For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையின் கண்பார்வையை மேம்படுத்துவதற்கான வழிகள்!!

By Super
|

நம் உடலில் அனைத்து உறுப்புகளுமே முக்கியமானவை. அதிலும் மிக முக்கியமானதென்றால், கண்டிப்பாக கண்களாகத் தான் இருக்க முடியும். ஒருவரை வர்ணிக்கும் போதும், ஓவியம் வரையும் போதும் கூட கண்களிலிருந்து தான் ஆரம்பிப்போம். அப்படிப்பட்ட கண்களை பாதுகாக்க நாம் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வது இயல்பு தான். ஆனால் குழந்தைகளுக்கு? பெற்றோர்கள் தானே பாதுகாக்க வேண்டும்.

குழந்தையின் கண்பார்வையை மேம்படுத்த கண்களில் அறுவை சிகிச்சை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இதற்கு பல இயற்கை வழிமுறைகளும் இருக்கிறது என்பது தான் உண்மை. இயற்கை வழிமுறைகள் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் மிகவும் பதுகாப்பானதாகவும், சிறந்ததாகவும் இருக்கும். மேலும் செயற்கை முறைகளை கையாளுவதை விட, இயற்கை முறை தான் பல நாட்களுக்கு நீடித்து நிலைக்கும். இப்போது குழந்தையின் கண் பார்வையை வளப்படுத்தும் சில வழிகளை பார்ப்போம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தரமுள்ள கருப்புக் கண்ணாடி

தரமுள்ள கருப்புக் கண்ணாடி

வெயிலில் இருந்து குழந்தையின் கண்களை பாதுகாக்க கருப்புக் கண்ணாடியை அணியச் செய்யுங்கள். அவை குழந்தையின் கண் பார்வையை மேம்படுத்த பயன்படும். குழந்தைகள் வெயிலில் அதிக நேரம் இருக்கும் போது, சூரியனில் இருந்து வெளிவரும் புற-ஊதாக் கதிர்வீச்சு கண் பார்வைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தரமுள்ள கருப்புக் கண்ணாடியை வெளியே செல்லும் போது குழந்தைகள் போட்டுக் கொள்கிறார்களா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் காற்று அதிகமாக இருக்கும் காலத்திலும் கண்ணாடியை போட்டுக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். இதனால் தூசியை போல் கண்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற பொருட்களிலிருந்து கண்களை பாதுகாக்கலாம்.

கண்களுக்கு பயிற்சி

கண்களுக்கு பயிற்சி

குழந்தைகளுடன் சேர்ந்து சில கண் பயிற்சியில் ஈடுபட்டு அவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருங்கள். இந்த பயிற்சிகள் கண் பார்வையை மேம்படுத்தும்.

கண்களை கழுவவும்

கண்களை கழுவவும்

குழந்தைகள் காலை எழுந்தவுடன், அவர்களின் வாயை கொப்பளிக்கச் செய்து கண்களை மூடச் சொல்லவும். பின் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு அவர்களின் கண்களின் மேல் தண்ணீரை கொண்டு நன்றாக கழுவச் செய்யவும். முக்கியமாக கண்களை கழுவ பயன்படுத்தும் தண்ணீர் சூடாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

தூக்கம்

தூக்கம்

நீண்ட நேரம் இரவில் விழித்திருப்பது கண்களுக்கு நல்லதல்ல. ஒருவேளை குழந்தை நீண்ட நேரம் விழித்திருந்தால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு கப் தண்ணீர் குடிக்கும் படி செய்ய வேண்டும்.

மலங்கழித்தல்

மலங்கழித்தல்

மலச்சிக்கல் கண் பார்வையை குறைக்கும். அத்துடன் மன அழுத்தம், கவலை, கோபம், ஆர்வம் போன்றவைகளும் கண் பார்வையை பாதிக்கும். அதனால் தினமும் குழந்தையை 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வையுங்கள்.

உணவு முறை

உணவு முறை

தினமும் குழந்தைக்கு பச்சை வேர்க்கோசு மற்றும் காரட் சாறு கொடுங்கள். இதனுடன் சேர்த்து பாலில் ஊற வைத்த பாதாம், ஏலக்காய் பொடி கலந்த பால், பழங்கள், பச்சை காய்கறிகள், போன்றவைகளையும் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். கண்களின் சத்துக்கும், திறனுக்கும் காரணமாக விளங்குவது வைட்டமின் ஏ. அதனால் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ உள்ள உணவுகளை சாப்பிட கொடு்க்கவும்.

விளையாட்டில் ஈடுபடுத்தவும்

விளையாட்டில் ஈடுபடுத்தவும்

குழந்தைகள் மணிக்கணக்கில் தொலைக்காட்சி/கணினி முன் அமர்ந்திருக்கிறார்களா? ஆம் என்றால் குழந்தைக்கு பிரச்சனை ஏற்பட போவது உறுதி. இந்த செயல்கள் யாவும் கண்களை ஓய்வெடுக்கச் செய்யாது. உடம்பில் உள்ள மற்றப் பகுதிகளை போல, ஒரே இலக்கில் 10-15 நொடி வரை கண் பார்வையை செலுத்தினால், கண்களுக்கு அயர்ச்சி ஏற்படும். இந்த அழுத்தம் சிறிது காலம் கழித்து கிட்டப்பார்வை, சிதறல் பார்வை போன்ற பிரச்சனையாக வளர்ந்து நிற்கும். அதனால் அதிக நேரம் கணினி அல்லது தொலைகாட்சி முன் அமர்வதை விட, வெளியில் சென்று விளையாட குழந்தையை அறிவுறுத்தவும்.

காய்கறி மற்றும் பழங்கள்

காய்கறி மற்றும் பழங்கள்

கல்லீரலில் அதிக அளவு நச்சுத்தன்மை இருந்தால், கண் பார்வை மங்கும். இன்றைய நவீன வாழ்க்கை முறை உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பாதிப்பை உண்டாக்குகிறது. இப்போதெல்லாம் குழந்தைகள் அதிகமாக ஜங்க் உணவை அதிகம் சாப்பிடுகிறார்கள். அதனை தவிர்த்து பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண செய்யவும்.

சிரிப்பு

சிரிப்பு

வாய் விட்டு சிரிப்பதால் சந்தோஷத்திற்குரிய ஹார்மோன்கள் உற்பத்தியாகும். அதனால் உடம்பில் உள்ள தசைகள் அனைத்தும் அமைதி பெரும். இது கண்களின் தசைகளையும் சேர்த்ததே. அதனால் குழந்தை எந்நேரமும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Ways to Improve Your Kid’s Eyesight

A lot of parents think that eye operation is the only method that can improve the eyesight of their kids. The truth is that there are many natural methods that can improve a child’s eyesight. It is best to use only natural methods because these methods don’t cause any side effects.
Desktop Bottom Promotion