Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு இந்த ஆபத்தான சிறுநீரக பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்காம்... பெண்களே ஜாக்கிரதை...!
கர்ப்பமாக இருப்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான காலகட்டமாகும், ஆனால் இந்த மகிழ்ச்சியான காலம் சில ஆரோக்கிய பிரச்சினைகளையும் அழைத்து வருகிறது. ஒரு பெண் கர்ப்ப காலத்தில் பல ஆரோக்கிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், இதில் மிகவும் முக்கியமானது சிறுநீரக பிரச்சினைகளாகும்.
இந்த உறுப்பு இரத்தத்தில் இருந்து கழிவுப்பொருட்களை வடிகட்டவும், உடலின் திரவ சமநிலையை பராமரிக்கவும் தீவிரமாக செயல்படுகின்றன. கர்ப்ப காலத்தில், தாய் மற்றும் கருவில் இருந்து உருவாகும் இரத்த அளவு அதிகரிப்பு மற்றும் கழிவுப் பொருட்கள் காரணமாக சிறுநீரகங்கள் கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான சிறுநீரகப் பிரச்சினைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs)
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான தொற்றுகளில் இதுவும் ஒன்று. UTI க்கு முக்கிய காரணம் பாக்டீரியாக்கள் ஆசனவாய் வழியாக சிறுநீர் குழாயில் நுழைந்து சிறுநீர் பாதையை பாதிக்கிறது. ஒரு பெண்ணின் நீண்டகால யுடிஐ தொற்று பைலோனெப்ரிட்டிஸுக்கு வழிவகுக்கும், இது ஒரு ஆபத்தான சிறுநீரக தொற்று ஆகும், இது குறைபிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு 50 பெண்களில் 2 பேர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்பம் தரிக்கும் முன் ஒரு பெண்ணுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கும்போது இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இதன் விளைவாக சிறுநீரகங்களுக்கு இரத்த ஓட்டம் குறைந்து வேறு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கடுமையான சிறுநீரகக் காயம் (AKI)
இந்த ஆரோக்கிய நிலை ஏற்படும் போது, சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டத் தவறி விடுகிறது. இது சில மணி நேரங்கள் அல்லது நாட்கள் கூட நீடிக்கும், இது கடுமையான சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது.
சிறுநீரக கற்கள்
கர்ப்பம் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சிறுநீர் பாதை திரவ ஓட்டத்தை குறைத்தல் போன்றவற்றால் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக சிறுநீரின் ஓட்டம் தடுக்கப்படும் பட்சத்தில் இது கடுமையான வலியையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். சிறுநீரக கற்களை அகற்ற மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலமும், உணவில் மாற்றம் செய்வதன் மூலமும் கர்ப்ப காலத்தில் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கலாம்.
ப்ரீக்ளாம்ப்சியா
கர்ப்பத்தின் 20 வாரங்களுக்குப் பிறகு சிறுநீரில் புரதம் அதிகமாக இருப்பது ப்ரீக்ளாம்ப்சியா எனப்படும் ஆபத்தான நிலையின் அறிகுறியாகும். இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும் மற்றும் சிறுநீரக பாதிப்பு மற்றும் எக்லாம்ப்சியா போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த நிலை மோசமடைவதைத் தடுக்க, தீவிரமான கண்காணிப்பு, போதுமான தூக்கம் மற்றும் காஃபின் மற்றும் சோடியம் உட்கொள்ளலைக் குறைத்தல் ஆகியவை அவசியமாகும். ப்ரீக்ளாம்ப்சியாவைத் தவிர்க்க இவை மிகவும் பயனுள்ள வழிகளாகும்.
கர்ப்ப காலத்தில் சிறுநீரக ஆரோக்கியம் குறித்து கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இது சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் நிலை மோசமடைவதைத் தடுக்கும். சிறுநீரகம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கு வழக்கமான பராமரிப்பு அவசியம். இது சிறுநீரக செயல்பாடு, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரின் புரத அளவைக் கண்காணிப்பதை உள்ளடக்கியது.



Click it and Unblock the Notifications
