For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்களா? அதனைத் தடுக்க இதோ எளிய வழிகள் !

By Hemalatha
|

முதல் ஐந்து வயது வரை அதிக குளிரினால், அல்லது ஆழ்ந்த தூக்கத்தினால் குழந்தைகள் தூக்கத்திலேயே சிறு நீர் கழிப்பார்கள். இது நார்மலான விஷயம்தான்.

பத்துவயதிற்கும் மேலே இருக்கும் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் அது சற்று கவனிக்கப்பட வேண்டிய விஷயம். உடனே மருத்துவரை அணுகி அதற்கு உரிய தீர்வினை நீங்கள் காண வேண்டும்.

சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள் என்னென்ன?

முன்னமே சொன்னது போல் மிகச் சிறிய வயதில் கழித்தால் பெரியதாய் கவலைப்பட தேவையில்லை. வளர்ந்த பின் படுக்கையிலேயே சிறுநீர்கழிப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

home remedies for bed wetting

மூளைக்கு சரியான முறையில் தகவல் அனுப்பாதிருத்தல், சிறு நீர்பாதையில் தொற்று, மன அழுத்தம், நீண்ட நாட்களாய் இருக்கும் மலச்சிக்கல், என பல காரணங்கள் உண்டு. இதற்காக கவலைப்பட தேவையில்லை. வீட்டிலேயே அதனைக் குணப்படுத்தும் எண்ணற்ற மூலிகைகள் நம் சமையலறையில் கொட்டிக் கிடக்கின்றன.

ஆலிவ் எண்ணெய் மசாஜ் :

இது எளிய வழி. ஆனால் அருமையான தீர்வினைத் தரும். ஆலிவ் எண்ணெயை சூடு படுத்தி உங்கள் குழந்தையின் அடிவயிற்றில் தடவுங்கள். தினமும் செய்யலாம். காலை மாலை என இரு வேளைகளிலும் செய்தால் பாஸிடிவான ரிசல்ட் விரைவில் கிடைக்கும்.

பட்டை :

பட்டை எல்லாருக்கும் தெரிந்த மருத்துவ குணங்கள் கொண்ட உணவுப் பொருள். இது படுக்கையில் சிறு நீர் கழிக்கும் குழந்தைகளுக்கு சிறந்த தீர்வு தரும்.

நம் பாட்டி காலத்திலிருந்து இந்த வழி எல்லோராலும் அறியப்பட்டதே. பட்டையை தினமும் வெறும் வாயில் மெல்லச் சொல்லுங்கள். அல்லது பட்டையைப் பொடி செய்து பாலிலோ அல்லது உணவிலோ கலந்து சாப்பிடச் செய்யலாம்.

தினமும் பட்டையை எடுத்துக் கொண்டால், உங்கள் குழந்தை தூக்கத்தில் சிறு நீர் கழிப்பதை எளிதில் மறந்துவிடுவார்கள். வீட்டில் முயன்று பாருங்கள்.

நெல்லிக்காய் :

பெரிய நெல்லிக்காய் அட்டகாசமான தீர்வை தரும். நெல்லிக்காயுடன் சிறிது தேனையும், மிளகுப் பொடியையும் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன் சாப்பிடச் சொல்லுங்கள் அல்லது தேனில் ஊற வைத்த நெல்லிக்காயையும் அவர்கள் உண்ணலாம். விரைவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை மறந்துவிடுவார்கள்.

களாக்காய் :

களாக்காயில் ஜூஸ் செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அல்லது கெளாக்காயையும் அப்படியே சாப்பிட வைக்கலாம்.

தூங்கப்போகும் முன் அவர்களை சாப்பிட சொல்லுங்கள். விரைவில் தீர்வு கிடைக்கும். கெளாக்காய், சிறுநீரகத்தில் தொற்று இருந்தாலும் அதனை சரி செய்யும்.

வெல்லம் :

அதிக குளிர்ச்சியால் உங்கள் குழந்தைகள் சிறுநீர் படுக்கையிலேயே கழிக்க வாய்ப்புகள் உண்டு. வெல்லம் உடலிற்கு சூட்டினை அளிக்கிறது. ஆகவே இதனை உண்ணும்போது, சிறு நீர்பையில் சிறுநீர் கழிக்கச் செய்யும் உந்துதல் ஏற்படாது.

வெல்லத்தை சர்க்கரைக்கு பதிலாக பாலில் கலந்து குடிக்கச் செய்யலாம். வெல்லதுடன் எள்ளை கலந்து உண்டாலும் நல்ல தீர்வினை அளிக்கும். வெறுமனே சாப்பிடவும் தரலாம். சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கச் செய்ய வேண்டும் மறக்காதீர்கள்.

எல்லா வகையான உணவுகளிலும் வெல்லத்தை கலந்து கொடுப்பது உகந்த பலனைத் தரும். இந்த டிப்ஸ் தினமும் செய்தால் நீங்கள் மாற்றத்தை காண்பீர்கள்.

வளர்ந்த பின் சிறு நீர் படுக்கையில் கழிப்பது, குழந்தைகளுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மையை தரும். வெளியில் எங்கும் செல்ல வெட்கப்படுவார்கள். சொல்லவும் முடியாது.

ஆகவே விரைவில் அதற்கு தீர்வு காண மேற்கூறிய எல்லா வழிகளுமே உங்களுக்கு பெட்டர் ரிசல்ட் தான் தரும். முயன்று பாருங்கள் பெற்றோர்களே!

English summary

home remedies for bed wetting

home remedies for bed wetting
Desktop Bottom Promotion