டாக்டர் பரிந்துரைக்காத மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு, சைனஸ் பிரச்சனை, மன அழுத்தம் காரணமாக தலைவலி உண்டாகலாம்.

பாராசிட்டமால்

பாராசிட்டமால்

பாராசிட்டமால் கொடுக்கலாம். வயிற்றுவலி மட்டும் இருந்தால் எந்த இடத்தில் வலி உள்ளது, வலியின் தன்மை ஆகியவற்றை பொறுத்து மாத்திரை கொடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

can give antibiotic tablets to baby

can give antibiotic tablets to baby
Story first published: Wednesday, November 15, 2017, 19:06 [IST]
Desktop Bottom Promotion