For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டீன் ஏஜ் பிள்ளைகளிடம் ஒற்றர்களைப் போல செயல்படாதீர்கள்!

By Mayura Akilan
|

How to handle anger positively with your teenage kids
பாசம் கொட்டி வளர்த்த பிள்ளைகள் பதின்பருவத்தை எட்டும்போது கொஞ்சம் அடம் பிடிப்பார்கள். பிள்ளைகளின் விலகல் பெற்றோர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும் அவர்களை கண்காணிக்கவேண்டுமே என்ற ஆதங்கத்தில் பெற்ற பிள்ளைகளையே துப்பறிவார்கள் பெற்றோர்கள். இந்த செயல்தான் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையேயான இடைவெளியை அதிகரிக்கிறது. பெற்றோரையே ஒதுக்கும் அளவிற்கு பிள்ளைகள் செல்வதும் இந்த சூழ்நிலையால்தான். எனவேதான் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளிடம் தோழமை உணர்வோடு நடந்து கொள்ளவேண்டும் என்கின்றனர் குழந்தை நல நிபுணர்கள். விட்டுப்பிடித்தால்தான் பிள்ளைகள் நம் வசப்படுவார்கள். நம்முடைய அன்பும், ஆதரவும் அவர்களுக்கு சுதந்திரமான உணர்வை ஏற்படுத்த வேண்டும் அதே சமயம் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் இருக்குமாறு நடந்து கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். டீன் ஏஜ் பிள்ளைகளிடம் கோபப்பட்டு நடந்து கொள்வதை விட அன்பாக நடந்து கொள்ளுங்கள் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். பதின்பருவ வயதுடைய குழந்தைகளின் பெற்றோர்களா? நிபுணர்களின் ஆலோசனைகளை படியுங்களேன்.

அந்தரங்கத்திற்கு மதிப்பளியுங்கள்

என்னதான் உங்கள் குழந்தைகள் என்றாலும் அவர்களின் அந்தரங்கத்திற்குள் எந்த அளவிற்கு நுழையவேண்டும் அதற்கான எல்லைகளை வரையறுத்துக்கொள்ளுங்கள். குழந்தைகளின் அறைக்குள் நுழையும் முன் கதவை தட்டுங்கள்.

ஒற்றர் வேலை வேண்டாமே

நம் பிள்ளைகளின் மீது முதலில் நம்பிக்கை வைக்கவேண்டும். அதை விடுத்து ஆங்காங்கே ஆள் வைத்து துப்பறிவது. குழந்தைகளின் டைரி, இமெயில், செல்போன் போன்றவைகளை செக்கிங் செய்வது போன்றவைகளை தவிருங்கள்.

சுதந்திரத்திரமாக விடுங்கள்

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அவர்களுக்கான உடைகளை அவர்களையே தேர்வு செய்ய விடுங்கள். ஸ்டைலாக ஹேர் கட் செய்து கொள்ள விரும்புகிறார் என்றால் அனுமதியுங்கள். ஏனெனில் அதற்கான விமர்ச்சனத்தை அவர்களே அனுபவிக்கட்டும் அப்புறம் உங்கள் வழிக்கு வருவார்கள்.

பொறுப்புணர்வை கற்றுக்கொடுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு பொறுப்புகளையும், சுதந்திரத்தை எந்த அளவிற்கு கற்றுக்கொடுக்கிறீர்களோ அந்த அளவிற்கு இடைவெளியையும் மதிக்கக் கற்றுக் கொடுங்கள்.

குழந்தைகளின் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் பிள்ளைகளின் அனுமதியின்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பதின் பருவம் என்பது குழப்பமான பருவம். இந்த பருவத்தில் சுதந்திரமும் வேண்டும் அதேசமயம் பெற்றோர்களின் அன்பும் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எனவே அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.

ஆலோசனைகளை கேளுங்கள்

குழந்தைகளாகவே பார்க்காமல் அவர்களையும் தனிமனிதர்களாக பார்க்கவேண்டும். அவர்களிடம் அனைத்து விசயங்களையும் விவாதியுங்கள். அரசியலோ, விலைவாசி உயர்வோ எதுவென்றாலும் பேசுங்கள். அவர்களின் ஆலோசனைகளை கேளுங்கள்.

பதின் பருவத்தை கடப்பது என்பது சிக்கலானதுதான் எனவே முடிந்தவரை அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். குழந்தைகள் உங்களிடம் பேச வரும்போது அவர்கள் கூறுவதை கேளுங்கள். பதின்பருவப் பிள்ளைகளிடம் நீங்கள் எந்த அளவிற்கு நடந்து கொள்கிறீர்களோ அதே அளவிற்கு அவர்களும் உங்களிடம் நடந்து கொள்ளுவார்கள். அப்புறம் உங்களின் அன்பிற்கு அவர்கள் கட்டுப்படுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

English summary

How to handle anger positively with your teenage kids. | டீன் ஏஜ் பிள்ளைகளிடம் ஒற்றர்களைப் போல செயல்படாதீர்கள்!

Everyone gets angry with their kids at some time or another - it’s normal - it’s healthy - it’s a fact of life. Kids know just what buttons to push and they push them! Another positive step to take is to talk openly and honestly to your child about how you are feeling and to release your pent up emotion - you can say something like.
Story first published: Tuesday, October 2, 2012, 12:31 [IST]
Desktop Bottom Promotion