For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் பால் பொருட்கள்!!!

By Maha
|

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியப் பின்னர், அவர்களுக்கு பாலைத் தவிர, இதர பால் பொருட்களைக் கொடுக்கலாமா? கூடாதா? என்ற குழப்பம் பலரது மனதில் எழும். ஆனால் குழந்தைகளுக்கு வேண்டிய எனர்ஜி மற்றும் இதர சத்துக்கள் பால் பொருட்களில் தான் அதிகம் உள்ளது என்பது தெரியுமா? ஆம், குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியில் பால் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே அத்தகைய பால் பொருட்களை குழந்தைகளின் உணவில் சேர்க்க யோசிக்க வேண்டாம். இதனால் அவர்களுக்கு கால்சியம், புரோட்டீன் மற்றும் கொழுப்புக்கள் போன்றவை கிடைக்கும்.

கொழுப்புக்கள் என்றதும் பயப்பட வேண்டாம். ஏனெனில் இதில் உள்ள கொழுப்புக்கள் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் குறைந்த கொழுப்புள்ள பாலைத் தான் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அதிக கொழுப்புள்ள பாலைக் கொடுத்தால், அது குழந்தைகளுக்கு தீங்கை விளைவிக்கும். அதுமட்டுமின்றி, வைட்டமின்களில் பி மற்றும் பி12 ஆகியவையும் நிறைந்துள்ளன.

சரி, இப்போது குழந்தைகளுக்கு பால் பொருட்களில் எவற்றையெல்லாம் கொடுத்தால் நல்லது என்று பார்ப்போம். குறிப்பாக பால் பொருட்களைக் கொடுக்கும் போது, அது சுத்தமான பால் பொருட்களாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அதுவே அவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதே சமயம் அளவுக்கு அதிகமாகவும் பால் பொருட்களைக் கொடுக்கக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைந்த கொழுப்புள்ள பால்

குறைந்த கொழுப்புள்ள பால்

பால் கொடுக்கும் போது குறைந்த கொழுப்புள்ள பாலைக் கொடுக்க வேண்டும்.

சீஸ்

சீஸ்

பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். பொதுவாக சீஸ் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஆகவே இதனை உணவுகளில் சேர்த்துக் கொடுக்கலாம். ஆனால் அதிகப்படியான உப்பு உள்ள சீஸைக் கொடுக்க வேண்டாம்.

வெண்ணெய்

வெண்ணெய்

வெண்ணெயில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே கடைகளில் விற்கப்படும் வெண்ணெயை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே செய்து கொடுப்பது சிறந்தது.

தயிர்

தயிர்

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் தயிர். மேலும் தயிரில் கால்சியம் மற்றும் ப்ரோ-பயோடிக் பாக்டீரியா உள்ளது. ஆகவே இதனைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

நெய்

நெய்

நெய் பிடிக்காதோர் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் குழந்தைகளுக்கு நெயின் சுவை பிடிக்கும். ஆகவே அவர்களது உணவில், அவ்வப்போது நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலும் வீட்டில் செய்த நெய் என்றால் இன்னும் சிறந்தது.

லஸ்ஸி

லஸ்ஸி

தயிரால் செய்யப்படும் ஒரு உணவுப் பொருள் தான் லஸ்ஸி. ஆகவே தயிரை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு தயிரை லஸ்ஸியாக செய்து கொடுக்கலாம்.

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீம்

கடைகளில் விற்கப்படும் ஐஸ் க்ரீமில் சுவைக்காக நிறைய செயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். ஆகவே குழந்தைகளுக்கு கடைகளில் விற்கப்படும் ஐஸ் க்ரீமை வாங்கிக் கொடுக்காமல், வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் ஐஸ் க்ரீம் செய்து கொடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dairy Products For Your Toddler

Studies have shown that increased intake of dairy products may result in health problems in toddlers. It is very important to make sure that you are giving fresh and pure dairy items to them. Here is a list of dairy items which are good for toddlers.
Story first published: Thursday, October 31, 2013, 16:39 [IST]
Desktop Bottom Promotion